எளிய தமிழில் IoT 23. திறன்மிகு மானிகள் (Smart Meters)

தொழிற்சாலைகளில் தயாரிப்பைப் பொருத்து மின்சாரம், தண்ணீர், நீராவி, எரிவாயு, அழுத்தக் காற்று, டீசல், உலை எரியெண்ணெய் (furnace oil) போன்ற பொதுப்பயன்களை (Utilities) பெரும்பாலும் குழாய்த்தொடர்  மூலம் பயன்படுத்துவார்கள். தேவையான வேலைகளுக்கு மட்டுமே தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துகிறோமா என்று எப்படித் தெரியும்? கவனமில்லாமல் தேவையற்றுத் திறந்து விடவில்லை என்று எப்படித் தெரியும்? இவற்றுக்கெல்லாம் பயனளவைக் கண்காணித்தல் (Consumption Monitoring) மிக முக்கியம். முதலீடு அதிகம் செய்யாமல் பல இடங்களில் பயனளவைக் கண்காணிக்க IoT இப்பொழுது வழி செய்கிறது.

திறன்மிகு மானி

திறன்மிகு மானி

நிகழ்நேரப் பயனளவைக் கண்காணித்தல்

கசிவு ஏற்பட்டால் உடன் தெரிந்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டால் உணரிகள் மூலமாக உடன் கண்டுபிடித்து விடலாம். அழுத்தக் காற்று, நீராவி போன்றவற்றின் குழாயில் அழுத்தம் திடீரென்று குறைந்தாலே உடன் எங்கோ கசிவு ஏற்படுகிறது என்று தெரிந்துவிடும். நம்முடைய IoT அமைப்பில் ஒரு விதியை எழுதினால் உடனடியாக வால்வை மூடிவிட்டு இடர் அறிவிப்பு மணியை (alarm) ஒலிக்கலாம்.

திறன்மிகு மானிகள்

இவற்றுக்கான மானிகள் கட்டடத்திற்கு உட்பகுதியிலோ அல்லது நிலத்தடியிலோ இருக்கும். அங்கு மின்னிணைப்பு கொடுப்பது கடினம். முன்காலத் தொழில்நுட்பத்தில் மின்கலத்தின் ஆயுள் குறைவு. ஆகவே நடைமுறையில் சாத்தியமில்லை. இப்பொழுது IoT பயன்படுத்தி மின்கலத்தின் ஆயுளை எவ்வாறு பல ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்று பார்த்தோம். இவற்றுக்கு விதிகள் எழுதித் தானியங்கியாகக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேவைப்படும்பொழுது தொலைக் கட்டுப்பாடும் செய்யலாம்.

நன்றி

  1. Smart metering: Making India more energy efficient

இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும்!

ashokramach@gmail.com

%d bloggers like this: