எளிய தமிழில் Pandas – மின்னூல்

Pandas என்பது Python மொழி மூலம் வெள்ளமெனப் பெருகி வரும் தகவல்களை எளிதில் கையாள உதவுகிறது.

இந்த நூலைப் படிக்க, பைத்தான் மொழியின் அறிமுகம் அவசியம்.

பல்வேறு வகைகளில், வடிவங்களில் தகவல் இருப்பதால், அவற்றில் இருந்து தேவையான விவரங்களைப் பெறுவது கடினம். ஆனால் Pandas மூலம், தகவல்களை எளிதில் உருமாற்றி, அவற்றின் பின் உள்ள விவரங்களைப் பெற்று, முக்கிய முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தலாம்.

சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது ‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023’ ல் இந்த மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Pandas பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

freetamilebooks.com/ebooks/learn_pandas_in_tamil/ என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

ஆசிரியர்
கணியம்

editor@kaniyam.com

%d bloggers like this: