LinkFree எனும் கட்டற்ற இணையபயன்பாடு

இதன்மூலம தொழில்நுட்பவல்லுனர்கள் தங்கள் வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக, ஒரு திறமூல செயல்திட்டத்திற்கு தாம் பங்களித்து, அந்த செயல்திட்டம் எவ்வாறு எங்கு செல்கிறது என்பதற்கான கருத்து தெரிவிக்கின்ற சமூககுழுவின் ஒரு பகுதியாக இருக்கின்ற அதே வேளையில், தங்கள் உள்ளடக்கத்தை காட்சிப்படுத்த ஒரு மையமாக வைத்திருக்க முடியும்.
இதில் நம்முடைய சுயவிவரத்தில் நம்முடைய சமூககுழுவின் ஊடகத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான இணைப்புகள் இருக்கின்றன. இவ்விணைப்பில் காலவரிசை, சான்றுகள் நாம் பங்கேற்கும் நிகழ்வுகளையும் சேர்க்கலாம்.
இதில் நாம் உருவாக்குகின்ற உள்ளடக்கத்தையும் நம்முடைய செயல் திட்டங்களையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தவும். பொதுமக்கள் அதனை கண்டுபிடித்து, பின்தொடரவும் குழுவாகசேர்வதையும் எளிதாக்குகின்றது. இது வெறுமனே இணைக்கப்படுவதற்காகமட்டும் செயல்படுவதில்லை. மாறாக இது நம்முடைய LinkFreeஇன் சுயவிவரத்தைத் தனிப்பயனாக்க நாம் கூடுதலாக சேர்க்கக்கூடிய வசதிகளையும் இதில் காணலாம். நம்மையும் நம்முடைய சமூககுழு கணக்குகள், அவற்றின் உள்ளடக்கத்திற்கான இணைப்புகளையும் இதில் பொதுமக்கள் எளிதாகக் கண்டறியலாம். மேலும் நம்முடைய சுயவிவரம் எத்தனை முறை பார்க்கப்பட்டது ,நம்முடைய இணைப்புகள் எத்தனை முறை சொடுக்குதல் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியமுடியும். இதில் நம்மை பற்றி விவரிக்கின்ற குறிச்சொற்கள் மூலம் நம்முடைய சுயவிவரத்தைக் கண்டறியும்படியும் செய்திடலாம். நம்முடைய சுயவிவரங்களை நம்முடைய பெயரால் மட்டுமின்றி, குறிச்சொற்கள் மூலமாகவும் தேடிடுமாறு செய்திடலாம். பொதுமக்களுடன் இணைவதற்கும் நம்முடைய சமூககுழுவின் வலைபின்னலை மேம்படுததிடுதற்கும் இது ஒரு சிறந்த வழியாக அமைந்துள்ளது. நம்முடைய தனிப்பட்ட QR குறியீட்டைக் கொண்டு பொதுமக்களைச் சந்திக்கும் போது நம்முடைய சுயவிவரத்தைப் பகிர்நது்கொள்வதை எளிதாக்கிடலாம். நம்முடைய வெவ்வேறு சமூககுழுக்கள், இணையதளம், வலைப்பதிவு ,போன்ற பல வற்றிற்கான இணைப்புகளைச் சேர்ப்பதன் மூலம், நம்முடைய சிறந்த உள்ளடக்கத்தை ஒரே இடத்தில் பொதுமக்கள் கண்டறிந்திடுமாறு செய்திடலாம். நம்முடைய சுயவிவரத்தில் கூடுதலான மைல்கற்களைச் சேர்ப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் சிறப்புகளை இதன்மூலம்நிரூபித்திடலாம்.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் github.com/EddieHubCommunity/LinkFree எனும் இணையதள முகவரிக்கு செல்க

%d bloggers like this: