Locale / CLDR என்றால் என்ன?

  • கணினியில் Locale என்றால் என்ன?

en-US விசைப்பலகை என்பதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். மொழி, இடம் சார்ந்து நம் பயன்ப்டுத்தும் சில வாழ்வியல் சார்ந்த விஷயங்கள் மாறும். உதாரணமாக மொழியின் வழக்கு இடம் சார்ந்து மாறும். இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் என்பது போல். நேரம், நாணயம் போன்ற இன்ன பிற விஷயங்கள் இடம் / மொழி சார்ந்து மாறும். இது போல் உள்ளவற்றை கணினியில் பயன்படுத்தவே Locale எனப்படும் வட்டாரத் தகவல்கள் இருக்கின்றன.

 

  • வட்டாரத் தகவல்கள்(Locale Information) எதையெல்லாம் அடக்கும்?

அனைத்து மொழியின் பெயர்கள்- Kannada என்பதை தமிழில் கன்னடம் என்றும் ஹிந்தியில் கன்னட்(Kannad) என மாறுவதால் அனைத்து மொழிகளிலும் அனைத்து மொழிகளின் பெயர்கள் வித்தியாசமானவை, தேவை. அதே போல, அனைத்து நாடுகளின் பெயர், அனைத்து வட்டாரத்தின் நாணயத்தின் பெயர்கள், மாதங்கள், தேதி, எண் முறைகள் (இலட்சம்/கோடி | மில்லியன்/பில்லியன்), நேரவலயம் (timezone), நாள்காட்டிச் சுருக்கங்கள் (ஜன, பிப் … / தி, செ, பு, வி, வெ, ச, ஞா முதலியவை)

  • CLDR என்றால் என்ன?

en:CLDR(Common Locale Data Repositary) என்பது ஒருங்குறி ஆணையத்தின் பொதுவான வட்டார மொழித் தரவுதளம். அனைத்து மொழிகளிலும் உலகிலுள்ள அனைத்து வட்டாரத் தகவல்கள் கொண்டுள்ள தகவல் தளம்.

 

  • இது எதுக்கு பயன்படும்?

பல மொழிகளுக்கும் மென்பொருட்களை உலகமயமாக்குவோர் இதனை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக அனைத்து மொழிகளிலும் வட்டாரம் சார்ந்த தகவல்களை எளிதாகப் பெற முடியும். இதனை முன்னணி கணினி நிறுவனங்கள் பயன்படுத்துவதாக ஒருங்குறி தளம் அறிவிக்கின்றது.

  • தமிழுக்கு இருக்கா?

ஆம்! இருக்கு, ஆனால் சில பிழைகளுடன் இருக்கு. மேம்படுத்த நீங்களும் உதவலாம்!

மேலும் அறிய cldr.unicode.org/

 

~ஸ்ரீகாந்த் லக்ஷ்மணன்

%d bloggers like this: