Mingw-w64 எனும் gccக்கான முழுமையான இயக்க நேர சூழல்

mingw-w64 செயல்திட்டம் என்பது விண்டோ 64-பிட் , 32-பிட் இயக்க முறைமைகளுக்கு சொந்தமான இருமநிரலிகளை ஆதரிக்க gccக்கான முழுமையான இயக்க நேர சூழலாகும். மேலும் இது அசல் mingw.org செயல்திட்டத்தின் முன்னேறிய பதிப்பாகும், இது விண்டோஇயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிகளில் GCC இயந்திரமொழி மாற்றியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது 64 பிட்கள் , புதிய APIகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக 2007ஆம் ஆண்டில் இதை ஒரு கிளைசெயலாக ஆக்கப் பட்டது. அப்போதிருந்து, இது பரவலான பயன்பாட்டினையும் விநியோகத்தையும் பெற்றுவருகின்றது.
ஒவ்வொரு மாதமும் புதிய பங்களிப்பாளர்கள், எளிய நிறுவிகளுடன் மேம்படுத்திடுகி்ன்ற சமூகம் மிகவும் சுறுசுறுப்பாகவும் வரவேற்புடனும் உள்ளன.
தலைப்புகள், நூலகங்கள், இயக்க நேரபயன்பாடு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
இதில்ஒரு மில்லியனுக்கும் அதிகமான தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, உருவாக்கப்பட்டவைகளைக் கணக்கிடவில்லை, மேலும் புதிய Windows APIகளைக் கண்காணிக்க தொடர்ந்து விரிவுபடுத்தப்படுகின்றன.
Windows இல் குறியீட்டை இணைப்பதற்கும் இயக்குவதற்கும் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது.
Winpthreads, C++11 திரியாக்க ஆதரவுக்கான pthreads நூலகம், ஏற்கனவே உள்ள செயல்திட்டத்துடன் எளிமையான ஒருங்கிணைப்பினை கொண்டது.
Winstorecompat, Windows Store உடன் இணக்கத்தை எளிதாக்கும் பணியில் உள்ள வசதியான நூலகத்தினை கொண்டுள்ளது.
விஷுவல் ஸ்டுடியோவுடன் ஒப்பிடும்போது சிறந்த இணக்கமான விரைவான கணித ஆதரவு கொண்டது.
கருவிகள்
gendef: .dll கோப்புகளிலிருந்து விஷுவல் ஸ்டுடியோ .def கோப்புகளை உருவாக்கிடுகின்றது.
• genidl: .dll கோப்புகளிலிருந்து .idl கோப்புகளை உருவாக்கிடுகின்றது.
• widl: .idl கோப்புகளை தொகுத்திடுகின்றது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
மொழிமாற்றியின் கருவிகளிந்தொகுப்பு புரவலர்கள் சொந்தமாக கொண்டுள்ளது
சொந்த TLS அழைப்புபிற்காப்புகுகளை ஆதரிக்கிறது
பரந்த எழுத்து தொடக்கத்தை ஆதரிக்கிறது (-mஒருங்குகுறி)
32-பிட் , 64-பிட் விண்டோவின் i386/x64 ஐ ஆதரிக்கிறது
பல்மொழிநூலக கருவிசங்கிலிகளை ஆதரிக்கிறது
Blender, Opensuse, libav , LibreOffice , libsndfile , libvirt , libvpx , Libxml2 ஆகியன Mingw-w64 ஐப் பயன்படுத்தும் சில செயல்திட்டங்களாகும்
இது (LGPLv2) , எனும்உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பெற்றுள்ளது.மேலும் விவரங்களுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளவும் www.mingw-w64.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

%d bloggers like this: