எளிய தமிழில் VR/AR/MR 23. MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் திறன்மிக்க MR தலையணிகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. பயிற்சிக்கும், நிரல் எழுதி சோதனை செய்து பார்க்கவும் குறைந்த விலையில் தலையணிகள் இருந்தால் வசதியாக இருக்குமல்லவா? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி (HoloKit Cardboard Headset) மற்றும் அரைசான் AR/MR தலையணி (Aryzon AR/MR Headset) சந்தைக்கு வந்துள்ளன. 

ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி

ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி

ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி

ஹோலோகிட் திறன்பேசித் திரை அடிப்படையிலான மிகை மற்றும் கலந்த மெய்ம்மை (AR/MR) காணொளி வாயிலான அனுபவத்திலிருந்து வேறுபட்டது. நீங்கள் நேரடியாகத் தலையணி மூலம் மெய்யுலகத்தைப் பார்க்க முடியும். இந்த மெய்யுலகின் மேல் மெய்நிகர் பொருட்கள் காட்டப்படுகின்றன.

ஹோலோகிட் மென்பொருள் உருவாக்கும் கருவித் தொகுதி (HoloKit SDK)

ஹோலோகிட் SDK என்பது ஹோலோகிட்டிற்கான மிகை மெய்ம்மை (AR) மற்றும் கலந்த மெய்ம்மை (MR) பயன்பாடுகளை உருவாக்க யூனிடி நிகழ்பட ஆட்டப் பொறிக்கான (Unity game engine) செருகுநிரல்கள் (plugins) ஆகும். நீங்கள் எளிதாக AR மற்றும் MR பயன்முறையை மாற்றலாம். இது ஆன்டிராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுடன் வேலை செய்யும். 

அரைசான் (Aryzon) AR/MR தலையணி

மைக்ரோசாஃப்ட் ஹோலோலென்ஸ் அல்லது மேஜிக் லீப் போன்ற விலையுயர்ந்த சாதனங்களின் தேவை இல்லாமல் AR மற்றும் MR  செயலிகளை உருவாக்க முடியும்.

அரைசான் யூனிடி மென்பொருள் உருவாக்கும் கருவித் தொகுதி (Aryzon Unity SDK)

இவையும் ஹோலோகிட் SDK போலவே மிகை மெய்ம்மை (AR) மற்றும் கலந்த மெய்ம்மை (MR) பயன்பாடுகளை உருவாக்க யூனிடி நிகழ்பட ஆட்டப் பொறிக்கான (Unity game engine) செருகுநிரல்கள் ஆகும். இதுவும் ஆன்டிராய்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுடன் வேலை செய்யும். 

யூனிடி நிகழ்பட ஆட்டப் பொறி (Unity game engine)

யூனிடி நிகழ்பட ஆட்டப் பொறி திறந்தமூல மென்பொருள் அல்ல. ஆனால் தனியாரும் மிகச்சிறு நிறுவனங்களும் இலவசமாகப் பயன்படுத்தலாம். 

நன்றி

  1. Holokit Cardboard

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பயிற்சிக்குக் கலந்த மெய்ம்மை

தற்போது அனுபவமிக்க பணியாளர்கள் பயிற்சியளிக்கின்றனர். இன்றைய தலைமுறையோ காணொளி மற்றும் ஊடாடல் முறைப் பயிற்சியையே விரும்புகிறார்கள். வகுப்பறையில் MR உதவக்கூடிய சில வழிகள். மருத்துவப் பயிற்சிக்கு MR.

ashokramach@gmail.com

%d bloggers like this: