nmon எனும் லினக்ஸ் செயல்திறன்கட்டுபாட்டாளர் ஒருஅறிமுகம்

nmon என சுருக்கமாகஅழைக்கப்படும் நைகலின் செயல்திறன் கட்டுபாட்டாளரானது( Nigel’s Performance Monitor) ஒரு சிறந்த திறமூல கருவியாகும் இது புதுப்பிக்கும் புள்ளிவிவரங்களை வினாடிக்கு ஒரு முறைதிரையில் காண்பிக்கின்றது அல்லது பெறப்படும் தரவுகளை பின்னர் பகுப்பாய்வுசெய்து கொள்வதற்காகவும் வரைபடமாக உருவாக்கி ஆய்வுசெய்வதற்காகவும் ஒரு CSV வகை கோப்பில் சேமிக்கின்றது.

இதனுடைய njmon எனும் புதிய பதிப்பானது தற்போது ஏராளமான கருவிகளை பயன்படுத்தும் JSON வடிவமைப்பை வெளியிடுகின்றது.
இதனுடைய வசதி வாய்ப்புகள்பின்வருமாறு இது JSON தரவுகளைச் சேர்ப்பதற்கான பைதான் இன்ஜெக்டர்களை உள்ளடக்கியது InfluxDB , Splunk, njmon AIX, VIOS , Linux ஆகியவற்றை உள்ளடக்கியது, njmonஆனது nmon ஐ விட 100கூடுதலாக மடங்கு புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளது, njmon நிகழ்நேர புள்ளிவிவரங்களை InfluxDB + Grafana ஆகியவற்றின் வழியாக வரைபடங்களாக திரையில் காண்பிக்க அனுமதிக்கின்றது இந்த அமைப்புகளின் நிருவாகி, ட்யூனர், பெஞ்ச்மார்க் கருவி ஆனது ஒவ்வொருமுறையும் முக்கியமான செயல்திறன் தகவல்களைஏராளமான அளவில்நமக்கு வழங்குகின்றது. அவ்வாறு வழங்குகின்ற தரவுகளை இது பின்வரும்இரண்டு வழிகளில் வெளியிடுகின்றது

1.குறைந்த CPU தாக்கத்திற்கான பாதிப்புகளைப் பயன்படுத்திநேரடியாக திரையில்ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் ஒரு முறை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது. இந்நிலையில் பல்வேறு வகையான தரவுகளை இயக்க அல்லது முடக்க விசைப்பலகையில்ஏதேனும் ஒரு விசையை மட்டும் அழுத்தினால் போதும் நம்முடைய பணியை தொடர்ந்து செய்யமுடியும்

1.1 காண்பிக்கும் திரைகாட்சியில் CPU, நினைவகம், வலைபின்னல், வன்தட்டு (சிறியவரைபடத்தில் அல்லது எண்களில்) கோப்பமைவுகள், NFS, முதன்மை செயல்கள், வளங்கள் (லினக்ஸின் பதிப்பெண்ணும் செயலிகளையும்சேர்த்து), மீச்சிறு பாகப்பிரிவினை தகவல்கள் ஆகியவை இதில் அடங்கியிருக்கும்

1.2. இதனுடைய ஏராளமான வெளியீடுகளானவை படத்தில் உள்ளவாறு இருக்கும்

1.3.இதனுடைய nmon16j எனும் புதிய பதிப்பில் பல்வேறு வண்ணங்களில் திரைகாட்சியை வழங்குகின்றது

2.பிற்காலத்தில் பகுப்பாய்வுசெய்துகொள்வதற்காகவும் தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம் என நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்திடுவதற்காகவும் தரவுகளை CSVஎனும் காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட கோப்பில் சேமிததிடுகின்றது.

2.1.இந்த தளத்தில் இதனுடைய nmonchart எனும் வசதியை பயன்படுத்தி கூகுளின் இணையபக்க வரைபடத்தைகூட உருவாக்கமுடியும்

2.2. இந்த nmonபகுப்பாய்வாளரையும் எம்எஸ்எக்செல்விரிதாளினையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி டஜன் கணக்கான வரைபடங்களை ஆய்வுசெய்வதற்காகவும் அல்லது செயல்திறன் அறிக்கையை உருவாக்குவதற்காகவும் தரவுகளை தானியிங்கியாக மேலேற்றுகின்றது

2.3. இத தரவுகளை வடிகட்டவும், அதை ஒரு rrd தரவுத்தளத்தில் சேர்க்கவும் (rrdtool எனப்படும் கட்டணமில்லாமல் கிடைக்கக்கூடிய சிறந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி). இது தரவுகளை .gif அல்லது .png வகை கோப்புகளின் வரைபடமாக்குகிறது மேலும் இணையப்பக்க .html கோப்பாகவும் உருவாக்குகின்றது, பின்னர் நாம் விண்டோஸ் அடிப்படையிலான கணினியில் வைக்கவேண்டாம் என விரும்பினால் AIX இல் தானாகவே உருவாக்கி ஒரு இணையதளத்தில் வரைபடங்களை நேரடியாக வைக்கலாம்.

2.4.நம்முடைய சொந்த ஆய்விற்குபயன்படுத்தி கொள்வதற்காக நேரடியாக rrd எனும் தரவுதளத்தில் அல்லது வேறுதரவுகளின்தளத்திற்குஇது கொண்டுசெல்கின்றது

Red Hat, SUSE, Ubuntu, Fedora, OpenSUSE போன்ற ஒவ்வொரு இயக்க முறைமைக்கும்

Power, Mainframe, arm, x86 or x86_64 ஆகிய ஒவ்வொரு தளத்திற்காகவும் nmon என்பது ஒற்றையான பைனரி ஆக திகழ்கின்றது
கணினியில் இதனை நிறுவுகைசெய்வது மிகவும் எளிதானது அவ்வாறு நிறுவுகை செய்வதற்காக மிகச் சரியான இயங்கக்கூடிய பைனரி கோப்பை தெரிவு செய்து செயல்படுத்துக.
அல்லது நமக்கு தேவையான பதிப்பை / usr / bin / nmon என்றவாறு கட்டளை வரியை உள்ளீடுசெய்த பின்னர் nmon எனதட்டச்சு செய்து nmonஇற்கு மறுபெயரிட்டுகொள்க
இது கட்டணமற்ற கருவியாக நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இது வழங்க தயாராக இருக்கும்போது நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் ஐந்து அல்லது ஆறு கருவிகளை ஏன் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும் சமீபத்தில் nmon16j எனும் இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது அதனையே நம்முடைய அனைத்து தேவைகளுக்காகவும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது .மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் nmon.sourceforge.net எனும் இணையதள முகவரிக்கு செல்க

%d bloggers like this: