OpenRAN என்றால் என்ன

தற்போது உலகெங்கிலும் உள்ள தன்னிச்சையான(arbitrary ) கணினிகளுடன் இணைக்கும் திறன்கொண்ட திறன்பேசியை( smartphone) சொந்தமாக வைத்திருப்பவர்களும் பயன்படுத்து பவர்களும் கண்டிப்பாக இந்த வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்களின் (RAN) பயனாளராவார்கள். நம்முடைய கைபேசி தொடர்பு வழங்குநரால் இந்த RAN வழங்கப்படுகிறது, மேலும் இது நம்முடைய திறன் பேசிக்கும் தகவல் தொடர்பு வழங்குநருக்கும் இடையிலான கம்பியில்லா இணைப்புகளைக் கையாளுகிறது.
நம்முடைய திறன்பேசியில் திறமூல இயக்க முறைமை (ஆண்ட்ராய்டு) இயங்குகின்றது ஒரு திறன்பேசியானது மற்றொரு திறன்பேசியுடன் தொடர்பு கொள்வதற்காக இணைப்பை ஏற்படுத்து வதற்காக முயற்சிக்கின்ற சேவையகமானது லினக்ஸை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது, ஆனால் இவ்விரண்டிற்குமான இணைப்பு ஏற்படுத்துவதற்காக இடையில் ஏராளமான அளவில் தனியுரிமை தொழில்நுட்பங்கள் செயல்படுகின்றன.
பொதுவாக ஒரு வளாக வலைபின்னல் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதல் நமக்கு இருந்தாலும், கைபேசியின் கோபுரத்துடன் இணைப்பைச் சாத்தியமாக்குவதற்காக நம்முடைய திறன்பேசியில் SIM அட்டையைச் செருகியவுடன் அது பற்றிய நாம் அறிந்து கொண்டிருக்கின்ற அடைப்படை செய்தியை தடாலடியாக அப்படியே விட்டுவிடுகின்றோம். உண்மையில், கைபேசியின் கோபுரத்திலும் அதில் கைபேசி களுடனான இணைப்பிற்காக செயல்படுகின்ற அதைச் சுற்றியுள்ள மென்பொருள் வன்பொருள் ஆக்ககூறுகள் அனைத்தும் இன்னும் கூட கட்டுண்ட மென்பொருட்க ளாகவே உள்ளன, நிச்சயமாக இவையே தொலைதொடர்பிற்கான மிகப்பெரிய குறைபாடுகளாக உள்ளன. இங்குதான் OpenRAN என்பது நமக்காக உதவ களத்திற்கு வருகிறது. இந்த OpenRAN என்பது O-Ran Alliance என்பவரின் முன்முயற்சியால் உலகளாவிய கைபேசி இயக்குபவர்கள், விற்பனையாளர்கள் , ஆய்வு நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் ஆகியோர்களின் குழுவான செயல்பாட்டிற்காக தொடங்கப்பட்டது. வானொலி மூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்களின் (RAN)பல்வேறு கூறுகளுக்கு இடையே திறந்த தரநிலைகளை வரையறுப்பதை இந்த OpenRAN என்பதற்கான முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இவை கட்டுண்ட மென்பொருட் களாக இருப்பதால் இப்பொழுது வரையிலும் வெவ்வேறு உற்பத்தியாளர்களின் ஆக்ககூறுகளுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய தன்மை சாத்தியமில்லாமல் இருந்து வருகின்றது.
. இந்நிலையில் வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல் (RAN) என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனதில் எழும் நிற்க.
சுருக்கமாககூறுவதெனில, ஒரு RAN ஆனது கைபேசி சாதனங்களுக்கு கம்பியில்லா இணைப்பை நிறுவுகைசெய்கிறது (உதாரணமாக, திறன்பேசிகள்) பின்னர் அவற்றை தகவல் தொடர்பு நிறுவனத்தின் முக்கிய வலைபின்னலுடன் இணைக்கிறது இதையே .வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்கள்(Radio Access Networks) என்றும் சுருக்கமான பெயராக RAN என்றும் அழைக்கப்பெறுகின்றது .
இந்த சூழலில், ஒரு RAN வாயிலாக செயல்படுகின்ற சாதனங்கள் பயனர் கருவியாக (UE) குறிக்கப்படுகின்றன. இந்த RAN இன் பணிகளை சுருக்கமாக பின்வருமாறு கூறலாம்:
1.பயனர் கருவியினை (UE) அங்கீகரித்தல்
2.பயனர் கருவியினைை (UE) மற்றொரு RAN க்கு ஒப்படைத்தல் (பயனர் கருவியானது (UE) நகர்ந்துகொண்டிருந்தால்)
3.பயனர் கருவியின் (UE)ஒருங்கிணைந்த வலைபின்னலிற்கு இடையில் தரவை முன்னோக்கி அனுப்புதல்
4.கணக்கியல் செயலிகளுக்கான தரவை வழங்குதல் (சேவைகளின் பட்டியல் அல்லது அனுப்புகின்ற தரவு)
5.பல்வேறு சேவைகளுக்கான அணுகுதலை கட்டுப்படுத்துதல்
கட்டற்ற வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்கள்(Radio Access Networks(OpenRAN))
கட்டற்ற (Open)RAN ஆனது பொதுவாக தனியுரிமை ஆக்கூறுகளைக் கொண்டுள்ளது. இது செயல்பாட்டு அலகுகளையும் அவற்றுக்கிடையேயான இடைமுகங்களையும் வரையறுக்கிறது இதனுடைய உறுப்புகள் பின்வருமாறு:
வானொலி அலகு (Radio Unit (RU)): இது அலைவாங்கியுடன்(antenna ) இணைக்கப்பட்டு வானொலி சைகைகளை அனுப்புகிறது, பெறுகிறது, உருப்பெருக்குகிறது ,எண்ணிம மயமாக்குகிறது.

விநியோகிக்கப்பட்ட அலகு (Distributed Unit (DU)): இது PHY, MAC , RLC ஆகிய அடுக்குகளைக் கையாளுகிறது.
மையப்படுத்தப்பட்ட அலகு (Centralised Unit (CU)): இது RRC , PDCP ஆகிய அடுக்குகளைக் கையாளுகிறது.
RAN இன் நுண்ணறிவு கட்டுப்பாட்டாளர் (RAN Intelligent Controller (RIC)): இது RAN இன் உறுப்புகளையும் , வளங்களையும் கட்டுப்படுத்தி மேம்படுத்துதல் செய்கின்றது.
இவ்வலகுகள் அனைத்தும் செந்தர திறந்த இடைமுகங்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வலகுகளை மெய்நிகராக்கி மேககணினி அல்லது விளிம்பு நிலை(edge ) சாதனங்களில் பகிர்ந்து பயன்படுத்தினால், அது மெய்நிகரான வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்( vRAN ) எனப்படும். மென்பொருள் அடிப்படையிலான மெய்நிகராக்க அடுக்கைப் பயன்படுத்தி மென்பொருளிலிருந்து வன்பொருளைத் துண்டிப்பதே இந்த vRAN இன் அடிப்படைக் கொள்கையாகும். ஒரு vRAN ஐப் பயன்படுத்துவது அளவிடுதலில் வன்பொருள் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
அனைவருக்குமான OpenRAN
செயல்பாட்டு அலகுகள் அவற்றுக்கிடையேயான இடைமுகங்களின் வரையறையின்படி, OpenRAN வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து ஆக்ககூறுகளின் இயங்குநிலையை செயல்படுத்துகிறது. இது குறிப்பிட்ட விற்பனையாளர்களின் கைபேசி சேவை வழங்குநர்களுக்கான சார்புநிலையைக் குறைக்கிறது தகவல்தொடர்பு உள்கட்டமைப்பை மிகவும் நெகிழ்வானதாகவும், மீள்தன்மையுடனும் ஆக்குகிறது. இதனுடைய ஒரு பக்க விளைவாக, தெளிவாக வரையறுக்கப்பட்ட செயல்பாட்டு அலகுகள் இடைமுகங்களைப் பயன்படுத்துவதில் புதுமையையும் போட்டியையும் உண்டாக்குகிறது. vRAN உடன், நிலையான வன்பொருளின் பயன்பாடு சாத்தியமாக்குகின்றது. மேலே கூறிய அனைத்து நன்மைகளுடனும், ஒரு கட்டற்ற மென்பொருளானது பொதுமக்களாகிய நம்மனைவருக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதற்கு இந்தOpenRAN ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது.

%d bloggers like this: