கட்டற்ற அமைவின் உள்ளகஇணைப்பு (Open Systems Interconnection (OSI)) எனும்வரைச்சட்ட மானது கணினிகளும் சேவையகங்களும் பொதுமக்களும் ஒரு கணினி அமைவிற்குள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான தரநிலையாகும். இது வலைபின்னலின் தகவல் தொடர்புக்கான முதல் நிலையான மாதிரியாகும் இது 1980 களின் முற்பகுதியில் அனைத்து பெரிய கணினியாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. OSI மாதிரியானது வலைபின்னல்களை விவரிப்பதற்கும், தனித்தனி துகள்கள் அல்லது அடுக்குகளில் அவற்றைப் பற்றி சிந்திக்கவும் ஒரு உலகளாவிய மொழியை வழங்குகிறது. OSI மாதிரியானது கணினி அமைப்புகள் வலைபின்னலில் தொடர்பு கொள்வதற்கான பின்வருமாறான ஏழு அடுக்குகளின் மாதிரியை விவரிக்கிறது.
1.பயன்பாட்டு அடுக்கு(Application layer) ,2. விளக்கக்காட்சி அடுக்கு( Presentation layer) , 3.அமர்வு அடுக்கு(Session layer ),4.போக்குவரத்து அடுக்கு( Transport layer) ,5.பிணைய அடுக்கு(.Network layer) ,6.தரவு இணைப்புஅடுக்கு( Data link layer),7.தொட்டுணரக்கூடிய அடுக்கு( Physical layer)
இந்த அடுக்குகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த பணிவழிமுறைகளைக் கொண்டுள்ளன, ஒவ்வொன்றின் சொந்த நெறிமுறைகள் மற்றவற்றிலிருந்து வேறுபடு கின்றன. இந்த கட்டுரை அவ்வடுக்குகளின் ஒவ்வொன்றை பற்றியும் விளக்கங்களை வழங்குகிறது.
பயன்பாட்டு அடுக்கு: பயன்பாட்டு அடுக்கானது மென்பொருளில் செயல்படுத்தப் படுகிறது. இது பயன்பாடுகளுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுவதற்கான அடுக்காகும். ஒரு செய்தியை அனுப்புவதற்கான எடுத்துக்காட்டினை கவனித்திடுக. அனுப்புநர் இந்த பயன்பாட்டு அடுக்குடன் தொடர்புகொண்டு செய்தியை அனுப்புவார். உடன் இந்தபயன்பாட்டு அடுக்கானது, OSI மாதிரியில் உள்ள அடுத்த அடுக்கான, விளக்கக்காட்சி அடுக்கிற்கு செய்தியை அனுப்புகிறது.
விளக்கக்காட்சி அடுக்கு: பயன்பாட்டு அடுக்கில் இருந்து தரவுஆனது இந்த விளக்கக்காட்சி அடுக்கிற்கு வந்துசேருகிறது. உடன் இந்த விளக்கக்காட்சி அடுக்கானது சொற்கள், எழுத்துருக்கள், எழுத்துக்கள், எண்கள் போன்ற பல வடிவங்களில் தரவைப் பெறுகிறது, மேலும் அவற்றை கணினிஇயந்திரம் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய எண்ணிம(binary) வடிவமாக மாற்று கிறது. இந்த செயல்முறையானது மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், ASCII எழுத்துருக்கள் (தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க தரநிலை குறியீடு) விரிவாக்கப்பட்ட இருமநிலை குறியீடு ,பதின்ம பரிமாற்றக் குறியீடாக (EBCDIC) மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட தரவு மேலும்அடுத்தஅடுக்கிற்கு செல்வதற்கு முன், குறியாக்கத் திற்கும் மறைகுறியாக்கத்திற்குமான SSL நெறிமுறையைப் பயன் படுத்தி, குறியாக்கமும் குறியாக்க செயல்முறைகளுக்கும் உட்படுகிறது. விளக்கக் காட்சி அடுக்கு தரவினை சுருக்கி வழங்குகிறது அதைத் தொடர்ந்து வரும் அடுக்குகள் இந்த அடுக்கிலிருந்து தங்களுக்கு அனுப்பப்படும் தரவைக் கவனித்துக்கொள்ளும் என்று கருதுகிறது. தரவுகளை சுருக்குவதிலும் இது ஒரு முக்கியபங்கு வகிக்கிறது. இந்தஅடுக்கின்நோக்கத்திற்கு அப்பாற்பட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து, சுருக்கமானது இழப்பு அல்லது இழப்பற்றதாக இருக்கலாம்.
அமர்வு அடுக்கு: அமர்வு அடுக்கு இணைப்புகளை கட்டஅமைக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. இந்த அடுக்கின் முக்கிய பணி ஒரு அமர்வை நிறுவுகைசெய்வதாகும். எடுத்துக்காட்டாக, இணையஅங்காடி தளத்தில், கணினிக்கும் தளத்தின் சேவைய கத்திற்கும் இடையே ஒரு அமர்வு உருவாக்கப்படுகிறது. இந்த அமர்வுது அடுக்கானது தரவு அனுப்புதல் , பெறுதல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது, அதைத் தொடர்ந்து இணைக்கப்பட்ட அமர்வுகள் நிறுத்தப்படுகின்றது. ஒரு அமர்வு நிறுவுகைசெய்யப்படுவதற்கு முன்பு அங்கீகாரம் செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து முந்தைய அடுக்குகளைப் போலவே, இந்த அமர்வு அடுக்கும், அதன் பணி முடிந்ததும், அடுத்தடுத்த அடுக்குகளால் தரவு சரியாகக் கையாளப்படும் என்று கருதுகிறது.
போக்குவரத்து அடுக்கு: இந்த அடுக்கு தரவுப் போக்குவரத்தையும் தரவு எவ்வாறு மாற்றப்படும் என்பதற்கான அதன் சொந்த நெறிமுறைகளையும் நிருவகிக்கிறது. அமர்வு அடுக்கிலிருந்து இங்கு பெறப்பட்ட தரவு, பிரிவுகள் எனப்படும் சிறிய தரவு அலகுகளாக பிரிக்கப்படுகின்றது. இது செயல்முறை பிரிவு என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் மூலஎண்களும் சேருமிடத்தின் வாயில் எண்கள் , வரிசை எண்களும் கொண்டிருக்கும். வாயில் எண்கள் தரவு அனுப்பப்பட வேண்டிய பயன்பாட்டை அடையாளம் காணுகின்றது. தரவு சிறுசிறு துண்டுகளாக மாற்றப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அவ்வாறு துண்டுகளாக்கப்பட்ட பிரிவுகளை சரியான வரிசையில் மீண்டும் இணைக்க வரிசை எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து அடுக்கு தரவு ஓட்டக் கட்டுப்பாட்டை அல்லது குறிப்பிட்ட நேரத்தில் பரிமாற்றப்படும் தரவின் அளவைக் கவனித்துக் கொள்கிறது. தரவு இழப்பு, தரவு சிதைவு போன்றபல பிழைக் கட்டுப்பாட்டையும் இது கணக்கிடுகிறது. இது செக்சம் எனப்படும் பிழையைக் கண்டறியும் மதிப்பைப் பயன்படுத்துகிறது. அனுப்பப்பட்ட தரவு சரியாகப் பெறப்பட்டதா என்பதைச் சரிபார்க்க போக்குவரத்து அடுக்கு ஒவ்வொரு தரவுப் பிரிவிற்கும் ஒரு checksum ஐ சேர்க்கிறது. தரவு பின்னர் பிணைய அடுக்கிற்கு மாற்றுகின்றது.
பிணைய அடுக்கு: பிணைய அடுக்கானது மற்ற வலைபின்னல்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. பெறப்பட்ட தரவுப் பகுதிகளை ஒரு கணினியிலிருந்து மற்றொரு வலைபின்னல்களில் உள்ள மற்றொரு கணினிக்கு அனுப்பிடும் பணியை இது செயல்படுத்துகிறது. திசைவி என்பது பிணைய அடுக்கில் உள்ளது. பிணைய அடுக்கின் செயல்பாடு தருக்க முகவரி (ஐபி முகவரி) ஆகும். ஒவ்வொரு தரவுப் பொட்டலத்திற்கும் அனுப்புநரின் பெறுநரின் IP முகவரிகளை அது சரியான இலக்கில் பெறுவதை உறுதிசெய்கிறது. பிணைய அடுக்கு பின்னர் தரவு பொட்டலங்களை வழிநடத்துகிறது. அதிக தரவுகள் ஒன்றுசேர்வது நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய, சுமை சமநிலையும் இந்த அடுக்கில் சரிபார்த்திடுகின்றது. அடுத்து, தரவு தரவு இணைப்பு அடுக்கிற்க கொண்டு செல்லப்படுகிறது.
தரவு இணைப்பு அடுக்கு: தரவு இணைப்பு அடுக்கு கணினிகள் ,புரவலர்கள் போன்ற பிற சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. பிணையஅடுக்கில் இருந்து அனுப்புநர், பெறுநரின் ஐபி முகவரிகளைக் கொண்ட தரவுப் பொட்டலங்களைப் பெறுகிறது தொட்டுணரக்கூடிய முகவரிகளுக்கு . பல்லூடக அனுகுதல்கட்டுபாட்டு வரைசட்டவடிவில் அனுப்புபவர் பெறுவபவருக்கு தரவு பொட்டலங்களை ஒதுக்கீடு செய்து அனுப்புகின்ற பணியைச் செய்கிறது
தொட்டுணரக்கூடிய அடுக்கு: இதுவரையில் பார்த்து வந்தது மென்பொருள் அடுக்குகளாகும் .இது கம்பிகள், ஊசிகள், ஏற்பான்கள் போன்ற பலவற்றின் உள்ளமைவு உட்பட ஒரு அமைப்பின் அனைத்து வன்பொருளையும் இயந்திர கூறுகளையும் இந்த அடுக்கு கொண்டுள்ளது. முந்தைய அடுக்குகளால் இங்கு பெறப்பட்ட தரவு 0s , 1s வடிவில் உள்ளது. இந்தஅடுக்கானது பெறப்பட்ட தரவை உருமாற்றம் செய்து கம்பிகள், மின் சமிக்ஞைகள், ஒளி சமிக்ஞைகள் (கண்ணாடி இழைகம்பிகள் போன்றவை) வானொலி சைகைகள் (அருகலை போன்றது) உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உள்ளூர் ஊடகங்களுக்கு அனுப்புகிறது.இந்த அடுக்கு முடிவாக பெறுநரின் செயல்படுகிறது பெறப்பட்ட சைககளை தரவு இணைப்பிற்கு ஒரு வரைச்சட்டமாக மாற்றுகிறது (அதை மீண்டும் பிட்களாக மாற்றுவதன் மூலம்). வரைச்சட்டமானது உயர் அடுக்குகளுக்கு நகர்த்தப்பட்டு, இறுதியில் தேவையான தரவு பயன்பாட்டு அடுக்கின் மென்பொருளில் பெறப்படுகிறது,
முடிவாக: வலைபின்னல் கட்டமைப்பை விவரிக்க அல்லது வலைபின்னல் சிக்கல்களை சரிசெய்ய வேண்டிய போது OSI மாதிரி பேருதவியாக இருக்கும்