பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும் -2

பார்ட்டிசியன் என்றால் என்ன? வன்வட்டிற்கு லினக்ஸ் பெயரிடும் முறை ஆகிய செய்திகளை சென்ற மாதம் வெளிவந்த இதழில் தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழில் பார்ட்டிசியன் பிரித்தல் தொடர்பான செய்திகளைப் பற்றி பார்ப்போம்.

பார்ட்டிசியன் பிரித்தல்:

ஒரு வன்வட்டினை பார்ட்டிசியன் பிரிப்பதற்கு பல்வேறு வகையான கருவிகள் உள்ளன. உதாரணமாக fdisk, Gparted, போன்றவைகள். விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதள வட்டினைக் கூட வைத்து பிரிக்கலாம் ஆனால் நாம் இங்கு அதைப் பற்றி பார்க்கப் போவதில்லை. fdisk மற்றும் Gparted இரண்டினைப் பற்றியும் பார்ப்போம்.

fdisk Tool: (லினக்ஸிற்கு புதிய பயனாளர்கள் யாரும் இதை செய்து பார்க்க வேண்டாம். தகவல் இழப்பிற்கு நிறைய வாய்ப்பிருக்கு.)

இது ஒரு Command Line Tool ஆகும். பெரும்பாலும் அனைத்து லினக்ஸ் வழங்கல்களுடனும் நிறுவப்பட்டே வருகின்றது. நாம் தனியாக நிறுவ வேண்டிய அவசியமில்லை. fdisk கட்டளையினை இயக்குவதற்கு root அனுமதி வேண்டும். root (or) superuser அனுமதியில்லாமல் fdisk கட்டளையினை இயக்க முடியாது. உபுண்டு இயங்குதளத்தை அடிப்படியாக கொண்டு பயன்படுத்துபவர்கள் sudo வை பயன்படுத்திக் கொள்ளலாம்.

fdisk பயன்படுத்துதல்:

fdisk கட்டளையினைப் பயன்படுத்தி நாம் வன்வட்டில் பார்ட்டிசியன்களை உருவாக்கலாம், நீக்கலாம் மற்றும் மாற்றம் செய்யலாம். முனையத்தை(Terminall) திறந்து,

sudo fdisk /dev/sda

எனக் கொடுத்து Enter Key -னை அழுத்தவும்.

பார்க்க படம் -1

படம் – 1

fdisk கட்டளையானது ஒரு எழுத்தை மட்டும் பயனாளரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. என்னென்ன கட்டளைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள m -ஐ அழுத்தி Enter Key -யினை அழுத்தவும்.

பார்க்க படம் – 2

படம் -2

  • வன்வட்டில் ஏற்கனவே என்னென்ன பார்ட்டிசியன்கள் உள்ளது என பார்ப்பதற்கு p -யினை அழுத்தி Enter Key அழுத்தவும். பார்க்க படம் -3

படம் – 3

  • fdisk Command -னை விட்டு வெளியேற q-ஐ அழுத்தவும்.

  • வன்வட்டில் பார்ட்டிசியன்கள் மீது செய்து மாற்றங்களை சேமிக்க w – ஐ அழுத்தவும்.

புதிய பார்ட்டிசியன்களை உருவாக்குதல்:-

புதிய பார்ட்டிசியன்களை உருவாக்க n -ஐ அழுத்தவும்.

Primary, Extended or Logical இவைகளில் எவற்றை உருவாக்கப் போகிறமோ அதை தேர்வு செய்யவும்.

→ புதிய பார்ட்டிசியன் எங்கிருந்து தொடங்க வேண்டும் முடிய வேண்டும் என்பதைக் கேட்கும். தேவையான அளவினை உள்ளிடவும்.

→ Default ஆக மீதமிருக்கும் இடங்களை அப்படியே Assign செய்து வைத்திருக்கும்.

→ உதாரணமாக 80 GB Hard Disk -ல் ஒரு புதிய பார்ட்டிசியன் உருவாக்குகிறமென்றால் 80 GB னை அப்படியே காட்டும். நாம்தான் தேவையான அளவினை கொடுத்துக் கொள்ள வேண்டும்.

→ புதிய பார்ட்டிசியன்கள் அளவினை நாம் MB கணக்கிலும் கொடுக்க முடியும்.

புதிய பார்ட்டிசியனை உருவாகிய பிறகு, மாற்றங்களை சேமிக்க w – அழுத்தி Enter Key -னை அழுத்தவும்.

Gparted: (அனைத்துப் பயனாளர்களும் இதைப் பயன்படுத்தலாம், மிகவும் எளிமையானது)

Gparted னைப் எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி

gnutamil.blogspot.in/2012/02/1110-pdf.html

இந்த இணைப்பில் தமிழில் அனைவருக்கும் புரியும் படி கொடுக்கப் பட்டுள்ளது. படித்து பயன்பெறவும்.

——-

இரா.கதிர்வேல், gnutamil.blogspot.in

கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

%d bloggers like this: