பைதான் – அடிப்படை கருத்துகள் -03

பைதான் அடிப்படை கருத்துகள் -03

 

பின் வரும் உதாரணங்கள் பைதான் interpreter-ல் இயக்கப் படுகின்றன. Input statement-கள் >>> மற்றும் என்று தொடங்குகின்றன.

Output-களுக்கு முன்னால் எதுவும் இருக்காது. இந்த உதாரணங்களை நீங்கள் அப்படியே பைதான் interpreter-ல் டைப் செய்து வேண்டும்.

comment-கள் # என்று தொடங்கும். இவை statement-களின் இறுதியில் அவற்றை விளக்குவதற்காக தரப்பட்டுள்ளன.

உதாரணம்:

# this is the first comment

 SPAM = 1         # and this is the second c 
#            ... and now a third!

STRING = “# This is not a comment.”

 

3.1பைதான் ஒரு திறமையான கால்குலேட்டர்:

இப்போது பைதான் மொழியின் எளிய சில command-களை காண்போம். பைதான் interpreter-ஐ இயக்கி >>> என்ற prompt வரும் வரை காத்திருக்கவும்.

3.1.1எண்கள்:

பைதான் interpreter சிறந்த ஒரு கால்குலேட்டர் ஆகும். ஒரு கணித expression-ஐ தந்தால், அதன் விடையை தரும். expression-ன் syntax நேரிடையானது. +, -, *, / போன்ற க ணித குறியீடுகள், மற்ற மொழிகளில் இருப்பதைப் போலவே பைதான் மொழியிலும் உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட கணித செயல்பாடுகளை ஒன்றிணைக்க ( ) பயன்படுகிறது

>>> 2+2

4

>>> # This is a comment

… 2+2

4

>>> 2+2 # and a comment on the same line as code

4

>>> (50-5*6)/4

5

>>> # Integer division returns the floor:

… 7/3

2

>>> 7/-3

-3

ஒரு variable-க்கு ஏதேனும் ஒரு value-ஐ தருவதற்கு = எனும் குறியீடு பயன்படுகிறது

>>> width = 20

>>> height = 5*9

>>> width * height

900

பல variable-களுக்கு ஒரே மதிப்பை ஒரே சமயத்திலும் தரலாம்.

>>> x = y = z = 0 # Zero x, y and z

>>> x 
0 
>>> y 
0 
>>> z 
0
  தசம எண்களையும்[floating point numbers] பயன்படுத்தலாம். சாதாரண எண்களையும், தசம எண்களையும் சேர்த்து பயன்படுத்தும் போது, 
சாதாரண எண்கள் முதலில் தசம எண்களாக மாற்றப் படுகின்றன. பின்பு அவை பயன்படுத்த்ப் படுகின்றன. 

>>> 3 * 3.75 / 1.5 
7.5 
>>> 7.0 / 2 
3.5 

complex number-களை கூட கையாளும் வசதி உள்ளது. கற்பனை எண்கள் j அல்லது J என்ற எழுத்தோடு சேர்த்து 
பயன்படுத்தப் படுகின்றன. Real Number உடன் சேரும் போது (real + imag j) என்று சொல்ல வேண்டும். 
இவற்றை உருவாக்க complex(real,imag) என்ற ஃபங்ஷனையும் பயன்படுத்தலாம். 

>>> 1j * 1J 
(-1+0j) 
>>> 1j * complex(0,1) 
(-1+0j) 
>>> 3+1j*3 
(3+3j) 
>>> (3+1j)*3 
(9+3j) 
>>> (1+2j)/(1+1j) 
(1.5+0.5j) 

complex number-களில் real எண்ணும் கற்பனை எண்ணூம் தசம எண்களாகவே பயன்படுத்தப் படுகின்றன. 
z என்ற ஒரு complex number-ல் இருந்து Real மற்றும் கற்பனை எண்களை பெற, z.real மற்றும் z.imag என்பவை 
உதவுகின்றன.

>>> a=1.5+0.5j 
>>> a.real 
1.5 
>>> a.imag 
0.5 

சாதாரண மற்றும் தசம எண்களை மாற்ற உதவும் function-களான int(), float() மற்றும் long() போன்றவை, 
complex number-களை மாற்றுவதில்லை. ஒரு complex எண்ணை சாதாரண எண்ணாக மாற்றுவதற்கு வழி எதுவும் இல்லை. 
abs(z) மற்றும் z.real போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தலாம். abs(z) என்பது z-ன் magnitude-ஐ பெற உதவுகிறது. 

>>> a=3.0+4.0j 
>>> float(a) 
Traceback (most recent call last): 
File "<stdin>", line 1, in ? 
TypeError: can't convert complex to float; use abs(z) 

>>> a.real 
3.0 
>>> a.imag 
4.0 
>>> abs(a) 
# sqrt(a.real**2 + a.imag**2) 
5.0 

பைதான் interactive mode-ல் கணக்கீடுகள் செய்யும் போது, கடைசியாக கிடைக்கும் விடை [_] என்ற சிறப்பு variable-ல் 
சேமிக்கப் படுகிறது. இது தொடர்ச்சியாக பல கணக்கீடுகள் செய்யும் பணியை சுலபமாக்குகிறது. 

>>> tax = 12.5 / 100 
>>> price = 100.50 
>>> price * tax 
12.5625 
>>> price + _ 113.0625 
>>> round(_, 2) 
113.06 

_ என்ற variable-ஐ read only ஆக படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாமாக அதற்கு எந்த ஒரு value-ஐயும் 
assign செய்யக் கூடாது. அப்படி செய்தால், bulid-in variable-ஆன _ன் பெயரிலேயே ஒரு local variable உருவாக்கி 
குழப்பத்தை தந்துவிடும். 

3.1.2சொற்கள் (strings): எண்களை கையாள்வது போலவே, பைதான் மொழி சொற்களையும் சிறப்பாக கையாள்கிறது. 
Strings-ஐ single quote அல்லது double quote மூலம் வரையறுக்கலாம். 

>>> 'spam eggs' 
'spam eggs' 
>>> 'doesn\'t' 
"doesn't" 
>>> "doesn't" 
"doesn't" 
>>> '"Yes," he said.' 
'"Yes," he said.' 
>>> "\"Yes,\" he said." 
'"Yes," he said.' 
>>> '"Isn\'t," she said.'
 '"Isn\'t," she said.' 

சில நேரங்களில் சொற்களை பல வரிகளில் சொல்லக் கூடும். அப்போது, அவை அனைத்தையும் ஒரே variable-ல் கூற, 
ஒவ்வொரு வரி இறுதியிலும் , backslash அதாவது \ ஐ சேர்க்க வேண்டும். 

hello = "This is a rather long string containing\n\ 
several lines of text just as you would do in C.\n\ 
Note that whitespace at the beginning of the line is\ 
significant." 

print hello 

மேற்கண்ட உதாரணத்தில் புதிய வரி உருவாக்க \n ம், அதே வரியில் சொற்களை சேர்க்க, \ ம் பயன்படுகிறது. 
இதன் output பின்வருமாறு இருக்கும். 

This is a rather long string containing 
several lines of text just as you would do in C. 
Note that whitespace at the beginning of the line is 
significant. 

சில நேரங்களில் \n மற்றும் \ போன்றspecial character-களையே நமது வரிகளின் content-ஆக பயன்படுத்த நேரிடும். 
அப்போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, நாம் நமது வரிகளை raw string-ஆக குறிப்பிட வேண்டும். 
இதற்கு r என்ற எழுத்தை சொற்கழுக்கு முன் இட வேண்டும். இதில் \n மற்றும் \ போன்றவை அப்படியே, 
எந்த வித மதிப்பும் இன்றி, பயன்படுத்தப் படுகின்றன. 

hello = r"This is a rather long string containing\n\ 
several lines of text much as you would do in C."
 print hello 

மேற்கண்ட உதாரணத்தின் output, இதோ: 

This is a rather long string containing\n\ 
several lines of text much as you would do in C. 

string-களை பயன்படுத்த tripple quote அதாவது “““ அல்லது '''-யும் பயன்படுத்தலாம். 

print """ Usage: thingy [OPTIONS] -h            
Display this usage message -H hostname        
Hostname to connect to """ 

இதன் output: 

Usage: thingy [OPTIONS] -h            
Display this usage message -H hostname        
Hostname to connect to

எப்படி input தரப்படுகிறதோ அதே போல outputம் கிடைக்கிறது.

(…தொடரும்)

 

 

CollabNet எனும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை –

ilugc.in இன் தற்போதைய தலைவர்.

மின்னஞ்சல் : tshrinivasan AT gmail.com

வலை : goinggnu.wordpress.com

%d bloggers like this: