MongoDB என்பதுஒரு பிரபலமான திறமூல ஆவண தரவுத்தளமாகும், செயல் திறன் , அளவிடுதல் ஆகியவற்றிற்கு இது பெயர் பெற்றது. எந்தவொரு நிறுவன பயன்பாட்டிலும் ஏராளமான தரவுகளை நிருவகிக்கும் திறன்கொண்ட தரவுத்தள மாதிரி இதில் உள்ளது. அதனோடு R எனும் நிரலாக்க மொழியில் MongoDBஐ திறம்பட கையாளும் பல தொகுப்புகள் கூடஉள்ளனஎன்ற தகவலை மனதில்கொள்க, தரவுகளைப் பிரித்தெடுக்கவும் கையாளவும்.MongoDBஇன் பின்வருவனவற்றை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய வசதிவாய்ப்புகள் உள்ளன.
உயர் செயல்திறன்: இது உட்பொதிக்கப்பட்ட ஆவணங்களை ஆதரிக்கிறது; எனவே I / O செயல்பாடுகள் குறைவாக உள்ளன. இது குறியீடுகளையும் கையாளுகிறது; எனவே தொடர்புடைய தரவுத்தள அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் அவைகளைவிட இதில் விரைவான வினவலும் இதில் உள்ளது.
வினவலுக்கான சிறந்த வசதிவாய்ப்புகள்: வினவலின் அனைத்து CRUD செயல்பாடு களையும் இது மிகத்திறனுடன் ஆதரிக்கிறது. இது உரையின் தேடல் வசதிகளையும் திரட்டல் வசதிகளையும் கொண்டுள்ளது.
அதிகமாக கிடைக்கும் தன்மை: இது தானாக நகலெடுப்பதன் சிறந்த செயல்பாட்டை வழங்குகிறது; எனவே இதில்கிடைக்கும் தன்மை அதிகமாகும்.
கிடைமட்டமாக அளவிடுதல்: கிடைமட்ட அளவிடுதலைக் கையாள இது மிககூர்மையான வசதியை நமக்கு வழங்குகின்றது.
பல சேமிப்பகங்கள்: நினைவகத்திலும் வன்தட்டிலும் தரவுகளைச் சேமித்திட இது பல சேமிப்பகங்களை ஆதரிக்கிறது.R எனும் நிரலாக்க மொழியில் MongoDB உடன் இணைவதற்கு பல்வேறு இடைமுகங்கள் உள்ளன. இடைமுகங்களுடன், தரவுகளைப் பிரித்தெடுக்கவும் தரவு பகுப்பாய்வு பணிகளைச் செய்யவும் முடியும்.
MongoDB இக்கான R எனும் நிரலாக்க மொழியின்தொகுப்புகள்
MongoDB ஐ சமாளிக்க R எனும் நிரலாக்க மொழியானது பல்வேறு தொகுப்புகளை வழங்குகிறது, அவை பின்வருமாறு.
mongolite: இது R எனும் நிரலாக்கத்திற்கான விரைவான மிக எளிய MongoDBஇன் வாடிக்கையாளராகும். இது mongo-c-driver , jsonlite ஆகியவற்றின்அடிப்படையாகக் கொண்டது. இது அட்டவணைப்படுத்தல், மறைகுறியாக்கம் செய்தல், வரைபடத்தை-குறைத்தல், திரட்டுதல், தாரையாக்கம்செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
RMongo: இது R எனும் நிரலாக்கத்திற்கான பயனாளர் நட்புடன்கூடிய MongoDBஇன் தரவுத்தள இடைமுகமாகும்.இதில்mongo-java-driver இக்கு ஜாவா அழைப்புகள் வழியாக இடைமுகம் வழங்கப்படுகிறது.
rmongodb: MongoDBஉடன் தொடர்புகொள்வதற்கு இது மிகவும் சக்திவாய்ந்த தொகுப்பு. இது JSON , BSON ஆகியவற்றுடன் MongoDBஇக்கு வினவல், செருகல் , புதுப்பித்தல், BSON எனும் மென்பொருளைக் கையாளுதல், MongoDB இன் தொகுத்தல், திரட்டல் போன்ற வற்றில் குறியீடுகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை வழங்குகிறது.
MongoDB இக்கான mongolite தொகுப்பு
விண்டோ இயக்க முறைமையில் Mongolite ஐ பின்வரும் கட்டளைவரியின் வாயிலாக CRAN இலிருந்து நேரடியாக நிறுவுகை செய்திடலாம்:
install.packages(“mongolite”)
தொடர்ந்து MongoDB இக்கு வளாக சேவையகத்தை அமைக்க வேண்டும். அதற்காக Mongolite ஐ தொகுப்பு நிறுவுகைசெய்யப்பட்டதும், பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தி அதை ஏற்றிடுக:
library(mongolite)
உடன் mongo() எனும்செயலியானது ஒரு MongoDB சேவையகத்துடன் இணைகின்றது.இந்த செயல்பாட்டிற்கான அளவுருக்கள் பின்வருமாறு:
mongo(dataset, url)
உதாரணமாக:
Test <- mongo(“mydataset”, url= “mongodb:
//cmpica:admin@mango.cmpica.org:40123/mongo_test”)
அவ்வாறு இதனை இணைக்கப்பட்டதும், புதிய இணைப்பை நிறுவுகைசெய்வதன் மூலம் அதன் இயக்கத்தை துவங்கிடுக:
Newc <- mongo(“Result”)
Newc $ insert (ggplot2:: Result)
தரவு செருகல் பணிமுடிந்ததும், தரவுத் தொகுப்பில் வினவல்களைச் செய்யலாம். தரவு தொகுப்பை வினவுவதற்கு JSON அடிப்படையிலான தொடரியல் பயன்படுத்தப்படுகிறது.
Newc$count(‘{}”) // { } என்பது அனைத்து தரவுகளும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன என்பதாகும்
> [1] 270
Readdata <- Newc $ find(‘{}’) // இங்குஅனைத்து தரவுகளும் படிக்கப்படுகின்றன
Print(Readdata) // இங்குஅனைத்து தரவுகளும்பிரதிபலிக்கபபடுகின்றன
Q1 <- Newc$ find (‘ { “Semester” : “ First”, “CGPA” : { “$gt” : 8 } )
// First Semester, CGPA > 8 ஆகியவற்றில் அனைத்து தரவுகளும் மீட்டெடுக்கப்படுகின்றன
பதிவுகளின் சேகரிப்புக்கு find() எனும் வழிமுறை பொருந்தும். மற்றொரு செயலியானiterate() என்பது ஒரு வினவலைச் செய்ய நம்மைஅனுமதிக்கிறது – இது பதிவுகளைச் சேகரிப்பதற்காக அன்று, ஆனால் இது எந்தத் தொகுப்பும் இல்லாமல் பதிவுகளை ஒவ்வொன்றாகப் படிக்கிறது. iterator எனும் செயலியில்one(), batch(n) முறைகள் உள்ளன, அவை ஒரு நேரத்தில் ஒற்றை அல்லது nஇல் நாம் குறிப்பிடும் எண்ணிக்கையிலான பதிவுகளை அடியெடுத்து வைக்க நம்மை அனுமதிக்கின்றன.
Q2 <- Newc$ iterate (‘ { “Semester” : “ First”, sort = ‘{ “CGPA” : 1 }’ )
while(! is.null ( u1 <- 10) ) {
cat (sprint( “ Result of First Semester is %d CGPA”, u1 $CGPA)
}
// iteratorஇலிருந்து ஆவணங்களை படித்திடுகின்றது