எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 9 – ரூபி arrays

ரூபி மாறிகள் பற்றிய அத்தியாயத்தில் சொன்னதுபோல தரவுகளை நினைவக இடத்தில் வைப்பது மாறிகள் (variables) எனப்படும். பல்வேறு மாறிகளை ஒருங்கிணைத்து தன்னுள் கொண்டிருக்கும் பொருளாக (object) மாற்றுவது இன்றியமையாதாகும். இதை ரூபி array-யை கொண்டு செய்யலாம். இந்த அத்தியாயத்தில் array-யின் அறிமுகம், array உருவாக்குதல் மற்றும் கையாளுதலை காணலாம்.

ரூபி array என்றால் என்ன?:

ரூபியில் array ஒரு பொருளாகும். அதில் பல உருப்படிகள் (items) இருக்கும், அது எந்த வகையான மாறியாகவும் (string, integer, fixnum, hash, objects, arrays etc) இருக்கலாம். பல பரிமாணங்கள் (multidimensional) கொண்ட array-ஐ உருவாக்க, அதிலுள்ள ஒவ்வொரு உருப்படியும் ஒரு array-வாக இருக்கவேண்டும். இவ்வாறு பல உருப்படிகளை குழுவா வைத்து ஒரு array-வை உருவாக்கியபின்பு, அவற்றை அகரவரிசைப்படியோ (alphabetical order), அல்லது எண்வரிசைப்படியோ (numerical order) வரிசைப்படுத்துவது (sorting), உருப்படிக்கு கொடுக்கப்பட்ட மதிப்பை மாற்றுவது, நீக்குவது மற்றும் குழுவான உருப்படிகளை ரூபி செயற்கூற்றிற்கு argument ஆக அனுப்புவது போன்ற பலவற்றை செய்யலாம்

ரூபியில் array உருவாக்குவது எப்படி:

ரூபியில் array-ஐ உருவாக்க பல்வேறு முறைகள் உள்ளன. ரூபி array class-யை பயன்படுத்தி array-ஐ உருவாக்கலாம். காலியான array-ஐ உருவாக்க array-யிலுள்ள new செயற்கூற்றை பயன்படுத்தி பின்வருமாறு செய்யலாம்.

[code lang=”ruby”]
days_of_week = Array.new
[/code]

இதில் days_of_week என்கிற array காலியாக உள்ளது. Array காலியாக உள்ளதா என்பதை, array class-யிலுள்ள empty? செயற்கூற்றின் மூலம் சரிப்பார்க்கலாம். Array காலியாக இருந்தால் array class true-வை திருப்பி அனுப்பும்.

[code lang=”ruby”]
days_of_week.empty?
=> true
[/code]

Array-வை துவக்க (initialize), array அளவை argument-ஆக new செயற்கூற்றிற்கு அனுப்ப வேண்டும்.

[code lang=”ruby”]
days_of_week = Array.new(7)
=> [nil, nil, nil, nil, nil, nil, nil]
[/code]

Array-ல் உள்ள கூறுகள் எல்லாம் nil ஆக இருக்கும்.

Array-ஐ விரிவுபடுத்துதல்:

Array-யை உருவாக்கியப்பின் அதை விரிவுபடுத்தலாம். ஒரே மதிப்பை எல்லா கூறுகளுக்கும் கொடுக்க array உருவாக்கும்போதே new செயற்கூற்றிற்கு அதை அனுப்ப வேண்டும்.

[code lang=”ruby”]
days_of_week = Array.new(7, "today")
=> ["today", "today", "today", "today", "today", "today", "today"]
[/code]

மற்றொரு வழியாக, array class-யிலுள்ள[] method-டை பயன்படுத்தி கூறுகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக மதிப்பு கொடுக்க வேண்டும்.

[code lang=”ruby”]
days_of_week = Array[ "Mon", "Tues", "Wed", "Thu", "Fri", "Sat","Sun" ]
=> ["Mon", "Tues", "Wed", "Thu", "Fri", "Sat", "Sun"]
[/code]

அல்லது, மிக எளிமையாக, Array பெயர் மற்றும் square bracket-ல் மதிப்பு மட்டும் கொடுத்தால் போதும்,

[code lang=”ruby”]
days_of_week = [ "Mon", "Tues", "Wed", "Thu", "Fri", "Sat", "Sun" ]
[/code]

இது array உருவாக்குவதுடன் மதிப்பையும் சேர்க்கிறது.

ரூபி array பற்றி விவரங்களை கண்டறிதல்:

Array உருவாக்கியப்பின்,array-யையும் அதன் கூறுகளையும் பற்றிய விவரங்களை பெறலாம். ஏற்கனவே சொன்னதுப்போல, array காலியாக உள்ளதா என்பதை பின்வருமாறு கண்டுப்பிடிக்கலாம்.

[code lang=”ruby”]
days_of_week.empty?
=> true
[/code]

Array class-யிலுள்ள size method-டை பயன்படுத்தி array-யின் அளவை கண்டுப்பிடிக்கலாம்:

[code lang=”ruby”]
days_of_week = Array.new(7)
days_of_week.size
=> 7
[/code]

Screen Shot 2015-12-22 at 3.07.01 PM

Array கூறுகளை அணுகுதல்:

Array-யின் கூறுகளை அணுக (access) கூறுகளின் index மற்றும் [] செயற்கூறுகளைப் பயன்படுத்த வேண்டும். Array-யின் முதல் மற்றும் இரண்டாவது கூறுகளை access செய்ய,

[code lang=”ruby”]
days_of_week[0]
=> "Mon"

days_of_week[1]
=> "Tues"
[/code]

இதேப்போல் array class-யிலுள்ள at செயற்கூற்றை பயன்படுத்தி அணுகலாம்,

[code lang=”ruby”]
days_of_week.at(0)
=> "Mon"
[/code]

Array index -1-னை பயன்படுத்தி array-யின் கடைசி உருப்படியை அணுகலாம். உதாரணத்திற்கு,

[code lang=”ruby”]
days_of_week[-1]
=> "Sun"
[/code]

Array class-யிலுள்ள first மற்றும் last செயற்கூற்றை பயன்படுத்தி array-யின் முதல் மற்றும் கடைசி உருப்படிகளை அணுக முடியும்.

[code lang=”ruby”]
days_of_week.first
=> "Mon"

days_of_week.last
=> "Sun"
[/code]

கூறுகளின் index-ஐக் கண்டறிதல்:

Index செயற்கூற்றை பயன்படுத்தி array-யின் குறிப்பிட்ட கூற்றின் index-ஐக் கண்டறியலாம். Index செயற்கூறானது பொருந்தும் முதல் கூற்றின் index-ஐத் திருப்பி அனுப்பும். உதாரணத்திற்கு நமது days_of_week array-யிலுள்ள “wed” கூறின் index-ஐக் கண்டுபிடிக்கலாம்.

[code lang=”ruby”]
days_of_week.index("Wed")
=> 2
[/code]

Rindex method-டை பயன்படுத்தி array-யிலுள்ள பொருந்தும் கடைசி கூற்றினை கண்டுப்பிடிக்கலாம்.

[code lang=”ruby”]
a = [1, 2, 3, 4, 5, 4, 3, 2, 1]
a.rindex("2")
=> 7
[/code]

துணைக்குழுக்கள்

Array’s கூறுகளில் துணைக்குழுவை எடுக்க ஆரம்ப எண் மற்றும் எத்தனை கூறுகள் எடுக்க வேண்டுமோ அதையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆரம்ப கூறு 1 முதல் 3 கூறுகளையை எடுக்க,

[code lang=”ruby”]
days_of_week[1, 3]
=> ["Tues", "Wed", "Thu"]
[/code]

அதே போல், range-இலும் கொடுக்க முடியும்.

[code lang=”ruby”]
days_of_week[1..3]
=> ["Tues", "Wed", "Thu"]
[/code]

மாற்றாக, array class-யிலுள்ள slice method-டையும் பயன்படுத்தலாம்,

[code lang=”ruby”]
days_of_week.slice(1..3)
=> ["Tues", "Wed", "Thu"]
[/code]

— தொடரும்

பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்

%d bloggers like this: