Rufusஎனும் கட்டற்ற பயன்பாடு

ரூஃபஸ் என்பது யூ.எஸ்.பி விசைகள் / பென்ட்ரைவ்கள், மெமரி ஸ்டிக்ஸ் போன்றவைகளை கணினியின் இயக்கத்தை துவக்கக்கூடிய வகையில் வடிவமைத்து உருவாக்க உதவும் ஒரு பயன்பாடாகும்.இதன்வாயிலாக FAT/FAT32/NTFS/exFAT/UDF/ReFS என்பன போன்ற யூ.எஸ்.பி மெமரி ஸ்டிக்ஸ் களை எளிதாக வடிவமைத்திடலாம்

வெளியிலிருந்து எந்தவொரு கோப்புகளின் துனையில்லாமலேயே இதனைகொண்டு பழைய MS-DOS/ துவக்ககூடியFreeDOS ஐ கூட நாமே உருவாக்கமுடியும்

மேலும் பரந்த அளவிலான ஐஎஸ்ஓக்களிலிருந்து துவக்கக்கூடிய யூ.எஸ்.பி ட்ரைவை உருவாக்கிடமுடியும்

அதனோடு பயாஸ் அல்லது யுஇஎஃப்ஐ துவக்கக்கூடிய இயக்கிகளை உருவாக்கிடமுடியும்
மிகமுக்கியமாக கணினியின் நினைவகத்தில் நம்முடைய கணினியை பாதிக்ககூடிய
மோசமான தொகுப்புகள் ஏதேனும் உள்ளதாவென சரிபார்த்திடமுடியும்

இது GPL v3 எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது கணினியில் நமக்குத்தேவையான இயக்கமுறைமைகளை நிறுவுகை செய்திடாமலேயே செயல்படுத்தி பயன்பெறவும் குறுவட்டு நெகிழ்வட்டு வாயிலாக கணினியை செயல்படுத்திடவும் இது பேருதவியாய் விளங்குகின்றது இது மிகச்சிறிய அளவாக இருந்தாலும் மிகவிரைவாகவும் நமக்கு தேவையான அனைத்து பணிகளையும் செயல்படுத்திடவும் உதவுகின்றது 32 bit அல்லது 64 bit உடைய விண்டோ 7 அல்லது அதற்கு பிந்தைய இயக்கமுறைமைகணினியில் இதுசெயல்படும் திறன்மிக்கது இது இணையத்தின் வாயிலாக செயல்படும் வல்லமைகொண்டது மேலும் நாம் விரும்பும் எந்தவொரு மொழிக்கும் மாற்றியமைத்துபயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும்விவரங்களுக்கு rufus.ie/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

%d bloggers like this: