உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய

Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள்.

உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்:

 • webm கோப்பு வடிவத்திற்கு சேமித்துக்கொள்ளலாம்

 • திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தேர்வு செய்து அந்தப் பகுதியினை மட்டும் பதிவு செய்தல்

 • அழுத்தப்பட்ட பொத்தானைக் காண்பித்தல், மற்றும் பதிவு செய்தல்

 • ஒலியோடு பதிவு செய்தல் அதாவது திரையோடு சேர்த்து ஒலியினையும் பதிவு செய்யும் வசதி.

 • உபுண்டு 11.10/12.04 -ல் Eidete னை நிறுவுவது எப்படி:

  கீழ்காணும் கட்டளைகளை முனையத்தில் கொடுக்கவும் (கணினி இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியம்)

  sudo add-apt-repository ppa:shnatsel/eidete-daily

  sudo apt-get update

  sudo apt-get install eidete

  மூலம் : bit.ly/kaniscrncast

~இரா.கதிர்வேல்

 

%d bloggers like this: