Scribus – பகுதி 4

 Scribus-ன் இந்த மாத இதழில், வெவ்வேறான உரை, உருவப்படம் மற்றும் வடிவங்களுக்கு ‘நிறம் சேர்த்தல்’ எப்படி என்பது பற்றி பார்ப்போம். 

சென்ற மாத இதழில், பத்திகளை அழகுபடுத்துதல் அதாவது பொத்தானின் சொடுக்கில் நீங்கள் ஒரே விதமான உரு(font), நிறம் மற்றும் அமைப்புகள்(settings) செய்தல் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் குறைந்த வேலையில் செய்யலாம் என்று பார்த்தோம். இந்த மாதம் நிறங்களைப் பற்றி பார்ப்போம். இந்த மெனுவும் பத்திகளை அழகுபடுத்துதல் போன்றே, ஆனால் இதனை பெட்டிகள்(boxes), வரிகள் மற்றும் பலவற்றுடன் பயன்படுத்திப் பார்ப்போம்.

இதுதான் கடந்த மாத இதழில் பார்த்த ‘பத்திகளை அழகுபடுத்துதல்’.

இதை கற்பனை செய்தகொள்ளுங்கள் : நீங்கள் உங்கள் பதிப்பின் 50வது பக்கத்தில் இருக்கிறீர்கள். முதல் பக்கத்தில் உள்ள ஒரு உருவப்படத்தின் அதே நிறம் மற்றும் அழகினை கொண்ட அதே உருவப்படம் உங்களுக்குத் தேவை. உங்களால் எளிதாக முதல் பக்கத்திற்கு தாவ(jump) முடியும். ஆனால், ஒரு நிறப்பெட்டகத்தை(color palette) பெறுதல் அவ்வளவு எளிதல்ல. இதனை Scribus-ன் நிறங்களை அமைத்தல்(Color Settings)-ல் நீங்கள் செய்ய முடியும்.

 

முதலில் பெயரிடப்பட்ட நிறத்தினை உருவாக்குவோம். Edit -> Colors மெனு தேர்வினை சொடுக்கவும். Scribus உருவாக்கியிருக்கிற அனைத்து ஆவணத்திற்கும் தேவையான நிறங்களின் பட்டியலை இந்த உரையாடல் பெட்டியில் காணலாம். உங்களுக்கு தேவையெனில் அவையனைத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

இதில் எந்த நிறத்தை பயன்படுத்துவது என்பது குழப்பமாக இருந்தால்,அவையனைத்தையும் நீக்கிக்கொள்ளலாம். ஆனால், தலைப்பு மற்றும் உரையில் அந்த நிறத்தை பயன்படுத்தியிருந்தால் என்னவாகும்?. இதை நடக்காமல் தடுப்பதற்கு, Remove Unused பொத்தானை சொடுக்கவும்.

 

இப்போது நம்முடைய பெட்டகத்தில் ஒரு புதிய நிறத்தை உருவாக்குவோம். இப்போது தோன்றும் உரையாடல் பெட்டியில், உங்களுக்கு விருப்பமுடைய பெயரை நிறத்திற்கு கொடுக்கவும். இங்கு நாம் ‘Photo Border’ என்று பெயரிடுவோம். அதன் கீழ்உள்ள ‘CMYK’ என்பதனை RGB அல்லது Web Safe RGB-க்கு மாற்றவும்.

உங்களின் ஆவணத்தை professional printer-ல் பயன்படுத்தப்போகிறீர்கள் எனில், CMYK(உருவப்படத்திற்கும் கூட) – ஐப் பயன்படுத்துங்கள்.

இந்த ஆவணத்தை PDF-ஆக பயன்படுத்துவதால் RGB-யைத் தேர்வுசெய்து கொள்வோம். உச்சியின் வலதுபக்கத்தில் உள்ள கீழிறங்கு மெனுவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பெட்டகங்களின் பட்டியலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு நாம் தனிப்பட்ட(custom) பெட்டகத்தைப் பயன்படுத்துவோம்.

 

திரையின் வலதுபுறத்தில் வானவில் தோற்றம் கொண்டுள்ள பெட்டியிலிருந்து ஒரு

நிறத்தை தேர்வுசெய்து OK-ஐ சொடுக்கவும். இப்போது நம்முடைய தனிப்பட்ட நிறத்தை

பட்டியலில் காணலாம். ஆவணப்பதிப்பிற்கு திரும்பிச்செல்ல OK-ஐ சொடுக்கவும். நினைவில் கொள்க, பத்திகளை அழகுபடுத்துதல் போல: நாம் ஒரு நிறத்தை மாற்றினால், நம் ஆவணத்தில் பயன்படுத்தியுள்ள அனைத்தும் இந்த புதிய மதிப்பிற்கு மாறிவிடும். உருவப்படத்தைச் சுற்றி ஒரு எல்லைக்கோடு வரைய, உருவப்படத்தைத் தேர்ந்தெடுத்து Properties திரையில் உள்ள Colors என்ற தட்டையை பார்க்கவும்.

இதில் இரு பணிக்குறிகளைக் காணலாம். இதன் வலதுபுறத்தில் உள்ளது ‘Fill’ பொத்தானாகும். இதுதான் வடிவங்களுக்கு நிறமிட தேவையான ஒன்றாகும். இது உருவப்படத்தைத் தவிர்த்து மற்ற வடிவங்களினுள் (செவ்வகம், வட்டம் போன்றவைகளுக்கு) நிறமேற்ற உதவுகிறது. அதன் கீழே நிறத்தின் பட்டியலும் மற்றும் அது எந்த விதத்தில் நிறமிடப்பட வேண்டும் என்பது கீழறங்கு பட்டியலில்(Dropdownlist) காணலாம். இடது பணிக்குறி வரிகளை நிறமிட(Line Colors) பயன்படுகிறது. இப்போது Photo Border நிறத்தை தேர்ந்தெடுத்தால் அது உருவப்படத்தில் பிரதிபலிக்கும். இதன் எல்லைக்கோட்டின் தடிமனை அதிகரிக்க Line தட்டையை(tab) தேர்ந்தெடுத்து, அதில் வரியின் வகை(Type of Line), அகலம்(Line Width) போன்றவற்றை அமைக்கலாம். வரியின் அகலத்தை மாற்றினால் அதன் தடிமனை அதிகரிக்கச்செய்யலாம். அதேபோல் வரியின் Edges மற்றும் Endings அமைப்பினை மாற்றியமைக்கலாம்.

 

அடுத்து, வடிவங்களைக் கொண்டு சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதற்கு Inert -> Insert Shape -> Default Shapes மெனுவில் தேவையான வடிவத்தை தேர்ந்தெடுக்கலாம். இதில் செவ்வக வடிவத்தை தேர்ந்தெடுத்தால், அது எளிமையாக காட்சியளிக்கும். இதற்கு நிறமளிக்க அதனை தேர்ந்தெடுத்து Properties திரையில் உள்ள Colors தட்டையைத் தேர்ந்தெடுக்கவும். வடிவங்களுக்கும் Fill Color மற்றும் Line Color- ஐ அமைத்து அதனை அழகுபடுத்தலாம். உருவப்படத்திற்கு செய்ததுபோல வடிவத்தின் தடிமனை Line தட்டையில் சென்று மாற்றியமைக்கலாம்.

 

குறிப்பு : உரைகளை உள்ளிடவும், Banner-களுக்கும் வடிவங்களைப் பயன்படுத்தலாம். Color-னை None என்று அமைத்து வடிவத்தின் உள்பக்கத்தினை transparent-ஆக மாற்ற முடியும்.

 

வடிவங்கள்(Shapes), எல்லைக்கோடுகள்(Borders) மற்றும் நிறங்களுடன் (Colors) உங்கள் ஆவணத்தைப் பயன்படுத்தி அதன் அனுபவத்தை பெறுங்கள்.

 

செல்வணி சம்பத், இணைய தள வல்லுநர்,

காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்.

மின்னஞ்சல் : selva.infobees@gmail.com

வலை : infobees.wordpress.com

%d bloggers like this: