செயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறுகளின் கலவை – பகுதி 5
உலகெங்குமுள்ள நிரலர்களுக்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. ஒருமுறை எழுதிய நிரலை மறுமுறை எழுத அவர்கள் விரும்புவதில்லை. முன்பெழுதியதுபோன்ற நிரலை மீண்டும் எழுதநேரும்போது, ஏற்கனவே உள்ள நிரலைப்பயன்படுத்தவே முயல்கிறோம். கொள்கையடிப்படையில், நிரலின் மறுபயன்பாடு என்பது மிகச்சிறந்த கோட்பாடு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட தேவைக்காக நிரலெழுதும்போது பிற இடங்களில் அதைப்பயன்படுத்துவது கடினமாகிறது. அதேநேரத்தில், மிகவும் பொதுப்படையாக நிரலெழுதினால், எந்த தேவைக்காக எழுதப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதே கடினமாகிவிடுகிறது. ஆகவே, இவையிரண்டுக்குமிடையே ஒரு சமநிலையைக்கண்டறிவது அவசியம். பலமுறை பயன்படுத்தக்கூடிய… Read More »