திறந்த மூல வல்லுநர்கள் தேவை மிகவும் அதிகரித்துள்ளது

லினக்ஸ் அறக்கட்டளை மற்றும் டைஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, அடுத்த ஆறு மாதங்களில், பல திறந்த மூல நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டி வரும் எனப் பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதைவிட அதிகமான நிறுவனங்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தங்கள் திறந்த மூல பதவிகளுக்கு நியமனம் செய்ய மெனக்கெடுகின்றனர்.

இந்த அறிக்கை திறந்த மூல வேலைகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்ற ஒரு தளரா நம்பிக்கையை அளிக்கிறது. டெவ்ஆப்ஸ் (DevOps) மற்றும் செயலிகள் தயாரிக்கும் திறமைகளை வளர்க்க நிறுவனங்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. முக்கியமாக, சான்றிதழ்களைக் கொண்ட ஒரு பணியாளரை நியமனம் செய்ய அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இல்லையெனில், அவர்கள் பெரும்பாலும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான செலவுக்கு உதவி செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

இதற்கிடையில், திறந்த மூல வல்லுனர்களுக்குத் தொடர்ந்து வேலைக்கான அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் இன்னொரு வேலை கிடைப்பது எளிதாக இருக்கும் என்று நம்புவதற்கு இது வழிவகுக்கிறது.

280 க்கும் மேற்பட்ட உலகளாவிய வேலை வாய்ப்பு மேலாளர்கள் மற்றும் 1,800 திறந்த மூல வல்லுநர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

மூலக்கட்டுரை இங்கே

%d bloggers like this: