கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பரப்புவது எப்படி என்பதற்கு பிரசன்ன வெங்கடேஷ் அவர்களும், புதுவை லினக்ஸ் பயனாளர் குழுவும் (PuduvaiLUG) சிறந்த உதாரணமாகத் திகழ்கிறனர்.
உலகெங்கும் பரவியுள்ள பிற லினக்ஸ் பயனாளர்கள் குழுக்களைப் போலவே, தங்கள் ஊரான புதுச்சேரியைச் சுற்றி க்னூ/ லினக்ஸ் (GNU/Linux) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பல வகையில் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு சிந்தித்தனர்.
லினக்ஸ் பற்றி பலரும் அறிந்து கொள்ள வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவடைந்தனர்:
- லினக்ஸ் மூலம் ஏதேனும் ஒரு உள்ளூர் தொழிலில் பலன்/ லாபம் கிட்ட வேண்டும்
- அதன் மூலம் பல மக்களும் முதன்முதலில் லினக்ஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தி அறிய வேண்டும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு உள்ளூர் இணைய பூங்கா (Internet Centre) வைத்திருப்பவரை அணுகினர். லினக்ஸ் தளங்களுக்கு மாறுவதன் மூலம் கணிணிகளுக்கு நல்ல ஏற்புத்தன்மை மிக்க, அதிக சுமை தராத ஒரு இயங்குதளத்தை அவர்களுக்கு வழங்கும். அத்துடன், கணிணிகளுக்கும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கும் நல்லதொரு பாதுகாப்பையும் வழங்கும்.
தேவையான மென்பொருட்களையும் எளிதாக நிறுவிக் கொள்ளலாம். மேலும், கணிணிகளில் வைரஸ் தொல்லை இல்லை என்பதால், அடிக்கடி Format செய்ய வேண்டியதில்லை. வைரஸ் மற்றும் பிற பாதுகாப்பு காரணங்களுக்காக, அதிக விலை கொடுத்து எந்த மென்பொருளும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த பூங்கா அதிபர், லினக்ஸ் தளங்களுக்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டினார். உபுண்டு லினக்சை நிறுவுவது என்ற முடிவும் எடுத்தனர்.
இன்ப அதிர்ச்சி!
லினக்ஸ் பற்றிய நல்ல அபிப்ராயத்தை பூங்கா அதிபரிடம் கொண்டு வர PuduvaiLUG அவருக்கு இன்னும் சில இன்ப அதிர்ச்சிகளை அளித்தனர். OMG! Ubuntu! லோகோ கொண்ட ஒரு ஓவியமும் (உபயம்: பிரகாஷ்) அதில் அடக்கம்! இதன் மூலம் அந்த இணையப்பூங்கா உபுண்டுவினை மட்டுமன்றி, OMG! Ubuntu! அன்பையும் பெற்றது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த செய்தி.
அதை விட மிகவும் சிறப்பு பெற்ற செய்தி ஒன்று உண்டு. நம் நண்பர்களின் செயலால், நிறைய புதியவர்களுக்கு உபுண்டு அறிமுகம் ஆகிறது. அவர்களின் சிந்தனை வெற்றி பெற வாழ்த்துவோம்!!
நன்றி: OMG! UBUNTU! , Puduvai LUG