ஃபைல்ஸ்டார் எனும் கட்டற்ற பயன்பாடு

எந்த தளத்திலும் எந்தவொரு கோப்பையும் கொண்டு நீங்கள் விரும்பும் எந்தவொரு பணியையும் செய்யுங்கள்“.என்பதே இந்த ஃபைல்ஸ்டார் எனும்பயன்பாட்டின் அடிப்படை நோக்கமாகும் அதாவது நாம் தற்போது எந்தவொரு வடிமைப்பு கோப்பில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் நாம் விரும்பும் வேறு எந்தவொருவடிமைப்பு கோப்பின் பணியையும் செய்வதற்காக குறிப்பிட்ட வடிவமைப்பு கோப்பினை தேடிதிறந்து பணிபுரிய முயற்சி செய்வதற்கு பதிலாக தற்போது இருக்கும் கோப்பினையை நாம் விரும்பும் வடிவமைப்பு கோப்பில் பணி செய்வதற்கான கோப்பாக உருமாற்றி நாம் விரும்பும் பணியை உடனடியக செய்து முடித்திட இது பேருதவியாய்விளங்குகின்றது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கோப்பு (களை) எடுத்துகொண்டு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிற வடிவமைப்பு கோப்பாக (கோப்புகளாக) உருமாற்றிடும் திறனை இது கொண்டுள்ளது இந்த ஃபைல்ஸ்டார் எனும் பயன்பாட்டின் வாயிலாக விரைவாக எந்தவொரு வடிவமைப்பிலான கோப்பினை கொண்டு நாம் விரும்பும் எந்தவொருவடிமைப்பு கோப்பின் பணியையும் செயல்படுத்தி பயன்பெறலாம்“. இது ஒரு மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு பயன்பாட்டு மென்பொருளாகும், இது நம்முடைய விரல் நுனியில் பல்லாயிரக்கணக்கான கோப்பின் வகையை உருமாற்றியமைத்திடும் திறன்களைக் கொண்டு, நம்முடைய நேரத்தைச் சேமிக்கவும், நம்முடைய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றது.
பொதுவாக தற்போது நாம் அதிக எண்ணிக்கையிலான கோப்புகளை நாமே முயன்று ஒருவடிவமைப்பு கோப்பினை மற்றொரு வடிவமைப்பு கோப்பாக உருமாற்றம் செய்வதிடும் பணியை கையாளும்போது மிகவும் அதிக காலஅவசகாசத்தை எடுத்துகொள்கின்றது மேலும் இயந்திரம்போன்று நாம் செய்த பணியையே திரும்ப திரும்ப செய்வதால் மனதில் சலிப்பும் சோர்வும் நமக்கு ஏற்படுகின்றது அதனை தவிர்த்து மிகவிரைவாக நாம் விரும்பியவாறு கோப்புகளைஉருமாற்றிடும் பணியை இது செயற்படுத்திடுகின்றது. ஒரு குறிப்பிட்ட பணிக்காக வெவ்வேறு கோப்பு உருமாற்றிடும் பயன்பாடுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஃபைல்ஸ்டாரில் பொதுமக்கள் தினசரி கையாளும் பொதுவான அனைத்து வகை கோப்பு உருமாற்ற பணிகளுக்காகவும் இதனை பயன்படுத்திபணியை எளிதாக்கிகொள்ளமுடியும். கோப்புகளை உருமாற்றிடும்போது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை இது எளிதாக செயல்படுத்திடுகின்றது மேலும் இது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோப்புகளின் உருமாற்றபணிகளை ஒரு சில நொடிகளில் மிக எளிதாக செய்து விடுகின்றது . அதாவது இதில் ஒரு சில எளிய சொடுக்குகளில் படங்களை மறுஅளவிடுதல், சிறியதாக சுருக்குதல் சுழற்றி வேறுநிலைக்கு கொண்டுசெல்லுதல் ஆகிய பணிகளை மிகவிரை செயல்படுத்தி கொள்ளமுடியும்.அதுமட்டுமின்றி

கோப்பின்வடிவமைப்பை மாற்றுதல், தொகுப்பாக வடிமைப்பைமாற்றுதல், தொகுப்பாக மறுபெயரிடுதல் ,உருவப்படகோப்புகளை PDFகோப்பாக உருமாற்றுதல் ,PDF கோப்பினை வேர்டு கோப்பாக உருமாற்றுதல் ,PDF ஆவணங்களை எளிதாக கையாளுதல் என்பன போன்ற 20.000 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு பணிகளை இது ஆதரிப்பதால் இதனுடைய பணி முடிவற்று மிக நீண்டதாக இருக்கின்றது. இந்த ஃபைல்ஸ்டார் பயன்பாட்டினை நம்முடைய கணினியில் மிகஎளிதாக நிறுவி செயல்படுமாறு செய்யலாம் ஆயினும் இது தற்போது விண்டோ இயக்க முறைமைகளில் மட்டும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது வருங்காலத்தில் அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு மேம்படுத்தப்பட விருக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இந்தஃபைல்ஸ்டார் ஆனது தேடுபொறி மூலம் அணுகக்கூடியஆயிரக்கணக்கான திறன்களைக் கொண்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு filestar.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க

%d bloggers like this: