அனைவருக்குமான ஜாவா பதிப்பாளர் (பதிப்பு 2.9)

EJE எனும் சுருக்கமானபெயரால் அழைக்கபெறும் அனைவருக்குமான ஜாவா பதிப்பாளாரானது(Everyone’s Java Editor) ஒரு எளிய ஜாவா எனும் கணினிமொழியின் பதிப்பாளராகும், இது புதியவர்கள் எவரும் மிகவும் சிக்கலான பல்வேறு மேம்பாட்டுக் கருவிகள் எதையும் கற்றுக்கொள்ளாமலேயே எளிதாக , ஜாவாஎனும் கணினிமொழியைக் கற்றுக்கொள்ள உதவிடும் மிகவும் எளிமையான மிகச்சரியானகருவியாகும். இந்த EJE என்பது பல தளங்கள் (ஜாவாவில் எழுதப் பட்டுள்ளது), குறைந்த எடை, பயனாளர் நட்பு என்பன போன்ற பல்வேறு பயனுள்ள அடிப்படை வசதி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. நம்முடைய பணியை ஜாவாவுடன் துவங்க நல்ல உதவியும் இதில் கிடைக்கின்றது!.EJE என்பது ஜாவா மேம்பாட்டு பிரிவின் ஒரு பகுதியான பிற துணைப்பிரிவிலிருந்து ஒரு கட்டணமற்ற மென்பொருள் பயன்பாடு ஆகும். தற்போது இந்த பயன்பாடானது ஆங்கிலத்தில் கிடைக்கின்றது, . இதனை 64-பிட் எம்எஸ் விண்டோ, அனைத்து32 பிட் எம்எஸ் விண்டோ (95/98 / என்.டி / 2000 / எக்ஸ்பி) ,அனைத்து POSIX (லினக்ஸ் / பி.எஸ்.டி / யுனிக்ஸ் போன்ற வை) சுதந்திரமான இயக்கமுறைமையில் (ஒரு மொழி மாற்றியாக (interpreted )செயல்படுமாறு எழுதப்பட்டது) நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்.இந்தEJE ஐ செயல்படுத்திட துவங்குவதற்காக இந்த தளத்தின் மேலே உள்ள பச்சை வண்ண பதிவிறக்க பொத்தானை சொடுக்குதல் செய்தால் போதும். இதனை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்திட மென் பொருளை நச்சுயிர் தடுப்புடன் வருடுதல் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது.மிக முக்கியமாக நாம் ஜாவா எனும் கணினி மொழியின் கற்பதற்காகவென இனி JDK ஐ நிறுவுகை செய்யவேண்டிய தேவையில்லை (இதில் இயக்க நேரம் உட்பொதிக்கப்பட்டுள்ளது).இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
EJE இலிருந்து நேரடியாக தொகுத்து இயக்கலாம்,ஜாவா தொடரியல் சிறப்புவசதியுடன்விளங்குகின்றது
குறிமுறைவரிகளின் துண்டுகள் வார்ப்புருக்கள் செருகுதல் ஆகியவசதிகொண்டது, ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு குறுக்குவழிசெஂயலிகள்உள்ளன, தனிப்பயனாக்கத்தைப் பார்த்துகொள்ளவும் உணரச்செய்யவும் இதில்Nimbus என்பது சேர்க்கப்பட்டுள்ளது,உறுப்பினர்களின் நோக்கத்தை மேம்படுத்துவதற்காக மேல்மீட்பு பட்டி இதில்உள்ளது, பணிமுடிப்பதற்கான அறிவிப்பு நேரம் கொண்டது,ஜாவா ஆவண ஆதரவுகொண்டது
அச்சிடும் ஆதரவுகொண்டது, ஜாவா ஆவணம் (வளாகஇணைப்பில் காணவில்லை எனில், இணையத்திற்கு செல்க), பல பணி அடைவுகளின் ஆதரவைகொண்டது , வடிவமைத்தல் பாணிகளின் ஆதரவை கொண்டது
பன்மொழி ஆதரவை (ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன்)கொண்டது, பிற பல்வேறு இனிய வசதிகளையும் (தேடிடுதல் , மாற்றுதல், செல்வதற்கான வரிசை, இனத்திற்கான பாதை, தொகுத்தல், செயல்படுத்துவதற்கான விருப்பங்கள் தருக்கங்கள் …) கருப்பொருள்களை மாற்றவும் ( Dark, Standard, Dusk, BrighterDusk (இயல்புநிலையானது) ஜாவா 14 ஆதரவு கொண்டது! தானியங்கி புதுப்பிப்புகள் OpenJDK உட்பொதிக்கப்பட்டது

%d bloggers like this: