இணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு

தனிப்பட்டமுறையில் திறமூல இணைய உலாவல் அனுபவத்தை பெறுவதற்கு  Brave எனும் கட்டற்ற இணைய உலாவி பயன்பாடு பேருதவியாய் விளங்குகின்றது. இது விண்டோ, மேக் லினக்ஸ், ஆண்ட்ராய்டு, iOS ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது.
கூகிளின் திறமூல குரோம் செயல்திட்டத்தின் மேல் கட்டமைக்கப்பட்ட, Bweb உலாவி என்பது வலைத்தள கண்காணிப்பாளர்களை தானாக முடக்குவதன் மூலமும், தொல்லை தரும் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலமும் நம்முடைய இணைய உலாவல் செயல்பாட்டை தனிப்பட்டதாக வைத்திருக்குமாறு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைவிட மேலும் பாதுகாப்பான உலாவலுக்காக, இது ஒரு உள்ளமைக்கப்பட்ட Tor எனும் கட்டற்ற இணைய உலாவியின் செயல்பாட்டையும் கொண்டுள்ளது. இந்த Brave எனும் கட்டற்றஇணைய உலாவியை ப் பயன்படுத்துவதன் பெரிய நன்மை என்னவென்றால், நாம் கூகுளின் குரோமில் ஆயிரக்கணக்கான விரிவாக்கங்களை(Extension) இதன் வாயிலாக அணுகலாம் , ஆனால் சாதாரண குரோமுடன் நாம் பெறுவதை விட மிகவேகமான உலாவல் அனுபவத்தை இதில் பெற முடியும். ஏனென்றால், கூகிளின் வழக்கமான குரோமின் தொகுப்பை விட இதில் வளங்கள் குறைவாக இருப்பதால், பக்கங்களை ஏற்றும்போது விரைவான இதன் செயல்திறன் நமக்கு செயலூக்கத்தை அளிக்கின்றது. இந்த உலாவியைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவல், Brave Rewards என்று அழைக்கப் படுகின்ற வசதியை கொண்டது. அதாவது இந்த இணைய உலாவியில், ஒரு சில விளம்பரங்களைக் காணலாம் நமக்கு அவை தேவையில்லை யெனில் அதற்கு பதிலாக ஒரு சிறிய அடிப்படையான மறையாக்க நாணய டோக்கனை பெற்றுகொள்ளலாம்.
இறுதியில், இந்த புதிய வழிமுறையானது இந்த இணையஉலாவியின் பின்புலத்தில் உள்ள மேம்படுத்துநர்கள் இது இணையத்தில் விளம்பரம் செயல்படும் முறையை மாற்றும் என்று நம்புகிறார்கள்.

இதனுடைய வசதி வாய்ப்புகள் :
இது இணைய பக்கங்களை 3x முதல் 6x வரையிலான வேகத்தில் திரையில் மேலேற்றுகின்றது: அதாவது இதனை தனியாக நிறுவுகைசெய்திடவோ இதனை இயக்குவதற்காக கற்றுக்கொள்ளவோ நிர்வகிக்கவோ செய்திடாமல் Chrome Firefox ஆகிய இணையஉலாவியை விடமூன்று மடங்கு வேகத்துடன் இணைய பக்கங்களை திரையில்ஏற்றுகின்றது.

நிறுத்திய இடத்திலிருந்து பதிவிறக்கிடும் பணியை தொடரலாம்: நாம் எங்காவது அயற்பணியாக வெளியில் செல்லும்போது செல்லும் இடத்தில் நாம் விரும்பியதை இணையத்தில் பதிவிறக்கம் செய்திடும்போது ஏதேனும் காரணத்தால் அரைகுறையாக பதிவிறக்கம் பணிநின்றுவிட்டதென்றாலும் பரவாயில்லை இதன் வாயிலாக நமக்கு வசதி படும்போது விடுபட்ட பகுதியிலிருந்து தொடர்ந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும் இதில் பல்வேறு வெகுமதிகளுடன் நமக்கு பிடித்த தளங்களை இணையஉலாவருவதை இதுஆதரிக்கின்றது

இணையற்ற தனியுரிமையும் பாதுகாப்பையும் அனுபவிக்கலாம். : இது தீம்பொருளை எதிர்த்துப் போராடுகிறது மேலும் நம்முடைய இணையஉலாவலை வேறுயாரும்கண்காணிப்பதைத் தடுக்கிறது, நம்முடைய தனிப்பட்ட தகவலைப் மிகபாதுகாப்பாக வைத்திருப்பதற்கே இது முன்னுரிமை அளிக்கின்றது.

இது நம்முடைய தனிப்பட்ட தகவல் தரவுகளை வணிகநோக்கத்தில் பயன்படுத்தாது :
இதனுடைய சேவையகங்கள் நம்முடைய இணையஉலாவல்செய்திடும் தரவுகளைப் பார்க்கவோ சேமிக்கவோ செய்யாது – நாம் அதை நீக்கும் வரை இது நம்முடைய சாதனங்களில் தனிப்பட்டதாக இருக்கும். அதாவது நம்முடைய தனிப்பட்ட தரவுகளை மூன்றாம் தரப்பினரி யாருக்கும் இது விற்பணைசெய்யாது.

கேடயம் போன்று அமைப்புகளைத் தனிப்பயனாக்குதல்: நம்முடைய அமைப்புகளை ஒரு தளத்திற்கு அல்லது உலாவி அளவிலான அடிப்படையில் தேர்வு செய்ய அனுமதிக்கின்றது . புதிய தாவல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் எத்தனை விளம்பரங்களை பின்தொடர் பாளர்களை இது தடுக்கின்றது என்பதைப் காணலாம். பாதுகாப்பு எளிமையை பூர்த்தி செய்கிறது: பல்வேறு விரிவாக்கங்களை, பதிவிறக்கவும் நிறுவுகை செய்திடவும் விரும்பினால், இணையஉலாவி ,விரிவாக்கங்கள் ஆகிய இரண்டிலும் அமைப்புகளை கவனமாக உள்ளமைத்து சரியாக பராமரிக்க, இதில் நமக்காகவென ஒரு சில தனியுரிமையையும் பாதுகாப்பையும் பொருத்தலாம் மேலும்விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் brave.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

%d bloggers like this: