எளிய தமிழில் WordPress – 6

எளிய தமிழில் WordPress – 6

 

கடந்த மாதத் தொடர்ச்சி….

நம்முடைய பதிவுகளை எழுதுவதில் சில வரைவுகளையும் (formats) நம்மால் மாற்றமுடியும். சாதாரணமான

 

Ø  Aside –  தலைப்பில்லாமல் பதிவுகள் எழுத உதவும் வரைவு இது. ஃபேஸ்புக்கில் குறிப்பு எழுதுவது போன்றது.

Ø  Gallery – பதிவில் படங்களை கேலரி வடிவில் காண்பிக்க உதவும்.

Ø  Link – இன்னொரு தளத்திற்கு இணைப்பு(கள்) கொடுக்க உதவும் வரைவு.

Ø  Image – ஒரே ஒரு படத்தை மட்டும் பதிவாக்க உதவும் வரைவு இது.

Ø  Quote –  அதிகமான ‘மேற்கோள்கள்’ பதிவிட உதவும் வரைவு.

Ø  Status – சின்னச் சின்ன பதிவுகள் இட உதவும் வரைவு இது. ட்விட்டர் தளத்தில் உள்ள கீச்சுகள் (tweets) போன்றது.

Ø  Video –  ஒரே ஒரு காணொளி மட்டும் பதிவிட

Ø  Audio – ஒலிப்பதிவுகளை வெளியிட Podcast போன்று mp3 வெளியிட உதவும் வரைவு இது.

Ø  Chat –  ’சாட்’ செய்வது போன்று பதிவிட உதவும் வரைவு.

 

இது போன்ற வரைவுகள் (formats) எல்லா தீம்களிலும் இயங்காது. சில குறிப்பிட்ட தீம்களில் மட்டுமே அனைத்தும் இயங்கும்.

படங்கள் உள்ளிட்ட மற்ற ஊடகங்களை இணைக்க:

பதிவுகளில் படங்கள், pdf கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை இணைக்க Add Media என்கிற வசதியை உபயோகப்படுத்தலாம். அது பதிவிடும் விண்டோவின் மேல்பகுதியில் இருக்கும் ‘button’ ஆகும். அதைக் கிளிக்கினால், இந்த விண்டோ கிடைக்கும்.

Upload Files எனும் பகுதியில், select files எனும் வசதி மூலம் ஊடகங்களை உள்ளிடலாம். பதிவேற்றியதைக் காண Media Library வசதி மூலம் காணலாம்.

Media Library வசதியில் படங்கள், உள்ளிட்ட ஊடகங்களில் குறிப்புகள் சேர்க்க இயலும். அதற்குத் தேவையான படத்தை (அ) ஊடகத்தைத் தேர்வு செய்துவிட்டால் போதும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

படத்தின் title (தலைப்பு), caption (துணைத் தலைப்பு-பதிவில் படத்தின் கீழே இடம்பெறும்.), alternative text (ப்ரவுசரில் சுட்டியால் தேர்ந்தெடுக்கையில் மாற்று தலைப்பைக் காட்ட.), description (படம் பற்றிய குறிப்பு) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

படத்தின் இணைப்பும் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

படத்தை நிரந்தரமாக நீக்க Delete Permanently தேர்வை பயன்படுத்தலாம். பதிவில் படத்தை வலது/இடது/நடு –இசைவுகள் (alignments) செய்யலாம். அதற்கான வசதியும் அதே பக்கத்தில் உள்ளது.

தவிர, பதிவெழுதும் பகுதியிலேயே இணைக்கப்பட்ட படத்தை மறுமுறை தேர்ந்தெடுப்பதன் மூலமாகவும் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் பயன்படுத்த இயலும். அதைத் தவிர்த்த கூடுதல் வசதிகளும் கிடைக்கும்.

பதிவெழுதும் சாளரத்தின் வலப்பக்கம் கீழே set featured image என்றொரு வசதி உண்டு. சில தீம்கள் இவ்வசதியை அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பதிவையோ, பக்கத்தையோ பிரதிநிதித்துவப்படுத்த  ஒரு படத்தை இணைக்க இவ்வசதியை பயன்படுத்தலாம்.

Add Media தேர்வில் இருக்கும் இன்னுமொரு வசதி Create Gallery ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை ’ஆல்பம்’ போலக் காட்ட இவ்வசதி உதவும். அதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடியோ, வீடியோக்களை இணைப்பதற்கு முன் அவற்றின் பெயரை சரியாக மாற்றியமைக்க வேண்டும். இடைவெளிகள், குறியீடுகள் ($, &, %, etc) இல்லாத வகையில் பெயரிட வேண்டும். இது தவிர அவை download ஆவதில் சிக்கல்கள் எழலாம். அதைத் தவிர்க்க, embed வசதியை பயன்படுத்தலாம்.

சில தளங்கள் embed செய்யப்பட்ட ஆடியோ, வீடியோக்களின் இணைப்பைத் தரும் (வீடியோக்களுக்கு youtube!). அவற்றை பதிவெழுதும் சாளரத்தில், text ( visual / text ) வசதியை தேர்ந்தெடுத்து இணைக்கலாம். அந்த இணைப்பு hyperlink ஆகாமல் இருக்க வேண்டும்.

கீழ்க்காணும் தளங்களில்  embed செய்வதை wordpress வரவேற்கிறது!

·         YouTube (Only public videos)

·         Vimeo

·         DailyMotion

·         blip.tv

·         Flickr

·         Viddler

·         Hulu

·         Qik

·         Revision3

·         Scribd

·         Photobucket

·         Polldaddy

·         WordPress.tv (Currently only VideoPress type videos)

·         SmugMug

·         FunnyOrDie.com

·         Twitter

·         Instagram

·         SlideShare

·         SoundCloud

இன்னும் நிறைய படிக்கலாம்….இன்னொரு பதிவில்

தமிழ்
<iamthamizh@gmail.com>
@iamthamizh
thamizhg.wordpress.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: