வரைகலை பயனாளர் இடைமுகப்பிற்கு(GUI) பதிலாக கட்டளை வரியிலிருந்து கூட நாம் நேரடியாக நம்முடைய கோப்புகளை மாற்றியமைத்திடுதல், அச்சிடுதல், சேமித்தல் என்பன போன்ற நாம் விரும்பும் திறனுடைய பல்வேறு பணிகளை செயல்படுத்திடுவதற்கான.வசதிகளையும் வாய்ப்புகளையும் லிபர் ஆபிஸ் ஆனது கொண்டுள்ளது, இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் அல்லது Google Suite இற்கான பிரபலமான திறமூல மாற்றாக அமைகிறது. கட்டளை வரியிலிருந்து செயல்படும் திறன் லிபர் ஆஃபிஸின் திறன்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, பல்வேறு கோப்புகளை DOCX இலிருந்து EPUB க்கு LibreOffice உடன் மாற்ற உலகளாவிய கட்டளை-வரி வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்திகொள்வது என தெரிந்து கொள்க வேறு சில லிபர்ஆஃபிஸ் கட்டளை வரி குறிப்புகள் , தந்திரங்களையும் அறிந்துகொள்க. லிபர் ஆபிஸ் கட்டளைவரிகளின் ஒருசில மறைக்கப்பட்ட வாய்ப்புகளைப் பார்ப்பதற்கு முன், இப்பயன்பாடுகளுடனான வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக எல்லா பயன்பாடுகளும் வாய்ப்புகளை( options) ஏற்காது (பெரும்பாலான லினக்ஸ் பயன்பாடுகளில் செயல்படும் –help எனும் வாய்ப்பு போன்ற அடிப்படைகளைத் தவிர). $ லிபர் ஆஃபிஸ் – help ஆனது லிபர் ஆஃபிஸ் ஏற்றுக்கொள்ளும் பிற வாய்ப்புகளின் விளக்கங்களை வழங்குகிறது. வேறுசில பயன்பாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் இல்லை, ஆனால் லிபர்ஆஃபிஸ் ஆனது மதிப்புள்ள ஒருசில திரைகளைக் கொண்டுள்ளது, எனவே நாம் பயன்படுத்தி கொள்ள ஏராளமான அளவில் வசதிவாய்ப்புகள் இருக்கின்றன. மென்பொருளை இன்னும் பயனுள்ளதாக மாற்ற முனையத்தில் லிபர் ஆஃபிஸுடன் நாம் செய்யக்கூடிய ஐந்து பயனுள்ள செயல்கள் மட்டும் பின்வருமாறு.
1. நம்முடைய வெளியீட்டு வாய்ப்புகளைத் தனிப்பயனாக்குதல் .நாம் லிபர் ஆஃபிஸை எவ்வாறு துவங்குவது என்பதை மாற்றலாம். உதாரணமாக, நாம் லிபர் ஆபிஸின் word processor ஐ திறக்க விரும்பினால்:
$ libreoffice –writer # இது word processor ஐ துவங்குகிறது.நாம் அதன் பிற பயன்பாடுகளையும் இதேபோன்று திறக்கலாம்:
$ libreoffice –calc # இது கால்க் ஆவணத்தைத் துவங்குகிறது
$ libreoffice –draw # இது வெற்று வரைபட ஆவணத்தை துவங்குகிறது
$ libreoffice –web #இதுஇணையத்தை துவங்குகின்றது அதனோடு வெற்று HTML ஆவணம்
கட்டளை வரியிலிருந்து குறிப்பிட்ட உதவி கோப்புகளையும் அணுகலாம் அதற்கான கட்டளைவரி:
$ $ libreoffice –helpwriter
அல்லது விரிதாள் பயன்பாட்டுடன் நமக்கு உதவி தேவைப்பட்டால்அதற்கான கட்டளைவரி:
$ libreoffice –helpcalc
splash வகையிலான திரை இல்லாமல் லிபர் ஆஃபிஸைத் துவங்கிடலாம்அதற்கான கட்டளைவரி:
$ libreoffice –writer –nologo
தற்போதைய சாளரத்தில் நம்முடைய பணிகளை முடிக்கும்போது பின்னணியில் அதைத் துவங்கலாம்.அதற்கான கட்டளைவரி
$ libreoffice –writer – minimized
2. படிக்க மட்டும் பயன்முறையில் ஒரு கோப்பைத் திறத்தல். ஒரு முக்கியமான கோப்பில் தற்செயலாக மாற்றங்களைச் செய்வதையும் சேமிப்பதையும் தடுக்க –view எனும் கட்டளையைப் பயன்படுத்தி கோப்புகளை படிக்க மட்டும் எனும் பயன்முறையில் திறக்கலாம்அதற்கான கட்டளைவரி:
$ libreoffice –view example.odt
3. ஒரு ஆவணத்தை ஒரு மாதிரி பலகமாகத் திறத்தல். முகவரிதலைப்புத்தாள்( letterhead) அல்லது விலைப்பட்டியல் படிவமாக பயன்படுத்த நாம் எப்போதாவது ஒரு ஆவணத்தை உருவாக்கியிருக்கின்றோமா? லிபர் ஆஃபிஸில் மிகப்பெரிய உள்ளமைக்கப்பட்ட வார்ப்புரு அமைப்பு உள்ளது, அதனால் நாம் எந்தவொரு ஆவணத்தையும் -n எனும் வாய்ப்புடன் ஒரு மாதிரிபலகமாக மாற்றலாம் அதற்கான கட்டளைவரி:
$ libreoffice –writer -n example.odt
நம்முடைய ஆவணம் லிபர் ஆஃபிஸில் திறக்கப்படும், மேலும் நாம் அதில் மாற்றங்களைச் செய்யலாம், ஆனால் அசல் கோப்பை சேமிக்கும்போது அதை மேலெழுத முடியாது.
4. ஆவணங்களை மாற்றியமைத்தல் . ஒரு கோப்பை புதிய வடிவத்திற்கு மாற்றுவது போன்ற ஒரு சிறிய பணியை நாம்செய்ய வேண்டியிருக்கும் போது, அவ்வாறான பணியைச் செய்ய துவங்கிடும் போது பயன்பாடு துவங்குவதற்கு நீண்ட நேரம் ஆகலாம். இதற்கான தீர்வு –headless எனும் வாய்ப்பாகும், இது வரைகலை பயனாளர் இடைமுகத்தைத் துவங்காமல் லிபர் ஆஃபிஸ் செயல்முறைகளை செயல்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு ஆவணத்தை EPUB க்கு மாற்றுவது LibreOffice இல் மிகவும் எளிமையான பணியாகும் – ஆனால் இது libreoffice கட்டளையுடன் இன்னும் எளிதானது அதற்கான கட்டளைவரி:
$ libreoffice –headless –convert-to epub example.odt
wildcards களைப் பயன்படுத்தி டஜன் கணக்கான ஆவணங்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்:
$ libreoffice –headless –convert-to epub * .odt PDF, HTML, DOC, DOCX, EPUB,
எளிய உரை, பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வடிவங்களுக்கு கோப்புகளை மாற்றலாம்.
5. முனைமத்திலிருந்து அச்சிடுதல் பயன்பாட்டைத் திறக்காமல் கட்டளை வரியிலிருந்து லிபர் ஆஃபிஸ் ஆவணங்களை அச்சிடலாம்அதற்கான கட்டளைவரி:
$ libreoffice –headless -p example.odt
இந்த வாய்ப்பானது லிபர் ஆஃபிஸைத் திறக்காமல் இயல்புநிலை அச்சுப்பொறியில் அச்சிடுகிறது; இது நம்முடைய அச்சுப்பொறிக்கு ஆவணத்தை அனுப்புகிறது. ஒரு கோப்பகத்தில் அனைத்து கோப்புகளையும் அச்சிடுவதற்கான கட்டளைவரி:
$ libreoffice -p * .odt
(அச்சுப்பொறியில் அச்சிடும் தாட்கள் இல்லாதபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, நான் இந்த கட்டளையை செயற்படுத்தியுள்ளேன், , எனவே நாம் அச்சிடும் பணியை துவங்குவதற்கு முன் நம்முடைய அச்சுப்பொறியில் போதுமான தாட்கள்உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.)
PDF க்கு கோப்புகளை அச்சிடலாம். இதற்கும் –convert-to-pdf எனும் வாய்ப்பினைப் பயன்படுத்துவதற்கும் பொதுவாக எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் நினைவில் கொள்வது எளிது:
$ libreoffice –print-to-file example.odt – headless
கூடுதலாக: Flatpak, எனும் கட்டளை வாய்ப்புகள் நாம் லிபர் ஆஃபிஸை ஒரு Flatpak ஆக நிறுவியிருந்தால், இந்த கட்டளை வாய்ப்புகள் அனைத்தும் செயல்படுகின்றன, ஆனால் நாம் அவற்றை Flatpak வழியாக அனுப்ப வேண்டும். அதற்கான கட்டளைவரி:
$ flatpak run org.libreoffice.LibreOffice –writer
இது ஒரு வளாக நிறுவுகையை விட ஏராளமான அளவிலான சொற்களஞ்சியமாகும், எனவே லிபர் ஆஃபிஸுடன் நேரடியாக தொடர்புகொள்வதை எளிதாக்குவதற்கு Bash எனும்மாற்றுப்பெயரை எழுத நாம் தூண்டப்படலாம். ஆச்சரியமான முனைய வாய்ப்புகள் பக்கங்களைக் கலந்தாலோசிப்பதன் மூலம் கட்டளை வரியிலிருந்து லிபர் ஆஃபிஸின் திறனை எவ்வாறு நீட்டிக்க முடியும் என்பதைக் கண்டறிந்துகொள்க:
லிபர் ஆஃபிஸில் இவ்வாறான ஏராளமான கட்டளை வரி வாய்ப்புகள் இருப்பதை நாம் அறிந்திருக்கின்றோமா? அதனால் வேறு யாருக்கும் தெரியாத பல்வேறு வாய்ப்புகளை நாமும் முயன்று கண்டு பிடித்திடுவோமா?