க்னு/லினக்ஸ் கற்போம்

க்னு/லினக்ஸ் கற்போம்

 

 

மாணவர்களை க்னு/லினக்ஸ் இயங்குதளத்தின் சிறப்பைக் கேட்டால், நமக்கு கிடைக்கும் தீர்மானமான பதில் “இது இலவசம்“. கணினி அறிவியல் (CS) படிக்கும் மணவர்களுக்கு இதைவிட முக்கியமான பல அம்சங்கள் குறித்து தெரிந்திருப்பது அவசியம். பல ஆண்டுகளுக்கு முன்னால் யுனிக்ஸ், முக்கியமாக யுனிக்ஸ்-இண்டர்னல்

தெரியாத அமைப்புசார் மென்பொருள் பொறியியாளர்கள் (System software engineers) இருக்க மாட்டார்கள். யுனிக்ஸ்-மேதாவிகள் என்று பறை சாற்றிக்கொண்ட சில பயிற்சி நிறுவனங்களை அணுகிக் கற்றுக் கொள்ளவும் தொடங்கினர்.

 

இவர்கள் காலம் காலமாக பயிற்சி அளிப்பதில் ஒரு குறிப்பிட்ட முறையைக் கடைபிடித்து வருகிறார்கள். முதல் வகுப்பில், யுனிக்ஸ் ஐந்து பாகங்களைக் கொண்டது என்று பலகையில் எழுதுவார்கள்.

 

1. கோப்பு அமைப்பு (File system)

2. செயலாக்க மேலாண்மை (Process management)

3. நினைவக மேலாண்மை (Memory management)

4. உள்ளீட்டு வெளியீட்டு மேலாண்மை (I/O management)

5. வலையமைப்பு மேலாண்மை (Network management)

 

அடுத்ததாக கோப்பு அமைப்பு பற்றி விளக்குவார்கள்.

ஐநோடு டேபிள், அதில் 13 வரிகள் உண்டு. 10 நேரடிக் குறிப்பு, மீதி மூன்று மறைமுகக் குறிப்பு அடுத்து கோப்பமைப்பு நான்கு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

 

1. தொடக்கத் தொகுதி (Boot block)

2. வரிசைப்படுத்துத் தொகுதி (Index nodes=inode block)

3. தரவுத் தொகுதி (Data block)

4. முதன்மைத் தொகுதி (Super block)

 

ஒரு வன்வட்டில் (hard disc) பல கோப்பமைப்புகளைப் (file systems) போட்டுக்கொள்ளலாம். ஆனால், ஒன்றில் மட்டும் தொடக்கத் தொகுதியில் இயங்குதளத்தை (OS) நினைவகத்தில் ஏற்றி (loading in memory) அதனைச் செயல்படுத்துவதற்கான மென்பொருள் இருக்கும். மற்றவை காலியாக இருக்கும். இவற்றை வைத்துக்கொள்ளும் இடமே தொடக்கத் தொகுதி. அடுத்ததாக ஐநோடு தொகுதி குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நமக்குத் தூக்கம் வந்துவிடும்.

 

அடுத்ததாக ஐநோடு தொகுதி 13 வரி எழுதலாம், அதில் 10 நேரடிக் குறிப்பு மற்றது மறைமுகம். மறைமுகத்தில் மூன்று வகை:

சாதாரண (single) மறைமுகம், இரட்டிப்பு மறைமுகம், மூன்றுபங்கு மறைமுகம்.

 

பின்னர் வாத்தியாராக வந்த மாணவன் ஏதேதோ சொன்னதாக பக்கத்து இருக்கையிலிருப்பவர் கூறுவார். பின்னர் அவரும் தூங்கிவிடுவார். திடீரென எல்லோரும் இருகையிலேருந்து எழுந்துவிடுகிறார்கள்.

 

தேநீர் இடைவேளை என்று அறைவிட்டு நகர்ந்தார்கள்.

 

இதிலிருந்து வாத்தியாருக்கு “நடத்தும்போது எல்லாரும் தூங்கிட்டாங்க” என்ற விவரம் தெரியவருகிறது.

 

 

இப்போ, நாம இப்படி யுனிக்ஸ், க்னு/லினக்ஸ் படிச்சா இறுதிவரை புரியாது. அடுத்த இதழ் தொடங்கி நாம் கதை கதையா படிப்போம்.

 

இதைப் படிக்கிறவங்க எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? சில வினாக்கள் வருது. அதுக்கு விடை தேடி மின்னஞ்சல் அனுப்புங்க.

அதையும் இந்த பாடத்திலே சேர்த்துவிடுவோம்..

 

(1) யுனிக்ஸ்- ஒரு பல்பயனர் பல்பணி இயங்குதளம் (multi-user multi-tasking OS) பலபேர் சொல்லி, படித்து கேட்டது.

 

வினாக்கள்:

  1. பல்பயனர் (multi-user) என்றால் என்ன?
  2. பல்பணி (multi-tasking) என்றால் என்ன?
  3. ஒற்றைக்கூறு (monolithic), நுண் கருனி (micro kernel) என்று இயங்குதளத்தில் வேறு பாடுண்டு, ஒன்றொன்றின் சிறப்பு அம்சங்களையும், உதாரணங்களையும் மேற்கோள் காட்ட முடியுமா?

4. லினக்ஸ் உபயோகிக்கும்போது நச்சு நிரல்கள் (VIRUS)பரவுவதில்லையே, ஏன்?

எம் எஸ் விண்டோஸ் நச்சு நிரல் பரப்புவதன் காரணம் என்ன?

5. இயங்குதளங்களின் புதிய பதிப்புகளுக்கு முந்தைய பதிப்புகளை விட அதிக சேமிப்பிடமும் நினைவகமும் தேவைப்படும். ஆனால், இருக்கும் இடத்திலேயே புதிய லினக்ஸ் பதிப்புகளை ஏற்ற முடியும்.

 

இதன் காரணங்களை மாணவர்கள் தேடிக் கண்டுபிடித்து எனக்கு எழுதுங்கள்.

 

நடராஜன் இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலை பதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.

 

மின்னஞ்சல் : natarajan.naga@gmail.com

 

வலை பதிவு :

 

science-of-good-living.blogspot.com/

education-a-pain.blogspot.com/

science-of-spirituality.blogspot.com/
sprituality-is-knowledge.blogspot.com/

%d bloggers like this: