தயார்நிலை இயக்கமுறைமை (instant OS)

இன்றைய அவசரமான உலகில் வாழ்வந்து வருகின்ற நாம் தண்ணீருடன் காஃபிஅல்லது தேநீர் துகள்களை கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிய பின்னர் பால் சர்க்கரை கலந்து காஃபி அல்லது தேநீர் தயார்செய்வதற்கு அதிக கால அவகாசம் எடுத்து கொள்ளும்என்பதால் instant coffe , instant tea என்பவற்றை பாலும் சர்க்கரையும் கலந்து காஃபி அல்லது தேநீரை விரைவாக தயார்செய்து பயன்படுத்தி கொள்வோம் அதேபோன்று ஒரு கணினியில் புதியதாக ஒரு இயக்கமுறைமையை நிறுவுகை செய்து அதனை இயக்கியபின்னர் நாம்விரும்பும் செயல்களை செய்வதற்கு அதிக காலஅவகாசம் ஆகும் என்பதால் அதற்குபதிலாக எந்தவொரு கணினியிலும் இந்த instantOS எனும் தயார்நிலை இயக்கமுறைமையை நம்முடைய பென்ட்ரைவை அதற்கான வாயிலில் செருகியவுடன் இதனை செயல்படச்செய்து நம்முடைய பணியைமிகவிரைவாக செயல்படச் செய்து கொள்ளமுடியும் இது ஒரு Arch லினக்ஸ் எனும் லினக்ஸ் இயக்கமுறைமை அடிப்படையிலான வெளியீடாகும், பொதுவாக ஒரு இயக்க முறைமை எனில் ஏதாவது ஒரு கணினியில் நிறுவுகை செய்துதான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக கணினிக்கு வெளியிலிருந்துகூட இந்த இயக்கமுறைமையை கணினியில் நிறுவுகை செய்திடாமலேயே கையடக்க பயன்பாடுபோன்று செயல்படுத்தி பயன்பெறமுடியும் என்பதே இதனுடைய சிறப்புதன்மையாகும், ஆனாலும் இதனுடைய திறன்முழுவதும் அனைத்து பயனாளர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இதனுடைய முதன்மையான இலக்காகும். கணினிக்கு வெளியிலிருந்து இது செயல்பட்டாலும் இதனுடைய செயல்பாடுகள் அனைத்து்ம் மின்னல் வேகத்தில் உள்ளதுஎன்பதேஇதனுடைய தனிப்பட்ட சிறப்புதன்மையாகும் மேலும் இதனுடைய அனைத்துசெயல்களும் கணினிக்கு வெளியிலிருந்தே செயல்படுகின்றன
, அருகலைசெயல்பாடு முதல் கணினியின் திரைஒளிரும் தன்மை, பல்லூடகங்களின் விசைகள் ,திரைத்தாட்கள் (Wall papers) வரை அனைத்து கட்டுப்பாடுகளையும் கணினிக்கு வெளியிலிருந்து நேரடியாக செயல்படுமாறு கட்டமைக்கப் பட்டிருக்கின்றது. அவற்றை தனித்தனியாக கணினியில் நிறுவுகைசெய்திடாமல், விசைப்பலகை இடம்சுட்டி ஆகியவற்றை கொண்டு இவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என கற்றுக் கொள்ளலாம்
விசைப்பலகை அல்லது சுட்டி மூலம் கணினியில் கிட்டத்தட்டநாம் விரும்பிய அனைத்து செயல்களையும் செயற்படுத்திடலாம். இது எவ்வாறு பணியாற்றுகின்றது என யூகிக்க எளிதானதன்று, இதில் அனைத்து பணிகளும் மிக வேகமாகவும் திறமையாகவும் செயல்படுகின்றன. எந்தவிதமான பரிமாற்றங்களும் செய்யப்படவில்லை. உதாரணமாக அளவை மாற்றுவதற்கான காட்டி எதுவும் இதில் இல்லை. அளவை மாற்ற நிலை பட்டியில் சுட்டியின் சக்கரத்தை உருட்டலாம் என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால் போதுமான தாகும். இது திரையின் எந்தவொருபகுதியையும் காலியாக வைத்து வீணாக்காது, திரையின் அளவை மாற்றுதல் போன்ற பணிகளை செயல்படுத்திடுவதற்காக நாம் அதிக சிரமபட வேண்டியதில்லை. அதற்குபதிலாக சுட்டி பல்லூடக விசைகள் , விசைப்பலகை குறுக்குவழிகள் விசைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது . வழக்கமான இயக்கமுறைமையின் அதே செயல் தத்துவத்தை இயக்கமுறைமை முழுவதிலும்செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கமுறைமை செயலற்ற நிலையில் 130mb ரேமில் மட்டுமே அமர்ந்திருக்கிறது. இது வசதிகளை தியாகம் செய்யாமல் முடிந்தவரை சிறிய கொள்ளளவுடன் வருகின்றது.இதனுடைய சாளர மேலாளர் , பட்டியல்கள் ஆகியவை சி எனும் கணினிமொழியில் எழுதி உருவாக்கப்பட்டதாகும். சாளர மேலாளர் ஒருபோதும் ஒரு சதவிகித சிபியு அல்லது ஒரு மெகாபைட் ரேம் கூட எடுத்துக்கொள்வதில்லை, இது நமக்கும் நம்முடைய கணினிக்கும் முக்கியமான செயல்களில்அதிக கவனம் செலுத்த அனுமதிக்கின்றது.
இது ஒரு வரைகலை நிறுவியை கைவசம் வைத்துள்ளது, அவ்வரைகலை கருவியானது கணினியை செயல்படுத்திடுவதற்கு தேவையான எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கின்றது. உபுண்டு போன்ற எந்தவொரு லினக்ஸ் வெளியீடுகளையும் விரும்பும் நாம் கண்டிப்பாக இதனை பயன்படுத்திகொள்ளவிரும்பினால் instantos.github.io/எனும் இணையதள முகவரிக்கு செல்க

%d bloggers like this: