திறமூலக் கருவி மூலம் எந்தவொரு இணையதளத்தையும் லினக்ஸின் மேசைக்கணினி பயன்பாடாக மாற்றலாம்

Nativefier, Electron ஆகியவை எந்தவொரு இணையதளத்திலிருந்தும் மேசைக்கணினியின் பயன்பாடுகளை உருவாக்குகிறது.
Mastodonஎன்பதுபரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னலிற்கான ஒரு சிறந்த திற மூலகருவியாகும், .தற்போது பெரும்பாலானவர்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக Mastodon ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் Mastodon ஐ அதன் இணைய இடைமுக வசதியின் மூலம் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும் (திற மூலமாக இருந்தாலும், முனைமத்தின் அடிப்படையிலான பயன்பாடுகள் கைபேசிபயன்பாடுகள் உட்பட அதனுடன் தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன), ஆனால் சிலர்தனிப் பயன்பாட்டு சாளரங்களை விரும்புவார்கள் . அவ்வாறானவர்களுக்கும் பொருத்தமானதாக இந்தNativefier அமைந்துள்ளது, தற்போது இதன் வாயிலாக லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படக்கூடிய மேசைக்கணினியில் மேசைக்கணினி பயன்பாடாக Mastodon அல்லது வேறு எந்த இணைய பயன் பாட்டையும் அனுபவிக்க முடியும். இந்த Nativefier ஆனது ஒரு இணைய முகவரியை(URL) எடுத்து அதை Electronவரைச்சட்டத்துடன் மடக்கி மூடுகிறது, இது திறமூல Chromium உலாவியில் அதன் பின்புலமாக இயக்குகிறது, ஆனால் அவ்வாறு இயங்கிடும்போது அதனுடைய சொந்த பயன்பாடுபோன்றே இயங்குகின்றது. இந்த Nativefier ஆனது MIT உரிமத்தின் கீழ் உரிமம் பெற்றது , இது Linux, Windows , mac ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படுமாறு கிடைக்கின்றது.
Nativefier ஐ நிறுவுகைசெய்தல்
Nativefierஐ நிறுவுகை செய்வதற்கு Node.js என்பது தேவையாகும் . பின்வருகின்ற கட்டளைவரியின் வாயிலாக இதனை மிக எளிதாக நிறுவுகை செய்து இயக்கலாம்:
$ sudo npm install -g nativefier
உபுண்டு செயல்படுகின்ற மேசைக்கணினியெனில், முதலில் NodeJS ஐ மேம்படுத்த வேண்டியிருக்கும், எனவே Nativefier ஐ நிறுவுகைசெய்திடும் போது Node இன் எந்த பதிப்புகள் தேவை என்பதை சரிபார்த்திடுக. அவ்வாறு நிறுவுகை செய்யப்பட்டதும், Nativefier இன் பதிப்பு நிறுவுகைசெய்யப்பட்டுள்ளதா என்பதை பின்வருகின்ற கட்டளைவரியின் வாயிலாக சரிபார்க்கலாம்:
$ nativefier –version
45.0.4
செயல்படும்போது இது ஆதரிக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் பட்டியலிடுகிறது.
அமைவு (Setup)செய்தல்
இதன்வாயிலாக பயன்பாடுகளை உருவாக்கத் துவங்குவதற்கு முன், ~/NativeApps எனும் புதிய கோப்புறையை உருவாக்கிடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. இது பயன்பாடுகளை ஒழுங்காகஒரேஇடத்தில் வைத்திருக்க உதவுகிறது. அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு
$ mkdir ~/NativeApps
cd ~/NativeApps

Mastodonஇற்கான பயன்பாட்டை உருவாக்குதல்
mastodon.technologyக்கான பயன்பாட்டை உருவாக்குவதன் மூலம் நம்முடைய பணியை துவங்கிடலாம். அதற்காக பின்வருகின்ற கட்டளைவரிகளைப் பயன்படுத்திடுக:
$ nativefier –name Mastodon \
–platform linux –arch x64 \
–width 1024 –height 768 \
–tray –disable-dev-tools \
–single-instance mastodon.technology
இந்த எடுத்துக்காட்டில் உள்ள வாய்ப்புகள் பின்வருவனவற்றைச் செய்கின்றன:
• –name: Sets the app name to Mastodon
• –platform: Sets the app’s platform to Linux
• –arch x64: Sets the architecture to x64
• –width 1024 –height 768: Sets the apps’ dimensions on launch
• –tray: Creates a tray icon for the app
• –disable-dev-tools: Disables Chrome dev tools
• –single-instance: Only allows one instance of the app

அந்த ஒற்றை கட்டளையை இயக்குவது திரையில்பின்வரும் வெளியீட்டைக் காண்பிக்கிறது:
Converting icons…
Packaging… This will take a few seconds, maybe minutes if the requested Electron isn’t cached yet…
Packaging app for platform linux x64 using electron v13.4.0 Finalizing build…
App built to /home/tux/NativeApps/Mastodon-linux-x64, move to wherever
it makes sense for you and run the contained executable file (prefixing with ./ if necessary)
Menu/desktop shortcuts are up to you, because Nativefier cannot know where you’re going to move the app. Search for “linux .desktop file” for help, or see wiki.archlinux.org/index.php/Desktop_entries

இதில் கோப்புகள் /home/tux/NativeApps/Mastodon-linux-x64 எனும் கோப்புறையில் வைக்கப்படுவதை திரையின் இந்த வெளியீடு காண்பிக்கிறது. இந்தக் கோப்புறைக்கு மாறிடும்போது, அதில்Mastodon என்ற கோப்பு இருப்பதைக் காணலாம். இந்தபயன் பாட்டை செயல்படுத்திடத் தொடங்கும்போது இதுவே முதன்மையாக இயங்கக்கூடியதாகும். அதைத் தொடங்குவதற்கு முன், அதற்கு பொருத்தமான அனுமதிகளை வழங்க வேண்டும் அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு.
$ cd Mastodon-linux-x64
chmod +x Mastodon
இப்போது, Linux பயன்பாட்டின் வெளியீட்டைக் காண ./Mastodon ஐ இயக்குக! உடன்வலைப்பதிவுக்கான பயன்பாட்டை உருவாக்குகிறது வேடிக்கைக்காக, வலைப்பதிவு இணையதளத்திற்கும் ஒரு பயன்பாட்டை உருவாக்கிடலாம். தொழில்நுட்ப வலைப்பதிவுக்கு லினக்ஸ் பயன்பாடு இல்லை என்றால் என்ன பயன்? அதற்கான கட்டளை வரிகள் பின்வருமாறு:
$ nativefier -n DrSKuppan \
-p linux -a x64 \
–width 1024 –height 768 \
–tray –disable-dev-tools \
–single-instance DrSKuppan.in
$ cd DrSKuppan-linux-x64
chmod +x DrSKuppan

findmymastodon.com க்கான பயன்பாட்டை உருவாக்குதல்
இறுதியாக, செயல்திட்டத்திற்கான பயன்பாடு,findmymastodon.com. என்பதை உருவாக்கிடுவதற்கான கட்டளை வரிகள் பின்வருமாறு:
$ nativefier -n findmymastodon \
-p linux -a x64 \
–width 1024 –height 768 \
–tray –disable-dev-tools \
–single-instance findmymastodon.com
$ cd findmymastodon-linux-x64
chmod +x findmymastodon

லினக்ஸின் மேசைக்கணினி பயன்பாட்டின் உருவப்பொத்தான்களை உருவாக்குதல் பயன்பாடு உருவாக்கப்பட்டு, இயங்கக்கூடியவை தயாராக இருப்பதால், இது மேசைக்கணினி பயன்பாட்டின் உருவப்பொத்தான்களை உருவாக்குவதற்கான நேரமாகும். ஒரு விளக்கமாக, mastodon துவக்கிக்கான மேசைக்கணினி பயன்பாட்டின் உருவப்பொத்தானை எவ்வாறு உருவாக்குவது முதலில், mastodonஇற்கான உருவப்பொத்தானைப் பதிவிறக்கம் செய்திடுக. உருவப்பொத்தானை அதன் Nativefier பயன்பாட்டு கோப்பகத்தில் icon.png ஆக வைத்திடுக. Mastodon.desktop என்ற கோப்பை உருவாக்கி, இந்த உரையை உள்ளிடுக:
[Desktop Entry]
Type=Application
Name=Mastodon
Path=/home/tux/NativeApps/Mastodon-linux-x64
Exec=/home/tux/NativeApps/Mastodon-linux-x64/Mastodon
Icon=/home/tux/NativeApps/Mastodon-linux-x64/icon.png
மேசைக்கணினி துவக்கியாக இருக்க .மேசைக்கணினியின் கோப்பை லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படுகின்ற மேசைக்கணினிக்கு நகர்த்தலாம். அதன் நகலை ~/.local/share/applications எனும் கோப்புறையில் வைக்கலாம், எனவே இது நம்முடைய பயன்பாட்டு பட்டி அல்லது செயல்பாட்டுத் துவக்கிபட்டியில் காண்பிக்கின்றது.

%d bloggers like this: