கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – Tamil Linux Community – தொடக்க விழா நிகழ்வு

 

 

கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம்,

தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி).

Tamil Linux Community YouTube Channel Link:

youtube.com/channel/UCumTlpC2nok42RJ3yRsbLRA

நோக்கம்

வளர்ந்துவரும் தொழில்நுட்ப காலத்தில் கட்டற்ற மென்பொருளின் தேவையையும், முக்கியத்துவத்தையும் பல சாமான்ய, தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்த்து அவர்களும் கட்டற்ற மென்பொருளை கற்கவும், பயன்படுத்தவும், மேம்படுத்தவும், ஒரே தளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்வு

இது 2022ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, 16-01-2022 அன்று வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்வில் இந்த தளத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் தளத்திற்கான நிபந்தனைகள் கலந்துரையாடப்பட்டது. இறுதியாக தற்போது இணைந்துள்ள பல கட்டற்ற மென்பொருள் குழுமங்கள், தன்னார்வலர்கள் குறித்து ஒரு சிறிய அறிமுகம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தொடக்க விழா நிகழ்வு – காணொளி

ஒரு வாரத்திற்கு முன்பே இதற்கான திட்டப்பணிகள் கலந்துரையாடப்பட்டு தொடங்கப்பட்டது. இதில் தங்களது பரிந்துரைகளையும், பங்களிப்பையும் பகிர்ந்துகொண்ட சீனிவாசன்,மோகன், தகவலுழவன், மணிமாறன் கலீல், லெனின், தனசேகரன், பரதன் மற்றும் பல கட்டற்ற மென்பொருள் தன்னார்வலர்களுக்கு நன்றிகள்.

எவ்வாறு பங்களிப்பது

கட்டற்ற மென்பொருள் மீது ஆர்வம் கொண்ட யாவரும் கட்டற்ற மென்பொருள் சார்ந்த நுட்பங்களை பகிர்ந்து பங்களிக்கலாம். Tamil Linux Community Telegram குழுவில் இணைவதன் மூலம் தாங்களும் பங்களிக்கலாம்.

Telegram channel Link: t.me/+WM6L_2CJ8Sc4ODI1

கட்டற்ற மென்பொருளை தமிழில் கற்போம் கற்பிப்போம் பகிர்வோம்.

 

— மணிமாறன்

 

%d bloggers like this: