திறமூல CMS இயங்குதளங்கள் பற்றிய கட்டுக்கதைகள்

பொதுவாக தற்போது எந்தவொரு நபரும் தனக்கென ஒருஇணையதளத்தை உருவாக்குவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. Drupal அல்லது WordPress போன்ற திறமூல தளத்தையோ அல்லது Adobe அல்லது Microsoft போன்ற தனியுரிமை தளத்தையோ தேர்வு செய்யலாம். இவ்விரண்டு வாய்ப்புகளில் நாம் உருவாக்கப்போகும் இணையதளத்திற்கு எது சிறந்தது?
அதற்காக கருத்தில் கொள்ள வேண்டியவை:1.எவ்வளவு பயனர் ஆதரவைப் பெறக்கூடும்?, 2.பாதுகாப்பிற்கு எது சிறந்தது? ,3.இதற்கான செலவு நமக்கு கட்டுப்படியாககூடியதாக உள்ளதா?
வரையறுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, இதனை தேர்வு செய்வது என்பது ஒரு திறமூல தளம் அல்லது Wix அல்லது Squarespace போன்ற குறைவான நெகிழ்வுத்தன்மை கொண்டது என்பதாக இருக்கும் – ஒரு தனியுரிமை தளத்தின் விலை இந்நிறுவனங்களால் அவற்றை பெறமுடியாததாக இருக்கலாம். எவ்வாறாயினும், ஒரு பெரிய நிறுவனத்திற்கு, இவ்விரண்டு வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்வதற்கு முன் இவைகளின் நன்மைகளையும் தீமைகளையும் கவணத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
தனியுரிமை தளங்கள் பல காரணங்களுக்காக பல பெரிய நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருக்கும். வாடிக்கையாளரின் வணிகத் தேவைகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சிறந்த தளங்களை வழங்குவதாக உறுதியளிக்கின்றன கூடுதலாக, தனியுரிமை தளங்கள் பொதுவாக முழு புரவலர் திட்டங்களை வழங்குகின்றன. CMSக்குப் பின்னால் உள்ள நிறுவனம் அனைத்து புதுப்பிப்புகள், மேம்படுத்தல்கள், பாதுகாப்புச் சிக்கல்கள் , பிழைகள் – ஆகியவற்றை பெரும்பாலும் எந்த நேரத்திலும் (24/7) கையாளும் திறன்கொண்டதாக உள்ளது.
தனியுரிமை மென்பொருட்கள் அதிக விலையுடன் இருந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு நியாய உணர்வு இருக்கிறது: குறைந்த பட்சம் நாம் செலுத்துகின்ற கட்டணத்திற்கு ஏற்ப அதற்கானசேவைகளைப் பெறுவோம்.

இருப்பினும், ஜெனரல் எலக்ட்ரிக், டெஸ்லா, ஐபிஎம், பாரமவுண்ட் குளோபல், யுனைடெட் ஏர்லைன்ஸ் , ராயல் ஃபேமிலி உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல Drupalஎனும் திறமூலசெயல்திட்டத்தினை தங்களுடைய விருப்பமான CMS ஆகப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்டாரியோ அரசாங்கம், கனடியன் பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS), பல அமெரிக்க மாநில அரசாங்கங்கள் , உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பிற அரசு நிறுவனங்கள் ஆஸ்திரேலியா அரசு ஆகியன Drupal இல் செயல்படுகின்றன என்பதே உண்மையான களநிலவரமாகும்.
எனவே, தனியுரிமை CMS பயன்பாடுகளின் வழங்குநர்களால் கூறப்படும் பல நன்மைகள் அவைகளில் இருந்தபோதிலும், இணைய மேம்பாட்டிற்கான பெரிய அளவு வரவுசெலவுதிட்டத்தைக் கொண்ட நிறுவனங்கள் ஏன் திறமூல தளத்தைத் தேர்வு செய்கின்றன?

நிதிப் பொறுப்பு முதல் சமூககுழுவின் ஆதரவு வரை இதற்கான பல பதில்கள் உள்ளன. இந்த காரணிகள் திறமூல மாதிரியின் சாத்தியமான குறைபாடுகளை மிக அதிகமாக ஈடுசெய்ககின்றன.
இவ்வாறான சூழலில் நாம் எதை தெரிவுசெய்வது என முடிவெடுப்பதில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் தனியுரிமை, திறமூல தளங்களைச் பற்றிய சில பிரபலமான கட்டுக்கதைகளும் உள்ளன அவைகளை இப்போது காண்போம்

கட்டுக்கதை #1: தனியுரிமை தளங்கள் சிறந்த பயனாளர் ஆதரவை வழங்குகின்றன
இது தனியுரிமை இயங்குதளங்களின் விற்பனைக்கு ஆதரவான முக்கிய கருத்துகளில் ஒன்றாகும், நம்முடைய தளத்தில் ஏதேனும் தவறு நடந்தால் அல்லது நமக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சேவை ஏதேனும் தேவைப்பட்டால் அதன் விற்பனையாளர்கள் 24/7 என்றவாறு எப்போதும் எந்தநேரத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதை உறுதியளிக்கிறார்கள். இந்த 24/7 ஆதரவு என்பதும் நாம் வழங்கிடும் கட்டணத்திற்குள்ளேயே வருகிறது. எதிர்பாராத விதமாக திடீரென ஏதேனும் பிரச்சினை எழுந்தால் என்ன செய்வது என அவசரநிலைகளைப் பற்றி கவலைப்படும் நிறுவனங்களுக்கு, இது வெளிப்படையாக ஒரு கவர்ச்சியான சலுகையாகும், இது பலருக்கு அவர்கள் வழங்கும் விலையை நியாயப் படுத்துகிறது. இருப்பினும், தனியுரிமை விற்பனையாளர்கள் நமக்குச் சொல்லாதது என்னவென்றால், Drupal போன்ற திறமூல தளங்கள்கூட அதே மாதிரியான 24/7சேவையை வழங்குகின்றன (பொதுவாக ஒரு முகவர், Acquia அல்லது Pantheon போன்ற உள்கட்டமைப்பு கூட்டாளியுடன் இணைந்து). இது அவர்களின் தன்னார்வத் தொண்டர்கள் , ஸ்பான்சர் செய்யப்பட்ட பங்களிப்பாளர்களின் வலைபின்னல்களின் மூலம் இதற்காக எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்குகப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக, Drupal ஆனது தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தளத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கான ஒத்துழைப்புடன் செயல்படும் நூறாயிரக் கணக்கான பங்களிப்பாளர்களைக் கொண்ட உலகளாவிய சமூககுழுவால் ஆதரிக்கப்படுகிறது.
இந்த Drupal சமூககுழுவிடம்,நாம் இந்த தளத்தினை பயன்படுத்திடும்போது ஏற்படும் ஒரு பிழையைக் கண்டறிந்து, அதை சரிசெய்திடுமாறு கோரினால், அதற்கான பதில் – உடனடியாகஇல்லை என்றாலும் – பொதுவாக விரைவாக கிடைத்திடும். பல்வேறு நாடுகளின் அரசாங்க தளங்கள்மட்டுமல்லாது அனைத்து Drupal பயனர்களுக்கும் இதனுடைய பரந்து விரிந்த சமூககுழுவானது 24/7 ஆதரவை, அளிக்கிறது.

தனியுரிமை இயங்குதளங்கள் இந்த வகையான சமூககுழுவிற்கு இணையாக உள்ளன, ஆனால் அவை பெரும்பாலும் மிகச் சிறியதாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, Sitecore 20,000 மேம்படுத்துநர்களைமட்டுமே கொண்ட சமூககுழுவினை கொண்டுள்ளது என்று விளம்பரப்படுத்துகிறது. Drupal மேம்படுத்துநர் சமூககுழுவுடன் ஒப்பிடுகையில் இது மிககுறைந்த அளவாகும்.

கட்டுக்கதை #2: திறமூலத்தை விட தனியுரிமை மிகவும் பாதுகாப்பானது
இது தனியுரிமையாளர்களால் வேண்டுமென்றே பரப்பப்பட்ட கட்டுக்கதையாகும் – எனப் புரிந்துகொள்ளலாம். திறமூலக் குறிமுறைவரிகள், அதன் இயல்பிலேயே, அனைவருக்கும் பொதுவில் கிடைக்கும். இதற்கு நேர்மாறாக, தனியுரிமை இயங்குதளங்கள் தங்கள் குறிமுறைவரிகளின் தளங்களை யாரும் காணாதவாறு பூட்டி வைத்திருக்கின்றன. தனியுரிமை விற்பனையாளர்களின் இலாப நோக்கமானது மோசமான செயல்படுபவர்களைக் கண்டறிந்து நடுநிலையாக்க அவர்களுக்கு அதிக (நிதி) ஊக்கத்தை அளிக்கிறது.

பிரபலமற்ற உண்மை என்னவென்றால், தனியுரிமை இயங்குதளங்கள் அவற்றின் திறமூல சகாக்கள் போன்ற தாக்குதல்களுக்கு ஒவ்வொரு பிட்டும் பாதிக்கப்படக் கூடியவை – இல்லை என்றால்.
ஒன்று, பெரும்பாலான பாதுகாப்பு மீறல்கள் ஹேக்கர்கள் பலவீனமான இடங்களுக்கான மூலக் குறிமுறைவரிகளைத் தேடுவதிலிருந்து வருவதில்லை, ஆனால் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் தோல்விகள், முறையற்ற மென்பொருள் அமைப்பு, எளிதான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல், தரவு சரிபார்ப்பு செயல்முறைகள் இல்லாமை செயல்படுத்த இயலாமை போன்ற தவிர்க்கக்கூடிய மனித குறைபாடுகளால் ஏற்படுகின்றன. இந்த குறைபாடுகள் தனியுரிமை தளத்தில் இருப்பதை விட திறமூல தளத்தில் நிகழும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.
மேலும், Drupal போன்ற இயங்குதளங்களின் திறமூல தன்மையானது இணையப் பாதுகாப்பிற்கு வரும்போது கூடுதல் உதவியளிக்கின்றது. திறமூலக்குறிமுறைவரிகள் என்றால், விவரம் தெரிந்தவர்கள் எவரும் பாதிப்புகளைத் எளிதாக தேடி அடையாளம் காண முடியும்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேம்படுத்துநர்களைக் கொண்டபாதுகாப்பாளர்கள் திரைக்குப் பின்னால் பங்களிப்பதால், Drupal அதன் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்று சொல்வது சரியாகும். இதற்கு நேர்மாறாக, தனியுரிமை விற்பனையாளர்கள் இணைய பாதுகாப்பு பணியாளர் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமேஎனவரையறுக்கப்பட்டுள்ளனர்.

கட்டுக்கதை #3: தனியுரிமை விலை அதிகம், எனவே பயன்பாடுகளை செயல்படுத்திடும்போது அதிக மதிப்பைப் பெறுவோம்
உண்மையில், திறமூல , தனியுரிமை இணையதளங்களுக்கு இடையே தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே உண்மையான களநிலவரமாகும். இவை அனைத்தும் தளங்களை உருவாக்குவதற்கான பணியின் தரத்தைப் பொறுத்தது ஆகும். எந்தவொரு இணையதள செயல் திட்டமும் வரவுசெலவு திட்டத்தினை மீறல்களால் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும், திறமூல தளங்கள் தனியுரிமை தளங்களை விட உண்மையில் அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளன.

ஒரு தனியுரிமை தளத்தைத் தேர்வுசெய்யும்போது, அவ்வுரிமத்திற்கான தொகையை கண்டிப்பாக செலுத்துவதாக நாம்உறுதியளிக்கின்றோம். இது ஒரு முறை செலவாக இருக்கலாம் அல்லது தொடர்ச்சியான சந்தாக் கட்டணமாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில், தனியுரிமை வழங்குநர்கள் “பயன்படுத் திடுகின்ற ஒவ்வொரு நபருக்கும்” என்ற அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள், அதாவது நம்முடைய குழு எவ்வளவு பெரிதாகின்றதோ, அதற்கேற்ப நம்முடைய இணையதளத்தைப் பராமரிப்பதற்கான கட்டணத்தை கூடுதலாக செலுத்தவேண்டும். , இதற்கு மாறாக, ஒரு திறமூல தளத்திற்கு வடிவமைப்பில் செலவழிப்பதைத் தாண்டி வேறெதுவும்செலவாகாது, மேலும் இது உண்மையில் செலவு நிலைப்பாட்டில் இருந்து மிகவும் கணிக்கக்கூடியது.
அரசாங்கங்களுக்கும் அரசுநிறுவனங்களுக்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் இணையதள மேம்பாடு புதுப்பித்தல் செலவுகள் மிகவும் குறைவாகும் Canada.ca URL இன் கீழ் பரந்த அளவிலான இணையதளங்களை மறுகட்டமைக்க அடோப்பை பணியமர்த்திய பின்னர் கனடா அரசாங்கம் எதிர்மறையான செய்திகளை எதிர்கொண்டது. 2015 இல் $1.54 மில்லியனாக மதிப்பிடப்பட்ட ஒரு செயல்திட்டம் அடுத்த ஆண்டு $9.2 மில்லியனாக உயர்ந்தது. அதனால் அவை திறமூலதளத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டனர்
Drupal போன்ற திறமூல தளங்களில் கட்டமைக்கப்பட்ட இணையதளங்கள் உருவாக்கிடுவதற்கான செலவுகள் எப்பொழுதும் கணிக்கக்கூடியதாக குறைந்த அளவே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய நன்மையாகும்.
கூடுதலாக திறமூல தளங்கள் பரந்தஅளவிற்கு திறனை அடிப்படையாக கொண்டவைகளாகும்
சிக்கலான இணையத் தேவைகளைக் கொண்ட ஒரு பெரிய அரசு நிறுவனமாக இருந்தால், கிடைக்கக்கூடிய திறமையின் அடிப்படையில் எனும் போது திறமூல இணைய தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது Drupal சமூககுழுவின் அளவு, Sitecore நிபுணர்களின் குழுவினைக் காட்டிலும் மிக அதிகமாகும்.

இதை பயன்படுத்தி கொள்வதற்காகவென நம்முடைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான வசதி போன்ற வேறுபாடுகள் பல உள்ளன. முக்கியமாக Drupal இல் பயன்படுத்தி கொள்கின்ற பணியாளர்களுக்கான பயிற்சியானது பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கிறது.

குறிப்பு: அவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சியை வழங்குகிறார்கள். அடோப் மூலம் நடத்தப்படும் ஏதாவது ஒரு உரிமம் பெற்ற மேம்படுத்துராக மாறுவது, என்பது மாறாக, மிகவும் சிக்கலான ,அதிக விலையுயர்ந்த செயலாகும்.

%d bloggers like this: