நம்முடைய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி வடிவமைத்திட Calculist. எனும் கட்டற்ற கருவியை பயன்படுத்தி கொள்க

 நம்முடைய மனதில்ஏராளமான அளவில் ஆலோசனைகள். திட்டங்கள் எப்போதும் உருவாகி கொண்டேயிருக்கின்றனஅவைகளிலிருந்து நம்மில்ஒருசிலர் ஒரு யதார்த்தத்தை உருவாக்க விரும்புகின்றோம் எவ்வாறாயினும்அந்த எண்ணங்கள், யோசனைகள் , திட்டங்கள் போன்றவை பெரும்பாலானோர்களின் மனதில் தெளிவான வடிவத்திற்கு கொண்டுசெல்லாமல் குழப்பத்திலேயே கரைந்து மறைந்து போகின்றன அவ்வாறான நிலையில் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு ஒன்றினை எடுத்து அவை எல்லாவற்றையும் ஒழுங்கமைவுசெய்து நல்லபயனுள்ள வடிவத்துடன் வெளிப்படுத்திடுவது சிறந்தசெயலாகுமல்லவா இதற்காக ஏராளமான அளவில் தனியுடைமை மென்பொருட்கள் உள்ளன அவைகளைவிட அவகைளுக்கு சிறந்த மாற்றாக Calculist எனும் கட்டற்ற கருவி விளங்குகின்றது.

இதனுடைய குறிப்புகள் (Notes) என்பதன் வாயிலாக நம்முடைய எண்ணங்களையும் ஆலோசனைகளையும் தரவுகளையும் பட்டியலாகஆக்கமுடியும் அதனை தொடர்ந்துஒரு குறிப்பிட்ட பட்டியலை பெரிதாக்குவதன் மூலம்நம்முடைய கவனத்தை மையப்படுத்திபரந்த சூழலில் பெரிதாக்கி கவணித்து பார்த்திடவும் முடியம் அவற்றுள் .குழப்பமான ஒழுங்கற்ற பட்டியல்களை நீக்கம் செய்து சரியானதை தேவையெனில் விரிவாக்கம் செய்து கொள்ளமுடியு ம் இதனை நம்முடைய தேவைகேற்ற வகையில் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதனை கொண்டு நம்முடைய சிந்தனைகளை கட்டுரைகளாக கதைகளாக நாம்விரும்பியவாறு உருவாக்கி மேம்படுத்தி கொள்வதற்கான மிகச்சிறந்த கருவியாக இந்த Calculist எனும் கட்டற்ற கருவி திகழ்கின்றது . இதனுடைய கட்டளைகள்(Commands) என்பதன் வாயிலாக நம்முடைய பணிகளை தானியங்கியாக செய்துகொள்ளமுடியும் மேலும் கைகளால் செயல்களை செயற்படுத்திடுவதற்கு பதிலாக ஒருசில விசைகளை அழுத்துவதன் வாயிலாக எளிதாக செயல்படுத்தி கொள்ளலாம் மேலும் அவைகளை பட்டிலாக செய்து அவைகளை தெரிவுசெய்துகொள்ளமுடியும் மிகமுக்கியமாக நாம அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகளின் வாயிலாக செயல்படுத்தி பயன்பெறமுடியும் .

இதனுடைய செயலிகளின்(Functions) வாயிலாக தரவுகளையும் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும் நிதிநிருவாக பணிகளையும் புள்ளியியல் பகுப்பாய்வுகளையும் முக்கிய அளவீடுகளை கண்காணித்திடவும் இதன்வாயிலாக முடியும் இவ்வாறாக பெறப்படும் இறுதி முடிவுகளை CSV கோப்புகளாக இதில் பதிவேற்றும்செய்து கொள்ளமுடியும் .இது சேவையாளர் கணினியிலும் வாடிக்கையாளர்கணினியிலும் செயல்படும் திறன்மிக்கது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக கட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லை பயனாளர் பெயர கடவுச்சொற்களுடன் பதிவுசெய்து உள்நுழைவுசெய்தால் மட்டும் போதுமானதாகும் இது MIT எனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு calculist.io/ எனும் இணைய முகவரிக்கு செல்க

%d bloggers like this: