முடிவடையும் 2018 ஆம் ஆண்டின் அதிகம் பயன்படுத்தப்பட்ட கட்டற்ற பயன்பாடுகள்

1. Cdrtfeஎனும் கட்டற்ற பயன்பாடானது வெளிப்புற நினைவகமான குறுவட்டு(CDs), நெகிழ்வட்டு ( DVDs) ஆகியவற்றில் நாம் பாதுகாப்பாக பிற்காப்பாக வைத்து கொள்ள விரும்பும் .wav, .mp3, .flac and .oggபோன்ற எந்தவகை கோப்பகளையும் கொண்டுசென்று எழுதிட உதவுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள cdrtfe.sourceforge.io/ எனும் இணையமுகவரிக்கு செல்க

2.Shotcut என்பது கானொளிபடகாட்சி கோப்புகளை கையாளுவதற்கு உதவிடும்மிகச்சிறந்த கட்டற்ற பயன்பாடாகும்சமீபத்திய கானொளி காட்சி படகோப்பு வடிவமைப்புமட்டுமல்லாது .bmp , .gif, .png and .svg. ஆகிய வடிவமைப்பு கோப்புகளையும் கையாளும்திறன்மிக்கது கானொளி படத்துடன் ஒலியைபிரித்தல் சேர்த்தல் ஆகிய பணிகளையும் கையாளமுடியும் MLT XML ஆகிய செயல்திட்டத்திலும் பயன்படக்கூடியது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள shotcut.org/எனும் இணையமுகவரிக்கு செல்க

3.TestDisk மிகமுக்கிய கோப்புகளை வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படும் கணினியில் கை தவறுதலாக நீக்கம் செய்துவிட்டீர்கள் அல்லது நம்முடைய கணினியின் இயக்க முறைமையானது செயல்படாமல் முடங்கிவிட்டது ஆயினும் அதில்அதிமுக்கியமான கோப்புகளும் சேர்ந்து முடங்கிவிட்டது என்ற இக்கட்டான நிலையில் கைகொடுக்கவருவதுதான் இந்த பயன்பாடாகும் FAT12/16/32 ,NTFS. MFT ஆகிய பகுதிமட்டுமல்லாது FAT, exFAT, NTFS and ext2/ext3/ext4 ஆகிய பாகப்பிரிவினை பகுதியிலிருந்தும் இவ்வாறான கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள www.cgsecurity.org/wiki/TestDisk எனும் இணையமுகவரிக்கு செல்க

4. eHourஎன்பது குறிப்பிட்ட நபர் அல்லது பணியாளர் எவ்வளவு நேரம் குறிப்பிட்ட பணியை அதாவது செயல்திட்டத்தை முடிக்க எடுத்து கொண்டார் என அறிந்து கொள்ளஇந்த பயன்பாடு உதவுகின்றது கணினி மட்டுமல்லாதுஇணையவாயிலாக பணிபுரிபவர்களின் பணிநேரத்தையும் கணக்கிட உதவுகின்றது அவ்வாறு பணிபுரியும் ஊழியர்களின் வாரவிடுப்பு சிறுவிடுப்பு மருத்துவவிடுப்பு போன்றவைகளையும் கணக்கெடுக்கஉதவுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள ehour.nl/ எனும் இணையமுகவரிக்கு செல்க

5.OpenElement என்பது இணைய பக்கங்களை வடிவமைப்பதில் சிறந்த கட்டற்ற பயன்பாடாக விளங்குகின்றது HTML5 , CSS3 ஆகியவற்றை ஆதரிக்கின்றது அனைத்து இணைய உலாவிகளுடனும் ஒத்தியங்குகின்றது ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள இணையபக்கத்தையும் திருத்தம் செய்து மேம்படுத்தி கொள்ளவும் பயன்படுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள www.openelement.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க

%d bloggers like this: