மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் எனும் பயன்பாட்டிற்கு மாற்றானதிறமூல பயன்பாடுகள்

பல தசாப்தங்களாக, மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச்ஆனது மின்னஞ்சல், குழுவான மின்னஞ்சல் ஆகிய சேவைகளுக்கான சந்தையை ஆட்சி செய்து வருகிறது. இது மிகஉயர்நந்த கார்ப்பரேட் உலகில் தன்னிகரற்ற பயன்பாடாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது, மேலும் அவுட்லுக் மின்னஞ்சல் வாடிக்கையாளர் குழு விற்க்கான உண்மையான தரநிலையாக மாறியுள்ளது. மிகமுக்கியமாகஇந்த பயன்பாடு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால், பயனாளர்கள் மேசைக்கணினி அல்லது கைபேசி வாடிக்கையாளரைப் பயன்படுத்தினாலும், பல்வேறு வகையிலும் உதவிடுகின்ற திறன்மிக்க மென்பொருளாகவும் தன்னுடைய வசதிகளை அணுகிடுமாறு அமைந்துள்ளது. இருப்பினும், தற்போது பல நிறுவனங்கள் தங்கள் தரவுகளை மைக்ரோசாஃப்ட்டின் மேககணினியில் சேமிப்பது குறித்து கவலை கொண்டுள்ளன. அதனை போக்கும் பொருட்டு தற்போதுஏராளமான வகையில் இந்த பயன்பாட்டிற்கு மாற்றாக இதே வசதி வாய்ப்புகளை வழங்குகின்ற கட்டற்ற பயன்பாடுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவ்வப்போது வெளியிப்பட்டு வருகின்றன ,அவ்வாறான இந்த பயன்பாட்டிற்கு மாற்றானசில திறமூல பயன்பாடுகளையும் அவற்றின் நன்மைகளையும் பற்றி இப்போதுகாண்போம். இது விற்பனையாளர்-சுதந்திரமானவனாக மாற்றுவதுமட்டுமில்லாமல் அவர்களுடைய செலவுகளைக் குறைப்பது அதனோடு குழுவான பயன்பாட்டின் சேவையகத்திற்கும் அதன் பின்புலத்தில் இயங்குகின்ற இயக்க முறைமைக்கும் திறந்த தரநிலை களையும் வேறுபட்ட அளவிலான பாதுகாப்பையும் கொண்ட மென்பொருட்களைப் பயன்படுத்துவதாகும். இந்தக் கட்டுரையில் grommunio, Kopano, Nextcloud, ownCloud ,OX App Suite ஆகிய ஐந்து மாற்றுபயன்பாடுகளும் லினக்ஸ் அடிப்படையிலானவை இவை செயல்பாட்டில் பரவலாக வேறுபடுகின்றன , பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமானவைகளாக அமைந்து உள்ளன, இவை அனைத்தும் கட்டண ஆதரவு துணை நிரல்களை கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளுடன் கட்டணமில்ல பதிப்புகளையும் வழங்குகின்றன. இவையனைத்தும் on-prem அல்லது மேககணினியில் இயங்குகின்ற திறன் மிக்கவை. அதற்கு மேல், இவற்றின் விற்பனையாளர்களும் தங்களுடைய மென்பொருளுக்கான SaaS தீர்வையும் வழங்குகிறார்கள்.
1.grommunio, இ்நத பயன்பாடு முன்பு grammm என அறியப்பட்டது, இதுAGPLv3 எனும்உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இது அதே பெயரில் ஆஸ்திரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறது. இது Exchange போன்றில்லாமல், இதனுடைய தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய அஞ்சல் சேவையகத்தை வழங்குகிறது, அத்துடன் மின்னஞ்சல்கள், தொடர்புகள், காலண்டர், பணிகள், கோப்பு பகிர்வு போன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளுடன் கூடிய முழு செயல்பாட்டு குழுவான பயன்பாட்டு தீர்வையும் வழங்குகிறது. இது Windows Mail, Outlook, Android, Apple Mail/iOS, Thunderbird போன்ற பல்வேறு தனியுரிமை, திறமூல மின்னஞ்சல் வாடிக்கையாளர்களுடனும் ஒத்தியங்குகிறது, மேலும் HTTP நெறிமுறையில் பழைய RPC , HTTP வழியாக Outlook நிலையான நெறிமுறை யிலான MAPI ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. மேலும் அவைகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றது கைபேசி சாதனங்களுக்கான Exchange ActiveSync CalDAV (காலெண்டர்), CardDAV (முகவரி புத்தகம்), IMAP, POP3, SMTP , LDAP போன்ற பல்வேறு நிலையான நெறிமுறைகள், அத்துடன் செயலில் உள்ள அடைவு (பயனாளர் கணக்குகளை ஒத்திசைவு). மைக்ரோசாப்டின் API அல்லது நெறிமுறைகளால் ஆதரிக்கப்படாத சில வசதிகளை வெளிப்புற திறமூல பயன்பாடுகள் வழங்குகின்றனது எடுத்துக்காட்டாக, மேம்படுத்துநர்கள் Jitsi (கானொளி இசை தொலைபேசி), Mattermost (அரட்டை) , கோப்பு பகிர்வு, ஒத்திசைவு (ownCloud) ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளன.
இதுஅடிப்படை கைபேசி சாதன மேலாண்மை (MDM) உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது மிகப் பெரும்எண்ணிக்கையிலான பயனர்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது எக்ஸ்சேஞ்சைப் போலவே-தரவுத்தள பகிர்வை ஆதரிக்கிறது (பல புரவலர்களில் தரவுத்தளங்களின் கிடைமட்ட விநியோகம்). நெகிழ்வான சேமிப்பக பின்புல தளமானது மற்ற சேவையகங்கள் அல்லது மேககணனி கணக்குகளைச் சேர்ப்பதன் மூலம் நிர்வாகிகள் தங்கள் அமைப்பை நீட்டிக்க அனுமதிக்கிறது. இது ஒரு MySQL தரவுத்தளத்தை மீப்பெரும்தரவுகளுக்கு மட்டுமே பயன்படுத்திகொள்கிறது, அதே நேரத்தில் மின்னஞ்சல் குழுவானபயன்பாட்டு பொருள்கள் போன்ற அனைத்து “உள்ளடக்கங்களும்” ஒவ்வொரு பயனாளருக்கும் SQLite தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்ற வசதியை அளிக்கின்றது. . இதனுடைய சமூகப் பதிப்பு கட்டணமற்றதாகும் ஐந்து பயனாளர் கணக்குகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://grommunio.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

2.Kopanoஜேர்மன்-டச்சு மென்பொருள் உருவாக்குபவரான கோபானோ என்பவரால் உருவாக்கி வெளியிடப்பட்டஇது AGPLv3-உரிமும் , Zarafa மென்பொருள் அடுக்கை அடிப்படையாகவும் கொண்டது. இதன் முன்னோடியைப் போலன்றி, Kopano வெறும் Exchangeக்கு மாற்றாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இது ஒரு முழுமையான குழுவான பயன்பாட்டிற்கான தீர்வு, மின்னஞ்சல், தொடர்புகள், காலண்டர், பணிகள், குறிப்புகள் , ஆவணங்களை திருத்துதல் போன்ற பல்வேறு நிலையான வசதி வாய்ப்புகளுடன் நிகழ்நேர தகவல்தொடர்புகளையும் உள்ளடக்கியது. இது பல தளங்கள், பயன்பாடுகள் , சேவைகளுடன் தொடர்பு கொள்கிறது. அவற்றில் சில எளிதாக செருகுநிரல்களால் ஒருங்கிணைக்கப்படலாம். கானொளிகாட்சி கூட்டத்திற்காக, WebRTC அடிப்படையில் Kopano குழு அதன் சொந்த திறமூல தீர்வை உருவாக்கியுள்ளது: இதனுடைய Kopano Meet ஆனது துவக்கமுதல் முடிவரை( end-to-end) மறையாக்கத்தினை வழங்குகிறது மேலும் இது Windows, macOS, Linux, Android , iOS ஆகியவற்றில் செயல்படுமாறு கிடைக்கிறது. Outlook வாடிக்கையாளர்கள் ActiveSync (Z-Push library) அல்லது Kopano OL Extension (KOE) மூலம் ஆதரிக்கப்படுகிறது, இது ஏற்கனவே சேர்க்கப்பட்ட ActiveSyncக்கு மேம்படுத்தலாக செயல்படுகிறது. Kopano ஒரு சொந்த இணைய வாடிக்கையாளர் (WebApp), கைபேசி சாதனங்களுக்கான வாடிக்கையாளர் (Mobility), Windows, Linux macOS ஆகியவற்றிற்கான ஆதரவுடன்கூடிய மேசைக்கணினிபதிப்பு (DeskApp,) ஆகியவற்றை வழங்குகிறது. IMAP, CalDAV , CardDAV மூலம் பிற வாடிக்கை யாளர்களை இணைப்பது சாத்தியமாக்குகின்றது. இந்தKopano சேவையகத்துடன் நேரடியாக இணைக்கின்ற அனைத்து பயன்பாடுகளும் SOAP இல் MAPI ஐப் பயன்படுத்துகின்றன (எளிய பொருள் அணுகல் நெறிமுறை). இதனுடைய Kopano Groupware, Kopano ONE (Kopano Groupware இன் சிறப்பு பதிப்பு) ஆகியவற்றிற்கு கட்டணமில்லா சமூக பதிப்புகள் கிடைக்கின்றன. இதனுடையKopano Meetஐ ஒரு பயன்பாடு அல்லது கொள்கலனாக பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் kopano.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

3.Nextcloud இந்த Nextcloud ஆனது, AGPLv3 இன் கீழ் உரிமம் பெற்றது. ownCloudஇல் அல்லது Dropboxஇல் உள்ளதைப் போலவே, இதனுடைய பதிப்பு 18 முதல் பயனாளர்கள் தங்களுடைய மேசைக்கணினிகள் (விண்டோஸ், லினக்ஸ், மேக்), இணைய உலாவிகள் அல்லது சொந்த பயன்பாடுகள் (ஆண்ட்ராய்டு, iOS) வழியாக மென்பொருள் தொகுப்பை அணுகலாம். , இந்தNextcloudல் சொந்த கோப்புகள் (கோப்பு ஒத்திசைவும் பகிர்வும்) தவிர இதனுடைய Nextcloud Talk (அழைப்புகள், அரட்டைகள் இணைய சந்திப்புகள்),இதனுடைய Nextcloud Groupware (காலண்டர், தொடர்புகள், அஞ்சல்) ஆகிய வசதிவாய்ப்புகள் உள்ளடங்கியுள்ளன, மேலும் இதன் பெயரானது Nextcloud Hub என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில் பயனாளர், குழு நிர்வாகம் OpenID அல்லது LDAP வழியாக நடக்கிறது. இதனை FTP, S3 , Dropbox போன்ற பல்வேறு சேமிப்பக பின்புலதளங்கள் ஆதரிக்கின்றன. PostgreSQL, MariaDB, SQLite , Oracle Database உள்ளிட்ட பல தரவுத்தள மேலாண்மை அமைப்புகளுடன் இது ஒத்தியங்கி செயல்படு கிறது.இதனுடைய Nextcloud app store இலிருந்து 200க்கும் மேற்பட்ட பயன் பாடுகளின் மூலம் நிர்வாகிகளின் செயலியை நீட்டிக்க முடியும். நிகழ்நேர தொடர்பு,இசை கானொளி அரட்டை, பணி மேலாண்மை, மின்னஞ்சல் போன்ற பல சலுகைகளை கொண்டுள்ளது. இது(Nextcloud) முற்றிலும் கட்டணமற்றதும். அதற்கு மேல், நிறுவனத்திற்கான Nextcloud Enterprise கட்டமைப்பை வழங்குகிறது (முன்-கட்டமைக்கப்பட்ட, உகந்ததாக , நிறுவன வரிசைப்படுத்தல்களுக்கு கடினமாக்கப் பட்டது). மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் nextcloud.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

4.ownCloud இது ஒரு கோப்பு ஒத்திசைவு, பகிர்வு , உள்ளடக்க கூட்டு மென்பொருளாகும் வாடிக்கையாளர் சேவையாளர் மென்பொருளின் முக்கிய வசதிகளையும் பல சமூகக்குழு பயன்பாடுகளையும் AGPLv3 எனும்உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. செயலியின் நீட்டிப்பாகவும் பல நிறுவன தொடர்பாளராகவும் முக்கியமாக இணையத்தின்நேரடி அலுவலக ஆவண பதிப்பாளர், காலண்டர், தொடர்பு ஒத்திசைவு போன்ற உள்ளடக்க கூட்டு மென்பொருளாகவும் திகழ்கின்றது. இதுகைபேசி வாடிக்கை யாளர்களான Android, iOS ஆகியவற்றிற்கு கிடைக்கின்றது, மேலும் இதனுடைய மேசைகணினி பயன்பாடு Windows, macOS , Linux இல் உள்ள சொந்த கோப்பு மேலாளர்களுடன் ஒருங்கிணைக்கிறது. தனிப்பட்ட வாடிக்கையாளர் மென்பொருளை நிறுவுகை செய்திடாமலேயே இணைய இடைமுக அணுகலை அனுமதிக்கிறது. இது WebDAV, CalDAV, CardDAV ஆகியவற்றினை ஆதரிக்கிறது. இதில் LDAP சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் OpenID இணைப்பிற்கான அங்கீகார தரநிலையை ஆதரிக்கின்ற பிற அடையாள வழங்குநர்களுடன் இது இணைந்து செயல்படுகிறது. இது மைக்ரோசாஃப்ட்நிறுவனத்தின் இணையத்தின் நேரடி அலுவலக சேவையாளர், ஆபிஸ் 365 , மைக்ரோசாஃப்ட்டின் Teams ஆகியவை களுக்கான ஒருங்கிணைப்புகளை வழங்குகிறது. இதில் Microsoft Outlook , eM Client ஆகியவற்றிற்கான செருகுநிரல்கள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால், வெளிப்புற சேமிப்பக வசதியை Amazon S3, Dropbox, Microsoft SharePoint, Google Drive, Windows network drives (SMB) ,FTP போன்ற பல்வேறு சேமிப்பக வழங்குநர்களுடன் இணைந்து வழங்குகிறது. விற்பனையாளர் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இடையில் துவக்கமுதல்முடிவரை(end-to-end) மறையாக்கம் செய்தல், ransomware, நச்சுநிரல் தடுப்பு பாதுகாப்பு போன்ற கூடுதல் வசதிவாய்ப்புகளையும் வழங்குகிறது. . இதனுடையசமூக பயன்பாட்டு பதிப்புஆனது கட்டணமற்றது 100% கட்டற்றது. மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://owncloud.com/எனும் இணையதள முகவரிக்கு செல்க

5. OX App Suiteஇந்த OX என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற Open-Xchange ஆனது 2005 இல் ஜெர்மனியின் Olpe , Nuremberg தலைமையகத்துடன் நிறுவப்பட்டது. இன்று, OX ஆனது பல்வேறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா , ஜப்பான் ஆகியநாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு தகவமைவு மின்னஞ்சல், தகவல் தொடர்பு , ஒத்துழைப்பு தளமாகும், இது முக்கியமாக தொலைதொடர்பு நிறுவனங்கள், புரவலர் நிறுவனங்கள் ,மேககணினி அடிப்படையிலான சேவைகளை வழங்குகின்ற பிற வழங்குநர்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. பின்புலதளமானது GPLv2 இன் கீழ் வெளியிடப்பட்டது, முன்புறவாடிக்கையாளர் இடைமுகம் (UI) ஆனது AGPLv3 இன் கீழ் வெளியிடப்பட்டது. பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான இணையஉலாவி (முழுமையாக தனிப்பயனாக்கக்கூடிய வாயிலாக) அல்லது கைபேசி பயன்பாடுகள் (Android, iOS) வழியாக இதனுடைய பயன்பாடுகளின் தொகுப்பை அணுகலாம். மாற்றாக, OX Mail, OX Drive க்கு சொந்த வாடிக்கையாளர்கள் (கைபேசி சாதனங்கள், மேசைக்கணினிகள்) கிடைக்கின்றன. CardDAV , CalDAV ஆகியவற்றிற்கான நீட்டிப்புகள், Exchange Active Sync, Android ஆகியவற்றிற்கான OX Sync பயன்பாடு ஆகியவையாக கிடைக்கின்றன, இது தொடர்புகள், காலெண்டர்கள் , பணிகளின் ஒத்திசைவு ஆகியவற்றை சாத்தியமாக்குகின்றது. இதனுடைய OX App Suiteஇல் மின்னஞ்சல், தொடர்புகள், காலெண்டர்கள் ,பணிகளுக்கான பயன்பாடுகள் உள்ளன. இதனுடைய OX Documents (உரை ஆவணங்கள், விரிதாள்கள், விளக்கக்காட்சிகள்), OX Drive (கோப்புகளை நிர்வகித்தல், பகிர்தல் , ஒத்திசைத்தல்), OX Guard (மின்னஞ்சல்கள் , கோப்புகளின் குறியாக்கம்) உள்ளிட்ட கூடுதல் கருவிகளும் நீட்டிப்புகளும்-சில கட்டற்ற, கட்டண வசதிகளும் உள்ளன. வரையறுக்கப்பட்ட வசதிவாய்ப்புகளுடன் கூடிய சமூகப் பதிப்பு எந்தக் கட்டணமும் இன்றி கிடைக்கின்றது..மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் www.open-xchange.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

திறமூல மின்னஞ்சல் குழுவான பயன்பாடு எனும் சேவைகளுக்கு (நிறைய) பணம் செலவழிக்க வேண்டியதில்லை, மேலும் வேறொருவரின் சேவையகத்தில் புரவலராக செய்யப்பட்ட தனியுரிமை தீர்வுக்கு நிச்சயமாக தீர்வு காண வேண்டிய அவசியமுமில்லை. நிர்வாகப் பொறுப்புகளில் அதிக ஆர்வம் காட்டவில்லை எனில்,இந்த ஐந்து திறமூல பரிமாற்ற மாற்றுகளும் SaaS தீர்வுகளாகக்கூடக் கிடைக்கின்றன. மாற்றாக, அனைத்து விற்பனையாளர்களும் தொழில் முறையிலான தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றனர், மேலும் இவைகளை நம்முடைய வளாகத்தில் இயக்கலாம் – இவை எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்,

%d bloggers like this: