இந்த ஆண்டு லினக்ஸின் உருவாக்கமையத்திற்கு 30 வயதை எட்டுகிறது. இது மூன்று தசாப்தங்களின் முன்னோடியான ஒரு திறமூல மென்பொருளாகும், பயனாளர்கள் கட்டணமற்ற மென்பொருளை இயக்கவும், இயங்குகின்ற பயன்பாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. லினக்ஸின் உருவாக்கமையம் இல்லாமல், இன்று நாம் அனுபவிக்கின்ற திறமூல கட்டணமற்ற மென்பொருட்களின் ஆடம்பரங்கள் ஆகிய எவைகளும் நாம் அடைந்திருக்முடியாது . ஆப்பிள் , மைக்ரோசாப்ட் , கூகுள் ஆகியவை லினக்ஸ் வினையூக்கியாக இல்லாமல் திறமூலத்திற்கு அடியெடுத்துவைத்திருப்பது என்பது மிகவும் சாத்தியமற்றதாகும். மென்பொருள் மேம்பாடு ,பயனாளர் அனுபவத்திற்கான ஒரு நிகழ்வாக லினக்ஸின் தாக்கத்தை மிகைப்படுத்த முடியாது, ஆனாலும் இவையனைத்தும் லினக்ஸின் உருவாக்கமையத்துடன் துவங்கியதாகும்.
உருவாக்கமையம் என்பது ஒரு கணினியை சரியாக இயங்கிடுமாறுத் துவக்குகின்ற ஒரு மென்பொருளாகும், இது கணினி உள்ளேயும் வெளியேயும் கணினியுடன் இணைக்கப்பட்ட அனைத்து உறுப்புகளையும் அங்கீகரித்து– அவை மற்றவற்றுடனான தகவல்தொடர்புகளை உறுதி செய்கிறது. பெரும்பாலான பயனாளர்கள் சிந்திக்காத , லினக்ஸின் உருவாக்கமையத்தினைப் பற்றிய ஆச்சரியபடும்படியான செய்திகள்ஏராளமான உள்ளன. அவைகளுள் முப்பது நிகழ்வுகள் மட்டும் பின்வருமாறு:
1. USB 3.0 இயக்கிகளைக் கொண்ட முதல் இயக்க முறைமை லினக்ஸ் ஆகும்.Sage Sharp என்பவர் 7 ஜூன் 2009 அன்று யூ.எஸ்.பி 3.0 சாதனங்களுக்கான இயக்கி இருப்பதாக அறிவித்தார், மேலும் அதற்கானக்குறிமுறைவரிகள் உருவாக்கமைய பதிப்பு 2.6.31 இல் சேர்க்கப்பட்டுள்ளன
2. பிழைத்திருத்தத்திற்குப் பிறகு பயனுள்ளதாக இருக்குகின்ற சில நிகழ்வுகள் நிகழும்போது உருவாக்கமையமானது தன்னைத் கறைபடிந்தியதாகக் குறிக்கிறது. “கறைபடிந்த(tainted)” உருவாக்கமையத்தினை இயக்குவது ஒரு பிரச்சனை அன்று. ஏதாவது தவறு நடந்தால், கறைபடாத உருவாக்கமையத்தில் சிக்கலை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது சரிசெய்தலின்முதல்படியாகும்.
3. ip = எனும் கட்டளை வரி வாய்ப்பின் ஒரு பகுதியாக ஒரு புரவலரின் பெயர் அல்லது களப்பெயரை குறிப்பிடலாம், DHCP அல்லது BOOTP ஆல் முன்மொழியப் பட்ட ஒன்றைக் கொண்டு மேலெழுதுவதற்குப் பதிலாக லினக்ஸ் அதைப் பாது காக்கிறது. உதாரணமாக, ip = :::: myhostname :: dhcp என்பதற்கு myhostname என்ற பெயர் வருகிறது.
4. உரை துவக்கத்தின் போது( bootup) கருப்பு–வெள்ளை, 16-வண்ணம், 224-வண்ண Tux logo இன் பதிப்பு உள்ளது.
5. பொழுதுபோக்கு வணிகத்தில், DRM என்பது ஊடகங்களுக்கான அணுகலைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பமாகும். இருப்பினும், லினக்ஸ் உருவாக்கமையத்தில் DRM என்பது நேரடி வரைவு மேலாளரைக் குறிக்கிறது. அதனோடு கானொளிஅட்டைகளின் GPUகளுடன் இடைமுகம் செய்ய பயன் படுத்தப்படுகின்ற நூலகங்களான ibdrm எனும் இயக்கிகளைக் குறிக்கிறது.
6. கணினியை மறுதொடக்கம் செய்யாமல் லினக்ஸ் உருவாக்கமையத்தினை இணைக்க ( patch)முடியும்.
7. நம்முடைய சொந்த உருவாக்கமையத்தினைத் தொகுக்கும்போது, உரைவாயிலான பணியகத்தில் 80இற்கும் மேற்பட்ட நெடுவரிசைகளைக் கட்டமைக்க முடியும். அவ்வாறு தொகுத்த பிறகு, அதனை ஒரு துவக்க ஏற்றி அமைப்பாக உள்ளமைக்கலாம்.
8. லினக்ஸ் உருவாக்கமையாமானது உள்ளமைக்கப்பட்ட FAT, exFAT , NTFS (படிக்க , எழுத) ஆகியவற்றுடனான இணக்கத்தை வழங்குகிறது.
9.Wacomஎனும் மடிக்கணினிகள்( tablets)போன்ற பல ஒத்த சாதனங்களுக்கான இயக்கிகள் உருவாக்கமையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
10. பெரும்பாலான உருவாக்கமையகுறும்பர்கள்( hackers) இணைப்புகளை( patches) சமர்ப்பிப்பதற்காக git
send
–மின்னஞ்சலைப் பயன்படுத்துகின்றனர்.
11. உருவாக்கமையமானது பைத்தானில் எழுதப்பட்ட Sphinx என்ற ஆவணக் கருவிச் சங்கிலியைப் பயன்படுத்திகொள்கிறது.
12. Hamlib ஆனது நம்முடைய லினக்ஸ் கணினி மூலம் amateurவானொலி கருவிகளைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட API உடன் பகிரப்பட்ட நூலகங்களை வழங்குகிறது, இதில் பலவகையான வானொலிகளின் ஆதரவு உள்ளது.
13. வன்பொருள் உற்பத்தியாளர்கள் இணக்கத்தை உறுதி செய்வதற்காக உருவாக்கமையத்தினைஉருவாக்க உதவுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். உற்பத்தியாளரிடமிருந்து ஒரு இயக்கியைப் பதிவிறக்காமல் வன்பொருள் நேரடியாக செயல்படுத்திட முடியும். உருவாக்கமையத்தின் நேரடிப் பகுதியாக இருக்கும் இயக்கிகள் தானாகவே உருவாக்கமையத்தின் புதிய பதிப்புகளில் செயல்திறன், பாதுகாப்பு மேம்பாடுகளிலிருந்து பயனடைகின்றன.
14. பல ராஸ்பெர்ரி பை தகவமைவுகளுக்கான (Pi Hats) உருவாக்கமையத்தில் இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
15. band netcat எனும் ஆல்பத்தை லினக்ஸ் உருவாக்கமையத்தில் தகவமைவுகளாக மட்டுமே வெளியிட முடியும்.
16. netcat இன் ஆல்பம் வெளியீட்டால் ஈர்க்கப்பட்டு, உருவாக்கமைய இசை இயக்கியாக மாற்றுவதற்கான தகவமைவும் உருவாக்கப்பட்டுள்ளது.
17. லினக்ஸின் உருவாக்கமைய வசதிவாய்ப்புகளானவை ARM, ARM64, IA-64, m68k, MIPS, Nios II, PA-RISC, OpenRISC, PowerPC, s390, Sparc, x86, Xtensa போன்ற பல CPU கட்டமைப்புகளை ஆதரிக்கின்றன:
18. 2001 இல், லினக்ஸின் உருவாக்கமைய x86-64 பதிப்பானது முதன்முதலில் CPU கட்டமைப்பை நீண்ட முறையில் இயக்கியது.
19. லினக்ஸ் பதிப்பு 3.4 x32 ABI ஐ அறிமுகப்படுத்தியது, 32-பிட் சுட்டிகள் ,தரவு புலங்களைப் பயன்படுத்தும் போது மேம்படுத்துநர்களின்64-பிட் பயன்முறையில் குறிமுறைவரிகளைத் தொகுக்க அனுமதிக்கிறது.
20. உருவாக்கமையமானது Ext2, Ext3, Ext4, JFS, XFS, GFS2, GCFS2, BtrFS, NILFS2, NFS, மேலடுக்கு FS, UDF போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு கோப்பு முறைமைகளை ஆதரிக்கிறது.
21. மெய்நிகர் கோப்பு அமைப்பு என்பது உருவாக்கமையத்தில் உள்ள மென்பொருள் அடுக்கு, பயனாளர்கள் இயக்குகின்ற பயன்பாடுகளுக்கான கோப்பு முறைமை இடைமுகத்தை வழங்குகிறது. இது உருவாக்கமையத்திற்கான ஒரு சுருக்கமான வழிமுறையாகும், இதனால் வெவ்வேறு கோப்பு முறைமை செயலிகள் ஒன்றாக இருக்கும்.
22. லினக்ஸ் உருவாக்கமையத்தில் தொட்டுணரக்கூடிய Braille வெளியீட்டு சாதனத்திற்கான இயக்கி உள்ளது.
23. உருவாக்கமைய பதிப்பு 2.6.29 க்கு, துவக்கத்தின் போது Tux logo ஆனது “Tuz” மூலம் மாற்றப்பட்டது, அப்போது ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனிய டெவில் எனும் பொது மக்களை பாதித்த ஒரு தீவிரமான புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை இதனஅவாயிலாக ஏற்படுத்தப்பட்டது.
24. கட்டுப்பாட்டு குழுக்கள் (cgroups)ஆனவை Docker, Podman, Kubernetesபோன்ற பலவற்றிற்கான அடித்தள தொழில்நுட்பம் இருப்பதற்கு காரணமாகும்.
25. அதை விடுவிக்க விரிவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதனால் அது சேர்க்கப்படலாம், ஆனால் இன்று SIMB ஆதரவை செயல்படுத்த CIFS தகவமைவு உருவாக்கமையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ சாப்ட்டின் தொலைதூர மேககணினி அடிப்படையிலான கோப்புப் பகிர்வுகளை பதிவேற்றம் செய்திட லினக்ஸை அனுமதிக்கிறது.
26. ஒரு கணினியில் உண்மையான சீரற்ற எண்ணை உருவாக்குவது மிகவும் கடினமானசெயலாகும் (உண்மையில் இதுவரை சாத்தியமற்றதாகும் ). சீரற்ற எண்களின் தலைமுறையை மேம்படுத்தும் முயற்சியில் hw_random கட்டமைப்பானது CPU அல்லது தாய்ப்பலகையில் சிறப்பு வன்பொருள் வசதிகளைப் பயன்படுத்த முடியும்.
27. OS jitter என்பது பின்னணி செயல்முறைகள் எவ்வாறு திட்டமிடப்படு கின்றன, கணினி எவ்வாறு ஒத்திசைவற்ற நிகழ்வுகளைக் கையாளுகிறது (குறுக்கீடுகள் போன்றவை) ஆகியவற்றால் ஏற்படும் ஒரு பயன்பாட்டால் ஏற்படும் குறுக்கீடு ஆகும். உருவாக்கமையத்தால் வரையறுக்கப்பட்ட CPU களின் தொகுப்புகளுக்கு பிணைப்பு பணிகள், cgroups ஐப் பயன்படுத்துதல் , SMP IRQ இணைப்பு ஆகியவை OS jitter குறைப்பதற்கான நிரலாளர்களுக்கு வழங்கும் வாய்ப்புகள் ஆகும். இது போன்ற பிரச்சினைகள் உருவாக்கமையத்தின் ஆவணத்தில் விரிவாக விவாதிக்கப் படுகின்றன, லினக்ஸை குறிவைக்கும் நிரலாளர்களுக்கு சிறந்த குறிமுறைவரிகளை எழுத உதவுகிறது.
28. make
எனும் கட்டளையானது தொகுப்பதற்கு முன் உருவாக்கமையத்தினை உள்ளமைக்க GUI ஐப் பயன்படுத்த அனுமதிக்கிறது. Kconfig எனும் கட்டளையானது உருவாக்கமைய கட்டமைப்பு வாய்ப்புகளை வரையறுக்கிறது.
menuconfig
29. அத்தியாவசிய லினக்ஸ் சேவையகங்களுக்கு, சேவையகத்தின் நிலையை கண்காணிக்க கண்காணிப்பு (watchdog) எனும் ஒரு அமைவு செயல்படுத்தப் படலாம். பரிசோதனைகளுக்கு இடையில், கண்காணிப்பு குழுவான் தரவை ஒரு சிறப்பு கண்காணிப்பு உருவாக்கமையமானது சாதனத்திற்கு எழுதுகின்றது, இது கணினி மீட்டமைப்பைத் தடுக்கிறது. ஒரு கண்காணிப்பு வெற்றியை பதிவு செய்யத் தவறினால், கணினி மீட்டமைக்கப்படும். கண்காணிப்பு வன்பொருளின் பல செயலாக்கங்கள் உள்ளன, மேலும் அவை தொலைதூர பணியுடன் முக்கியமான கணினிகளுக்கு முக்கியமானவைகளாகும் (செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டவை போன்றவை).
30. உருவாக்கமையமானது நாம் வாழும் நம்முடைய பூமியில் உருவாக்கப்பட்டது என்றாலும், செவ்வாய் கிரகத்தில்கூட இந்தலினக்ஸ் உருவாக்கமையத்தின் நகல் உள்ளது.