நான் பயன்படுத்திய மடிக்கணினி 2012 இல் வாங்கப்பட்டது. 1.70 GHz CPU, 4 GB நினைவகம் , 128 GB நினைவகஇயக்கி ஆகியவை எனது தற்போதைய மேசைக்கணினியுடன் ஒப்பிடும்போது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் Linuxஇன் , Xfce எனும் மேசைக்கணனி இயக்கமுறைமையானது இந்த பழைய மடிக் கணினிக்கு புத்துயிர் கொடுத்து பயன்படுத்திகொள்ள தயார் செய்துவிடுகிறது.
லினக்ஸிற்கான Xfce எனும் மேசைக்கணினி இயக்கமுறைமை
Xfce எனும் லினக்ஸிற்கான மேசைக்கணினி இயக்கமுறைமையானது ஒரு நேர்த்தியான, நவீன தோற்றத்தை வழங்குகின்ற இலகுரக மேசைக்கணினிப். பயன்பாடுகளைத் துவங்குவதற்கு, மெய்நிகர் மேசைக்கணினிகளுக்கு இடையில் மாற்றுவதற்கு அல்லது அமைவு தட்டில் அறிவிப்புகளை அணுகுவதற்கு மேலே ஒரு செயல்பட்டியை அல்லது “பலகத்தில்(panel)” உள்ள இடைமுகத்தினை கொண்டுள்ளது. முனைமம், கோப்பு மேலாளர், இணைய உலாவி(web browser) போன்ற நாம் அடிக்கடி பயன்படுத்திகொள்ளும் பயன்பாடுகளைத் துவங்க திரையின் அடிப்பகுதியில் உள்ள விரைவான அணுகல் இணைப்பானது நம்மை அனுமதிக்கிறது. புதிய பயன்பாட்டைத் துவங்க, மேலே இடது மூலையில் உள்ள Applications எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இது முனைமம்(terminal) கோப்பு மேலாளர் (file manager) இணைய உலாவி(web browser) போன்ற நம்மால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுடன், பயன்பாட்டு துவக்கிகளின் (application launchers) பட்டியலைத் திறக்கிறது. இதில் பிற பயன்பாடுகள் குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, எனவே அவற்றிலிருந்து நாம் விரும்பும் ஒன்றை தெரிவு செய்து பயன்படுத்திகொள்ளலாம்.
கோப்புகளை நிர்வகித்தல்
Xfce இன் கோப்பு மேலாளர்ஆனது Thunar என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது கோப்புகளை ஒழுங்கமைப்பதில் ஒரு சிறந்த பணியைச் செய்கிறது. Thunarஆல் தொலைநிலை அமைப்புகளுக்கு இணைப்புகளை உருவாக்க முடியும் . வீட்டில், தனிப்பட்ட கோப்பு சேவையகமாக SSH ஐப் பயன்படுத்தி ராஸ்பெர்ரி பையைப் பயன்படுத்திகொள்ளலாம். SSH கோப்பு பரிமாற்ற சாளரத்தைத் திறக்க Thunarஐ அனுமதிக்கிறது, அதனால் மடிக்கணினி , Raspberry Pi க்கு இடையில் கோப்புகளை பரிமாறிக்கொள்ளவும் நகலெடுக்கவும் முடியும். கோப்புகளையும் கோப்புறைகளையும் அணுகுவதற்கான மற்றொரு வழி, திரையின் அடிப்பகுதியில் உள்ள விரைவான அணுகல் இணைப்பு(dock)பகுதியின் வழியாகும். முனைம விண்டோவில் கோப்புறையைத் திறப்பது, புதிய கோப்புறையை உருவாக்குவது அல்லது குறிப்பிட்ட கோப்புறைக்குள் (folder) செல்லுதல் போன்ற பொதுவான செயல்களின் பட்டியைக் கொண்டு வர folder எனும் உருவப்பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக.
பிற பயன்பாடுகள்
Xfce இல் வழங்கப்பட்ட பிற பயன்பாடுகளை ஆய்வுசெய்திடுவோம். Mousepad எனும் உரைப்பதிப்பானானது ஒரு எளிய உரைபதிப்பாளரைப் போன்று அமைந்துள்ளது, ஆனால் இது வெறும் உரையை விட அதிகதிருத்தம் செய்வதற்கான பயனுள்ள வசதிகளைக் கொண்டுள்ளது. நிரலாளர்கள், பிற ஆற்றல்மிகு பயனர்கள் பாராட்டக்கூடிய பல கோப்பு வகைகளை Mousepad ஆனது அங்கீகரிக்கிறது. ஆவண பட்டியில் கிடைக்கும் நிரலாக்க மொழிகளின் பகுதி பட்டியலைப் பார்வையிடுக. வித்தியாசமான தோற்றத்தினையும் உணர்வையும் விரும்பினால், View எனும் பட்டியலைப் பயன்படுத்தி எழுத்துரு, வண்ணத் திட்டம்,வரி எண்கள் போன்ற இடைமுக வாய்ப்புகளை கொண்டு சரி செய்யலாம். சேமிப்பக சாதனங்களை நிர்வகிக்க வட்டு (disk) எனும் பயன்பாடு நம்மை அனுமதிக்கிறது. அதனால் கணினி வட்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், விரலி(USB)இயக்கியை துவக்க அல்லது மறுவடிவமைக்க வட்டு கருவி ஒரு சிறந்த வழியாகும். இதனுடைய இடைமுகம் பயன்படுத்த மிகவும் எளிதானது Geany என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழலாகும் . இதன் வாயிலாக ஒரு முழு IDEஆனது பழைய கணினியில் நன்றாக இயங்குகின்றது . Geanyஆனது தன்னை “சக்திவாய்ந்த, நிலையான, இலகுரக நிரலாளரின் உரை திருத்தியாக விளம்பரப் படுத்துகிறது, இது நம்முடைய பணிப்பாய்வுகளைத் தடுக்காமல் பல பயனுள்ள வசதிகளை வழங்குகிறது.” . இந்த Geanyஐ சோதிக்க ஒரு எளிய “அனைவருக்கும் வணக்கம்” எனும் செயல்திட்டத்தை துவங்கிடுக, மேலும் ஒவ்வொரு செயலியின் பெயரையும் தட்டச்சு செய்யும் போது IDE தொடரியல் உதவிக்கான மேல்மீட்பு (pop-up) பட்டி தோன்றுவதைக் காணலாம். மேல்மீட்புபட்டியின் செய்தி தடையற்றது ,நமக்குத் தேவையான இடத்தில் போதுமான தொடரியல் தகவலை வழங்குகிறது. print எனும்செயலி எளிதாக நினைவில் இருந்தாலும், fputs, realloc போன்ற பிற செயலிகளுக்கான வாய்ப்புகளின் வரிசையை நாம் எப்போதும் மறந்து விடுவோம். இந்நிலையில்தான் நமக்கு மேல்மீட்பு (pop-up)பட்டியின் தொடரியல் உதவி தேவையாகும். நம்முடைய பணியை எளிதாக்க மற்ற பயன்பாடுகளைக் கண்டறிய Xfce இல் உள்ள பட்டியல்களை ஆய்வுசெய்திட. இசையை இயக்க, முனையத்தை அணுக அல்லது இணையத்தில் உலாவர அவைகளுக்கான பயன்பாடுகளையும் காணலாம். ஒரு கூட்டத்தில் சில மாதிரிகாட்சிகளுக்கு நமது மடிக்கணினியைப் பயன்படுத்த லினக்ஸை நிறுவிய போது, லினக்ஸுடன் Xfce மேசைகணினி இயக்கமுறைமை இந்த பழைய மடிக்கணினியை மிகவும் சுறுசுறுப்பாக இயங்க வைத்தது. கணினி அமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது, கூட்டம் முடிந்ததும், மடிக்கணினியை இரண்டாவது கணினியாக வைத்துகொள்ளமுடியும் Xfce இல் பணி செய்வதையும் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதையும் விரும்பலாம். குறைந்த மேல்நிலை , குறைந்தபட்ச அணுகுமுறை இருந்தபோதிலும்,இது பலவீனமன்று Xfceஉம் அதனோடு சேர்க்கப்பட்ட பயன்பாடுகளைப் பயன்படுத்தி நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நம்மால் செய்ய முடியும்.