வாசகர் கருத்துகள்

மின் புத்தகம் நன்றாக இருக்கிறது. அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்று. மிக அருமையான முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். – Vivek

 நல்ல முயற்சி. இத்துடன் நின்றுவிடாது தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன். – சிவகுமார்

நன்றி…………நன்றி……….. தங்களுடைய முயற்சியை வாழ்த்தி முடிந்த ஒத்துழைப்பை அளிப்போம் மேன்மேலும் வளர ……ananth

 

நேர்த்தியான வடிவமைப்பு, அறிவார்ந்த கட்டுரைகள் என முதல் இதழ் மிளிர்கிறது. மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி. –ந.ர.செ. ராஜ்குமார்

தெளிவான எண்ணத்துடன் அருமையான பொருளடக்கம் -கணியம் மேன்மேலும் சிறக்க எனது அன்பு வாழ்த்துக்கள் –கதிர் ஆக்ஸ்போர்ட்

புத்தாண்டில் நல்லதொரு முயற்சி. தொடர்க.கணியம் பற்றி முழுமையாக அறிய என்போன்றோர்க்கு அரிய வாய்ப்பு. கணியம் பற்றி அரைகுறை அறிவுடையோர்க்கு பயனுள்ள இணைய தளம். வாழ்த்துகளும் பாராட்டுகளும். என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். – வடிவேல் கன்னியப்பன்

கணியம் வெற்றி பெற எனது பங்கு நிச்சியம் உண்டு .இது ஒரு முயற்சி அல்ல ஒரு விதை இது விருட்சம் மாக மாறி பல இன்ப கனிகளை விரைவில் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் .எனது பாராட்டுகள் .எனது மாணவர்களிடம் இதை பகிரிந்து கொள்ள விழைகிறேன் . –      D. PRABHU

பெரும்பாலான தமிழ் கணினி மொழி பெயர்பளர்கள் செய்யும் தவறை நீங்களும் செயதிர்கள். தமிழர்கள் தமிழ் வழியாக தான் கற்க வேண்டும் என்று நினைகிரர்கலே தவிர முழு கலை சொற்களும் தமிழில் இருக்க வேண்டும் என நினைப்பது இல்லை. file என்ற வார்த்தையை கோப்பு என மொழி பெயர்க்காமல் பைல் என்றாய் பயன்படுத்துங்கள். கோப்பு என படித்தல் மென்பொருளில் வேலை செய்வது கடினமாகிறது . – balaji

 

 

உங்களுடைய சமுக அக்கறை மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்! – செந்தில் குமார் ஜெ

எமது நிறுவனத்தின் சார்பில், வெளிவந்துள்ள கட்டுரைகளுள் சிறப்பான கட்டுரை ஒன்றை தேர்வு செய்து மாதந்தோறும் ரூ 500/- வழங்குவதாக அறிவிக்கின்றேன். எளிய நடை, தமிழ்ச் சொல்லாக்கம் போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு இது தீர்மானிக்கப்படும். பலரும் முன்வந்து எழுத சிறியதோர் ஊக்கமாய் இது அமையட்டும். வருங்காலங்களில் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கும் தளமாகவும் இது வடிவெடுக்க உழைப்போம். – ஆமாச்சு

வாழ்த்துக்கள். மிக நல்ல முயற்சி. என்னால் முடிந்த அளவு பங்கேற்க முயல்கிறேன். நான் வேலை பார்க்கும் கல்லூரியில் ஒரு பிரதியை மாணவர்கள் பயன்பாட்டுக்கு அச்சு எடுத்து தரலாம் என் முடிவு செய்துள்ளேன். மேலும் எங்கள் துறை நூலகத்தில் ஒரு
மென்தட்டில் அணைத்து இதழ்களையும் சேகரித்து பிற்கால மாணவர்களுக்கு பயன் படுமாறு செய்ய உத்தேசித்துள்ளேன். – சுதன்

மிக்க மகிழ்ச்சி. அருமையான சேவை. ஒரு மாணவன் என்ற முறையில் என்னுடைய சக தோழர்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன். – இரா.கதிர்வேல்


 

 

%d bloggers like this: