விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளில் லினக்ஸ் பயன்பாடுகளை உருவாக்க WSL ஐப் பயன்படுத்துதல்-

தற்போதுநம்மெல்லோருக்கும் விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் லினக்ஸ் மேம்பாட்டு சூழலை நிறுவுகை செய்வது என்பது மிகவும் எளிதான செயலாகும், அவ்வாறான சூழலில் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் லினக்ஸிற்கான விண்டோவின் துனைஅமைவு (Windows Subsystem for Linux (WSL)) எனும் வசதி மிகப்பெரும் உதவியாகும். பல்வேறு லினக்ஸ் பயன்பாட்டு மேம்டுத்துநர்கள் விண்டோஇயக்கமுறைமை செயல்படும் கணினிகளைக் கொண்டுள்ளனர் மேலும் SSH இன்(விண்டோவில் PuTTY எனும் மென்பொருளை நிறுவுகைசெய்வது போன்று) வாயிலாக இணைப்பதன் மூலம் தொலைநிலையில் லினக்ஸ் சேவையகங்களைப் பயன்படுத்துகின்றனர் . இந்த லினக்ஸ் சேவையகங்கள் / கணினிகள் பொதுவாக பல்வேறு மேம்டுத்துநர் களிடையே அவற்றின் மேம்பாட்டு பணிகளுக்காக பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலான மேம்படுத்துநர்கள் , அதுவே ஒரு மெய்நிகர் கணினியாக (virtual machine (VM)) பயன்படுத்தப்படும்போது. அதற்கு பதிலாக தங்களுடைய சொந்த கணினியின் நிகழ்வை போன்று செயல்பட்டால் நன்றாக இருக்குமே என விரும்புகின்றனர்
பொதுவாக தற்போது விண்டோஇயக்கமுறைமையின் அடிப்படையிலான கணினிகளில், மெய்நிகர் பெட்டி (VirtualBox ) அல்லது மெய்நிகர் கணினி( VMware) போன்ற பல்வேறு மெய்நிகர் தீர்வுகள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக உள்ளன, இவற்றின் வாயிலாக நாம் ஒரு லினக்ஸ் வெளியீட்டினை (அல்லது அந்த செயலிற்கான எந்தவொரு இயக்க முறைமையையும்) ஒரு ISO இலிருந்து நிறுவுகை செய்திடலாம். ஆனால் பல்வேறு மேம்படுத்துநர்கள் கணினியினஅ செயல்திறன் (இது ஒட்டுமொத்த புரவலர் அமைப்பிற்கு மிகவும் மெதுவானது அதிக பணிச்சுமையானது), பொருந்தக்கூடிய சிக்கல்கள், கருவிகளின் பற்றாக்குறையான ஆதரவு ஆகியவற்றின் காரணமாக இவற்றை விரும்புவதில்லை.
லினக்ஸிற்கான விண்டோவின் துணை அமைப்பு (WSL)
மைக்ரோசாப்ட்எனும் நிறுவனமானது 2016 இல் WSL (லினக்ஸிற்கான விண்டோ துணை அமைப்பு) உடன் வெளியிடும் வரை விண்டோஇயக்கமுறைமைசெயல்படும் கணினிகளில் லினக்ஸ் பயன்பாடுகளை உருவாக்க ஒரே வழி தொலை நிலை புரவலர் இணைப்புகள் அல்லது மெய்நிகர் இயந்திரங்கள் மட்டுமே என்றவாறு இருந்துவந்தன. ஆனால் அதன்பின்னர் 64 பிட் விண்டோ 10 இயக்கமுறைமையின்(பதிப்பு 1607 இலிருந்து) அடிப்படையில் செயல்படும் கணினிகள் லினக்ஸ் வெளியீடுகளை இயக்க WSL நம்மை அனுமதிக்கிறது . இது ஆரம்பத்தில் உபுண்டு லினக்ஸ் வெளியீட்டினை மட்டுமே ஆதரித்தது, ஆனால் தற்போது பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளையும் ஆதரிக்கிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள வெளியீடுகள் Microsoft Storeஇல் நேரடியாக கிடைக்கின்றன:
Ubuntu 16.04 LTS / 18.04 LTS / 20.04 LTS , openSUSE Leap 15.1 , SUSE Linux Enterprise Server 12 SP5 / 15 SP1 , Kali Linux , Debian GNU/Linux ,Fedora Remix for WSL ,Pengwin ,Pengwin Enterprise
(குறிப்பு: இந்த WSL ஆல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆதரிக்கப்படும் பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளும் உள்ளன.)
இந்த லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பு (WSL) என்பது மைக்ரோசாப்ட் வழங்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சி ஆகும், இது ஒரு முழுமையான VM இன் செயல்பாட்டை சிரமமின்றி வழங்குகிறது. WSL க்கு முழு மெய்நிகர் இயந்திரத்தை விட குறைவான வளங்கள் (CPU, நினைவகம் சேமிப்பிடம்) தேவைப்படுகிறது, மேலும் இது லினக்ஸ் கட்டளை வரி கருவிகளுடன் விண்டோ பயன்பாடுகளை அல்லது கருவிகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது.
இது( WSL) லினக்ஸ் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களுக்கு, லினக்ஸ் மேம்பாட்டு சூழலை வழங்குகிறது – இது பெரும்பாலான கட்டளை வரி கருவிகள், பயன்பாடுகள் , பயன்பாட்டுமென்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது – ஒரு பாரம்பரிய மெய்நிகர் கணினி அல்லது இரட்டை-துவக்க கணினி அமைப்பின் மேல்நிலை அமைவில் இல்லாமல் விண்டோஇயக்கமுறையில் நேரடியாக செயல்படுத்திடமுடியும். இது விண்டோ இயக்கமுறைமையின் அடிப்படையில் லினக்ஸ் மேம்பாட்டு சூழல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட Cygwin விட மிகச் சிறந்த பயனாளர் அனுபவமாக திகழ்கின்றது.
குறிப்பு: மைக்ரோசாப்ட் WSL2 எனும் பதிப்பினை 2020 இல் வெளியிட்டுள்ளது, இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பானது முதல் பதிப்பை விட மிகவிரைவாக செயல்படும்திறன்மிக்கது. இருப்பினும், எளிமைக்காக இந்த கட்டுரையில்WSL இன் முதல் பதிப்பை பற்றிய விவரங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது.
WSL ஐபயன்படுத்தி கொள்வதற்கான முன்நிபந்தனைகள்:
விண்டோ 10 (பதிப்பு 1607 அல்லது அதற்கு மேல்).
இந்தWSL ஆனது விண்டோ 10 இன் 64-பிட் பதிப்புகளில் மட்டுமே இயங்குகிறது. 32-பிட் பதிப்பு ஆதரிக்கப்படவில்லை.
WSL ஐநிறுவுகை செய்தல்
உபுண்டு 18.0.4 LTS ஐபயன்படுத்தி WSL சூழலை அமைப்பது குறித்து எடுத்துக்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது . இதைச் செய்ய – Microsoft Store வழியாக, PowerShel கட்டளை வரி வழியாக ஆகிய இரண்டு வழிகள் உள்ளன

Microsoft Store: இதில் நாம் விரும்பிய லினக்ஸின் வெளியீட்டினை தேடுவதன் மூலம் (உபுண்டு என்று எடுத்துகொள்க) நேரடியாக நிறுவுகை செய்திடலாம். Microsoft Store என்பது நிறுவுகைசெய்யப்படவில்லை அல்லது அணுக முடியவில்லையெனில், அடுத்ததாக மேலே இரண்டாவதாக குறிப்பிட்டவாறு கட்டளை வரி மூலம் அதை நிறுவுகைசெய்திடலாம்.
PowerShell: நிருவாகியாக இதனை செயல்படச்செய்து பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றிடுக.
1. பின்வரும் கட்டளைவரியை செயல்படுத்துவதன் மூலம் விண்டோவின் வாய்ப்புகளின் WSL ஐ இயக்குவது முதல் படிமுறையாகும்:
Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linux
இது கணினியை மறுதுவக்கம் செய்திடவா என நம்மிடம் கோரும். Yes என தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக
2. உடன் கணினியின் இயக்கம் மறுதுவக்கம்ஆனதும், அடுத்த கட்டமாக PowerShell இன் கட்டளை வரி மூலம் உபுண்டு -18.04 ஐ பதிவிறக்கம் செய்க (வேறு பதிப்பிற்கு, தயவுசெய்து docs.microsoft.com/en-us/windows/wsl/install- manual எனும் இணையதள முகவரியிலுள்ள கையேட்டினை படித்தறிந்து செயல்படுக):
Invoke-WebRequest -Uri
aka.ms/wsl-ubuntu-1804 -OutFile Ubuntu.appx –UseBasicParsing
3. அதன்பின்னர் பின்வரும் கட்டளைவரிகளை செயல்படுத்துவதன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட லினக்ஸ் வெளியீட்டினை பிரித்தெடுத்திடுக:

Rename-Item -Path ~/Ubuntu.appx -NewName Ubuntu.zip

Expand-Archive ~/Ubuntu.zip ~/Ubuntu

4. லினக்ஸ் வெளியீட்டினை (உபுண்டு) செயல்படச்செய்வதற்காக பிரித்தெடுக்கப்பட்ட கோப்பகத்திற்கு அவற்றை மாற்றி binary ஐ இயக்கிடுக:
cd Ubuntu
./ubuntu1804.exe
5. அதனைதொடர்ந்து லினக்ஸ் வெளியீடு செயல்படத்துவங்கியதும், புதிய தொருசூழலை அமைக்கத் துவங்கி பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை கோரும்; அவற்றை உள்லீடு செய்தால் அதன் பிறகு நாம் வழக்கம்போன்று லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்த துவங்கிடலாம்.
மைக்ரோசாப்ட் மேம்பாட்டு கருவிகளை மேம்படுத்துதல்
WSL ஆனது விண்டோ இயக்கமுறைமையுடன் சொந்தமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், மேம்படுத்தநர்கள் Visual Studio Code , Visual Studio போன்ற விண்டோ இயக்கமுறைமைக்கான கருவிகளைக் கொண்டு லினக்ஸ் பயன்பாடுகளை உருவாக்கலாம் பிழைதிருத்தம் செய்திடலாம். Visual Studio Code code.visualstudio.com) என்பது ஒரு கட்டணமற்ற சக்திவாய்ந்த பயன்பாடுகளின் மேம்பாட்டு சூழல் (IDE )ஆகும், இது VSCode ஐ WSL உடன் நேரடியாக இணைக்க அனுமதிக்கின்ற விரிவாக்கத்தைக் கொண்டுள்ளது
(இந்த செயல்முறையை விளக்குகின்ற ஆவணத்தைப் https: //code.visualstudio .com / docs / remote / wsl எனும் இணயதள முகவரியில் காணலாம்).
இது விண்டோவின் GUI , IDE ஆகியவற்றுடன் லினக்ஸின் கட்டளை வரிகளின் சக்திகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த மேம்படுத்துநர்களுக்கு உதவுகிறது. VSCode இல் பல்வேறு விரிவாக்கங்கள் (குறியீடு வடிவமைப்பு, கிட் வரலாறு, டோக்கர் போன்றவை) மேம்படுத்துநர்களுக்கு ஏராளமான நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கின்றன.
லினக்ஸிற்கான விண்டோதுனைஅமைப்பு( WSL) , மெய்நிகர் கணினி மென்பொருள் (VMWare) ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஒரு ஒப்பீடு
மேம்படுத்துநர்கள் VMWare களைப் பயன்படுத்தும் போது அதன் செயல்திறன் போதுமானதாக இல்லை என எப்போதும் கவலையுடன் இருப்பார்கள். ஆனால் WSL செயல்திறனானது சொந்த லினக்ஸ் வெளியீட்டினைப் போன்றே சிறப்பாகசெயல்படுகின்றது என பெரும்பாலான வரையறைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஒருசில I / O சோதனைகளில் WSL ஐப் பயன்படுத்தும் போது இடையூறுகள் ஏற்படுகின்றன. புதிய பதிப்பான, WSL2இல், இது மேம்படுத்தப்பட்டுள்ளது. மெய்நிகர் கணினி மென்பொருளைக் காட்டிலும் WSL ஒருசில கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
இது ஒரு மெய்நிகர் இயந்திரத்தை விட இலகுவானது குறைவான வளங்களை (CPU, நினைவகம் , சேமிப்பிடம்) பயன்படுத்துகிறது. இதனை எளிதாகஅமைத்து பயன்படுத்திடலாம். விண்டோ இயக்க முறைமையுடன் பூர்வீகமாக ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை ஆதரிக்கிறது. இதனை செயல்படுத்திடுவதற்காகவென மூன்றாம் தரப்பு மென்பொருள் எதுவும் நமக்குத் தேவையில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து மிகவும் பெரிய சமூகஆதரவும் பல்வேறு ஆவணங்களும் கிடைக்கின்றன, இது லினக்ஸைப் பயன்படுத்தாத மேம்படுத்துநர்களைக் கூட எளிதாகத் துவங்க அனுமதிக்கிறது.
குறுக்கு-தள செயல்திட்டங்களின் போது மேம்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்துகிறது.
விண்டோ பயன்பாடுகளையும் ,லினக்ஸ் கருவிகளையும ஒரேதொகுப்பின் கோப்புகளில் பகிர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக, இது சொந்த லினக்ஸ்வெளியீட்டு செயல்திறனை போன்றே இருக்கும்.
மிகவும் நிலையானது. செலவு குறைந்த (பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக உரிம கட்டணம் எதுவும் செலுத்திட தேவையில்லை
பயனாளர்கள் தமக்குத் தேவையான தொகுப்புகளை மட்டும் நிறுவுகை செய்துகொள்ளலாம் (எடுத்துக்காட்டாக, WSL உபுண்டு ஐ இயக்கினால், உபுண்டு களஞ்சியத்திலிருந்து தொகுப்புகளை நிறுவுகைசெய்திடலாம்).
இது லினக்ஸின்பல்வேறு வெளியீடுகளின் ஆதரவை வழங்குகிறது. உபுண்டு LTS (நீண்ட கால ஆதரவு) வெளியீடுகளுடன், பயனாளர்களுக்கு ஐந்து வருட பாதுகாப்பு தொகுப்புகள் புதுப்பிப்புகள் கொண்டுள்ளது.
தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமானது WSL மேம்படுத்துதலில் அதிக கவணம் செலுத்தி வருகிறது.இருப்பினும், ஒருசில இடங்களில் WSL ஐப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நம்முடைய பயன்பாடு GUI அடிப்படையிலானதாக இருக்கும்போது WSL ஐப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது GUI மேசைக்கணினியின் பயன்பாடுகளை ஆதரிக்காது. ஒருசில வரைகலை பயன்பாடுகள் செயல்பட WSL ஐ ஒரு வரைகலை துணை அமைப்புடன் கட்டமைக்க ஒருசில வழிமுறைகள் உள்ளன, ஆனால் அனைத்து வழிமுறைகளும் இல்லை. எனவே WSL இல் வரைகலை பயன்பாடுகளை இயக்க பரிந்துரைக்கப்படவில்லை. WSL இல் செயல்படுத்தப்படாத குறிப்பிட்ட லினக்ஸ் கெர்னல் சேவைகள் தேவைப்படும் பயன்பாடுகளுக்கு WSL பொருத்தமானதன்று. சாதன இயக்கிகள் போன்ற கெர்னல் தொகுப்புகளை இதில் இயக்க முடியாது. இருப்பினும், WSL2 போன்ற எதிர்கால பதிப்புகள் இதை ஆதரிக்கக்கூடும். இது பயன்பாடுகளின் மேம்படுத்துதலிற்கு ஏற்றது,

%d bloggers like this: