மீப்பெரும்செயலாக்கம் (metaverse) தற்போதைய நிலை என்ன இனி என்னவாக ஆகப்போகிறது

மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு மெய்நிகர் உலகமாகும், இது முன் எப்போதும் இல்லாத இணைய அனுபவத்தை நமக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது. மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) முதலில் ஏற்றுக்கொண்ட தொழில்களில் தற்போது எந்தெந்த தொழில்கள் நிலைத்து உள்ளன, அதற்கான எதிர்காலம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது இன்று நன்கு அறியப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இது குறித்து பல தவறான கருத்துக்களும் உள்ளன. இதில் பின்வருவன அடங்கும்: இது விளையாட்டிற்கு மட்டுமே பயன்படு கின்றது, வங்கித் துறை மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) விரைவாக ஏற்றுக்கொள்கிறது, இது பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டது, அதன் உள்கட்டமைப்புக்கு பெரிய முதலீடுகள் தேவை ( அணியக்கூடியவை, GPU அடிப்படையிலான அமைப்புகள்) போன்ற பல.
மீப்பெரும்செயலாக்கம்(metaverse) என்பது எண்ணிம nirvana ஆகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர், ஏனெனில் இது பயனர்களை எண்ணிம உலகில் மூழ்கடித்து, குறிப்பிட்ட அந்த தளத்துடன் தொடர்புகொள்வதற்காக பயனர்கள் செய்கின்ற எந்தவொரு செயலையும் மெய்நிகர் அனுபவத்தை அளிக்க செய்கிறது.
CIO , CTOஆகியவர்களுக்காக, இணைக்கப்பட்ட எண்ணிம உலகில் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக இம்மீப்பெரும்செயலாக்கம் (metaverse) ஆனது புதிய வணிக மாதிரிகளுக்கும் தீர்வுகளுக்குமான புதிய வழிகளைத் திறக்கிறது.
2026 ஆம் ஆண்டளவில் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 25 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்தை மீப்பெரும்செயலாக்கத்தில் (metaverse) செலவிடுவார்கள் என்று கார்ட்னர் ‘ப்ரெடிக்ட்ஸ் 2022’ அறிக்கை கூறுகிறது. மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு புரட்சிகர தொழில் நுட்பமாகும் வங்கிகள், காப்பீடுநிறுவனங்களி (புதிய காப்பீட்டுமுன்மொழிவுகளை சந்தைப்படுத்துவதற்கான எண்ணிம avatarஆக, கோரிக்கைகளுக்கான ஆலோசனை கூறுவராக) போன்ற பல செயல்களை உள்ளடக்கியது.
மீப்பெரும்செயலாக்கத்தை (metaverse) உருவாக்கும் தொழில்நுட்பங்கள் மீப்பெரும்செயலாக்கம் (metaverse) என்பது ஒரு புதிய தொழில்நுட்பம் அன்று – இது பல்வேறு தொழில்நுட்பங்களின் கலவையாகும். அவற்றில் சில முக்கியமானவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெரியதாக்கப்பட்டஉண்மைநிலை (AR): head mounted display ,HoloLens. போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி நடைமுறை வாழ்க்கை அனுபவத்தை வழங்க எண்ணிமஉலகத்தையும், நடைமுறை உலகத்தையும் இணைத்து மெய்நிகர் அதிவேக பயனர் அனுபவத்தை இது வழங்குகிறது.
மெய்நிகர் உண்மைநிலை(VR): இது பயனர்களுக்கு மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்கிறது (எண்ணிம விளையாட்டு போன்றது) அங்கு அவர்கள் மெய்நிகர் உலகின் ஒரு பகுதியாக உணர்கிறார்கள்.
சங்கிலிதொகுப்பு: இது மீப்பெரும்செயலாக்கத்தின் (metaverse)மூலம் தொடர்பு கொள்ளும் பயனர்களின் மெய்நிகர் வலைபின்னலை உருவாக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் அவர்/அவள் வகுப்பறையில் இருப்பதைப் போல ஒரு இணைய வகுப்பில் கலந்து கொள்ளலாம், பிற வகுப்பு தோழர்களுடன் (இணையத்தின் மெய்நிகர் தளங்களில் கலந்துகொள்பவர்களும்) தொடர்பு கொள்ளலாம். இது இணைக்கப்பட்ட 3D வலைபின்னலின் மூலம் மெய்நிகர் வகுப்பறையின் உண்மையான நடைமுறை வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது.
NFT, கிரிப்டோநாணயம்: நாணயப் பரிமாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்ட அணுகலின் பாதுகாப்பான வழிமுறையை வழங்க, மீப்பெரும்தரவகம் (metaverse) ஆனது NFT, கிரிப்டோநாணயம் ஆகியவற்றினை பயன்படுத்திகொள்கிறது. இணையத்தின் வாயிலான சில்லறைவிற்பணைஅங்காடியின் வாடிக்கையாளராக இருந்தால், அந்த சில்லறைவிற்பணை அங்காடிக்குள் நேரடியாக நடந்துசென்று, AR/VR சாதனங்கள் மூலம் அங்கு விற்பணை செய்யப்படுகின்ற பொருட்களைத் தொட்டு உணரவும், கிரிப்டோநாணய/NFT மெய்நிகர்நாணயங்கள் மூலம் அவற்றிற்கு பணம் செலுத்தவும் மீப்பெரும்செயலாக்கத்தைப் (metaverse) பயன்படுத்திகொள்ளலாம்.
மிக முக்கியமாக, மேககணினி சேவைகளின் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது, ஏனெனில் அவை உள்கட்டமைப்பு, தானியங்கி-அளவிடுதல், நம்பகத்தன்மை ,மீப்பெரும்செயலாக்கத்திலிருந்து (metaverse) உயர் செயல்திறன் தீர்வுகள் கூட கிடைக்கக்கூடும்.
வங்கித் துறையில் மீப்பெரும்செயலாக்கம்(metaverse)
ஏற்கனவே கூறியது போன்று, மீப்பெரும்செயலாக்க(metaverse) தொழில்நுட்பம் என்பது பெரியதாக்கப்பட்டஉண்மைநிலை (AR), மெய்நிகர் உண்மைநிலை(VR), கலந்த உண்மைநிலை (XR), விரிவாக்கப்பட்ட உண்மைநிலை(XR), செயற்கை நுண்ணறிவு, மேககணினி, 5ஜி ,பொருட்களுக்கானஇணையம் போன்ற பல்வேறு தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் கலந்த கலவையாகும். . இறுதிப் பயனர்கள் வங்கிச் சேவைகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றுவதற்கான வலுவான ஆற்றலை மீப்பெரும்செயலாக்கமானது (metaverse) கொண்டுள்ளது; இதன்மூலம் வங்கிகள் இப்போது நடைமுறையிலுள்ளவாறு புதிய சேவைகளை வழங்குவதோடு புதிய சந்தைகளையும் உருவாக்கமுடியும்.
மீப்பெரும்செயலாக்கத்தில்(metaverse), வங்கிகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றலாம். வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் avatars ஐ வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மீப்பெரும்-தொடுதிரை சேவைகளை வழங்க முடியும். மேலும், ATMs, வங்கி கிளைகள் ஆகியவை மெய்நிகர் உலகில் நுழைந்து சிறந்த வாடிக்கையாளர் இணைப்புகளை வழங்க முடியும். வங்கிகள் எண்ணிம கொடுப்பனவுகள், NFTகள், கிரிப்டோநாணயங்கள்,இரட்டை எண்ணிமங்களை மீப்பெரும்செயலாக்கத்தில்(metaverse) செயல்படுத்தலாம்.
கல்விகற்பதிலும் மேம்படுத்துதலிலும் மீப்பெரும்செயலாக்கம்(metaverse)
மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) பின்வரும் வழிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்விகற்பதிலும் மேம்படுத்துதலிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்:
தற்போது பல்வேறுபயனர்கள் யதார்த்தத்தில் மூழ்கியிருப்பதால் (MUVIR), பாரம்பரிய கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் ஒப்பிடும்போது கற்றல் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் ஊடாடக்கூடியதாகவும் மாறக்கூடும்.
மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) ஒரு உருவகப்படுத்துதலுக்கான அனுபவத்தை வழங்குகிறது; மெய்நிகர் உலகில் பயிற்சியளிப்பவர்கள் மாணவர்களுடன் பழகி தொழில்நுட்பத்தின் மென்மையான திறனுடைய பயிற்சிகளை வழங்கலாம். இதன்மூலம் AR , VR ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பனை மூலம் கற்றலை மேம்படுத்தி செயல்படுத்திட முடியும்.இதுஒரு முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட இலக்குகள், அளவீடுகள் ,திட்டங்களை உருவாக்க விரைவான ஒத்துழைப்புகளை செயல்படுத்துகிறது; தனிப்பட்ட தேவைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது செயலில் கல்விகற்றலை மேம்படுத்துகிறது.]
சில்லறை வர்த்தகத்தில் மீப்பெரும்செயலாக்கம்(metaverse)
மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) விரைவில் சில்லறை வணிகம் போன்ற துறைகளில் முத்திரை பதிக்கவிருக்கின்றது.
இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது முதல் மீப்பெரும் செயலாக்கத்தின்(metaverse)அடிப்படையிலான சில்லறை விற்பணையக அனுபவத்தை வருகின்ற தீபாவளியில் (அக்டோபர்/நவம்பர் 2023) அதன் அடுத்த பதிப்பான ‘Big billion day sale’.ஆக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Flipkart அதன் Ethereum தீர்வைப் பயன்படுத்தி metaverse நிறுவனமான Meta , Cryptocurrency ஆகிய இயங்குதள வழங்குநரான Polygon உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த தீர்வுகளுக்கு Flipverse என்று பெயரிடப்பட்டுள்ளது , இது பற்றி ஏற்கனவே மிக உற்சாகத்துடன் அதுசெயல்படுவதற்காக தயார்நிலையில் உள்ளது. இதன்வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசியில் இருபரிமான(2டி) இயங்கு தளங்களில் இருந்து மீப்பெரும்செயலாக்கத்தில்(metaverse) அதிவேக முப்பரிமான(3டி) அனுபவத்திற்கு மாறுவதை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
eDAO என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற(eCommerce Decentralized Autonomous Organisation) எனும் புதிய சேவை வடிவமைப்பைப் பயன்படுத்தி, பாதுகாப்பான கிரிப்டோ நாணய பரிமாற்றங்களுக்காக Ethereum Layer-2 கட்டமைப்புடன் web 3.0 தொழில்நுட்பத்தில் Flipverse உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Ethereum Layer-2 போன்ற பாதுகாப்பான , அளவிடக்கூடிய தளத்தில் கிரிப்டோ நாணய பரிமாற்றங்களுக்கு eDAO அனுமதிசீட்டு நாணயத்தினைப் பயன்படுத்தி கொள்கிறது. மெய்நிகர் கச்சேரிகள் போன்ற மெய்நிகர் அனுபவ தளங்களுக்கு பல்லூடகத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் eDAO பயன்படுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Flipverse ஆனது கைபேசிகள் மூலமாகவும் இணையஉலாவி மூலமாகவும் அணுக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இறுதிப் பயனர்களுக்கு மெய்நிகர் இணைய சில்லறைவிற்பணைஅங்காடி அனுபவத்தை உருவாக்குவது மட்டுமின்றி, தளங்களில் தங்களை உணரவும், தொட்டுணரவும் , மூழ்கவும் முடியும், ஆனால் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்காக பொருட்களின் உற்பத்தி வெளியீடுகள், பிராண்ட் செயல்படுத்துதல் விளையாட்டுகளையும்/ போட்டிகளையும் நடத்த முடியும்.
இந்த ‘மீப்பெரும்செயலாக்கமானது(metaverse) ஒரு சேவையகத்தின்’ துவக்கமாக கூட இருக்கலாம், இதில் பாலிகான் போன்ற துவக்கநிலைநிறுவனங்கள் சிறந்த சந்தை அணுகல் , வாடிக்கையாளர் அனுபவத்திற்காக மீப்பெரும் செயலாக்கத்தின் (metaverse) அடிப்படையிலான தீர்வு மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை, கருத்துகளை கதைகளங்களை கூட வழங்கலாம். இதற்கு AWS, Azure , GCP போன்ற வலுவான, அளவிடக்கூடிய மேககணினி இயங்குதளங்கள் தேவைப்படும், மேலும் எதிர்காலத்தில் இந்த தளங்களில் சில மீப்பெரும் செயலாக்கம்த்தின்(metaverse)சொந்த சேவைகளையும் எதிர்பார்க்கலாம்.

மீப்பெரும்தரவகத்தின்(metaverse)எதிர்கால போக்குகள்
உலகெங்கிலும் உள்ள Roblox,Sandbox,Decentraland, Otherside,போன்ற பலவற்றிற்கான பாரிய பயனர் தளத்தை காட்சியாக காண்பதன் மூலம் மீப்பெரும் தரவகத்தின்(metaverse) தற்போதைய நிலையை தெளிவாகக் காட்சிப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில், மீப்பெரும்தரவகத்தை(metaverse) பொறுத்தவரை பின்வருவனவற்றை எதிர்பார்க்கலாம்.
வணிகநிறுவனங்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் மீப்பெரும்தரவக(metaverse) தொழில்நுட்பத்தைப் பின்பற்றி, தங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக கலந்து செயல்படுவதற்கு இது ஒரு வலுவான வாய்ப்பாகக் கருதலாம். சில பெரிய பிராண்டுகள் ஏற்கனவே மீப்பெரும்தரவக(metaverse) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான metaverse – Nike: Nikeland; Gucci: Gucci Garden ஆகியவற்றினை பயன்படுத்தி வருகின்றன .
சிறந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஒவ்வொரு தொட்டுணரக்கூடிய சொத்தையும் மீப்பெரும்தரவகத்தில்(metaverse)மெய்நிகர் உறுப்பாகச் சேர்க்கக்கூடும். சிலர்(Facebook: Metaquest2; Nvidia: Omniverse). ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளனர்
இறுதி வாடிக்கையாளர்கள் மெய்நிகர் உலகை முயற்சிக்கவும், உண்மைநிலையை காணவும், விளையாட்டுகளை விளையாடவும் மெய்நிகர் விடுமுறை அனுபவங்களை அனுபவிக்கவும், ஆடம்பர பிராண்டுகள் மீப்பெரும்தரவகத்தில்(metaverse)AR தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடும்.

 

 

 

 

 

 

%d bloggers like this: