உங்கள் ஆணைகளை செயல்படுத்தக் காத்திருக்கும் டெர்மினலுக்கு, அட்டகாசமான பல அலங்காரங்கள் செய்ய விருப்பமா?
சாதாரணமான கருப்புத்திரை உங்களுக்கு சலிப்பு தருகிறதா?
வாருங்கள். உங்கள் கருப்புத் திரையை ஆங்கிலத் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் உருமாற்றலாம்.
github.com/GitSquared/edex-ui இங்கு சென்று பாருங்கள்.
github.com/GitSquared/edex-ui/releases இங்கு சென்று Assets பகுதியில் உள்ள
eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கோப்பை இறக்கிக் கொள்ளுங்கள்.
பின் ஒரு டெர்மினல் சென்று
chmod a+x eDEX-UI-Linux-x86_64.AppImage
என்ற கட்டளை தருக. இது உங்கள் கோப்பை execute செய்வதற்கு ஏற்றதாக மாற்றி விடும்.
பின் ./eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கட்டளை தருக.
திடுமென உங்கள் திரை, ஒரு மாயத்திரையாக மாறிவிடுவதைக் காண்பீர்கள்.
அதே டெர்மினல்தான். அதே கட்டளைகள் தான். ஆனால், சில லாகிரி வஸ்துகளைச் சேர்த்து, ஒரு மாயத்திரையாக உருவெடுக்கிறது.
இதை வைத்து சில காலம் நண்பர்கள், உறவினர்களிடம் படம் காட்டி மகிழ்க.