வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டின் மேம்பாட்டிற்கான மேம்படுத்துநர்களின் வழிகாட்டி

இந்த வழிகாட்டியானது, சிறந்த திற மூலக் கருவிகளைப் பயன்படுத்தி, வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டு மேம்பாட்டிற்கு, கருத்தாக்கத்திலிருந்து வரிசைப்படுத்தல் வரை செல்ல அனுமதி அளிக்கிறது. தற்போதைய போட்டிமிகுந்த பயன்பாட்டு சந்தையில் வெற்றியை உறுதி செய்வதற்கான பாதையின் வரைபடத்தை இது வழங்குகிறது!
வணிகநிறுவனங்களுக்கான கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்கு தயாரா? ஆம் எனில் இந்த வழிகாட்டி அதற்காகவே வெளியிடப்பெற்றுள்ளது. அவ்வாறான பணியை துவங்குவதற்கு முன்அந்த பணிக்கான தயார்நிலையை மதிப்பிடுவது, முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்வது, பயன்பாட்டின் வளர்ச்சியின் வாழ்க்கைச் சுழற்சி, பரிசோதனை முறைகள், கைபேசி பயன்பாடுகளைச் பரிசோதிப்பதற்கான சிறந்த திறமூலக் கருவிகள் வரை, இந்த வழிகாட்டியானது நம்முடைய வெற்றிக்குத் தேவையான அறிவையும் கருவிகளையும் கண்டிப்பாக வழங்குகின்றது.
இந்த கட்டுரையைத் தொடங்குவதற்கு முன், இந்த வழிகாட்டியை பயன்படுத்துபவரைப் பற்றிய பின்வருமாறான திறன்கள் இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது
பொதுவான கைபேசி கட்டமைப்பினை பற்றி குறைந்தது ஒரு கைபேசி பயன்பாட்டின் கட்டமைப்பைபற்றி நன்கு அறிந்திருக்கின்றோம்.
குறைந்தது ஆறு மாதங்களாவது கைபேசி பயன்பாட்டில் பரிசோதனை செய்து அனுபவம்பெற்றுள்ளோம்.
நம்முடைய கைபேசி மேம்பாட்டுப் பயிற்சியை தனிப்பட்ட செயல் திட்டங்களிலிருந்து வணிகநிறுவன நிலைக்கு எடுத்துச் சென்று வருமானம் ஈட்டுவதில் அதிக ஆர்வமாக உள்ளோம்.
கைபேசி பயன்பாட்டை உருவாக்கிடுவதற்கான நம்முடைய சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் வணிக நிறுவனத்துடன்இதுகுறித்து ஏற்கனவே விவாதித்து செயல்படுத்த தயாராக இருக்கின்றோம்
மேலே கூறியவற்றில் சிலவற்றை (அல்லது ஏதேனும்) சரிபார்க்க வில்லை என்றால், வருத்தப்பட வேண்டாம்! இந்தக் கட்டுரை இன்னும் மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கலாம். இங்கே விவாதிக்கப்பட்ட பல கொள்கைகள் மென்பொருள் மேம்பாட்டின் பல வடிவங்களுக்கும் பொருந்தும். மேலும், நாம்ஒரு தீவிர மென்பொருள் உருவாக்குநராக ஆவற்கு மிகஆர்வமாக இருந்தால், இதுபோன்ற செய்திகளைப் பற்றிய அறிவைப் பெறுவது ஒரு நல்ல நடைமுறையாகும். எனவே, பயிற்சியை துவங்குவோமா.
வணிகநிறுவனங்களுக்கான கைபேசி பயன்பாட்டினை உருவாக்கத் துவங்குவது ஒரு உற்சாகமான , பலனளிக்கும் முயற்சியாக இருக்கும். இருப்பினும், இந்த களத்திற்குள் நுழைவதற்கு முன், நம்முடைய தயார்நிலையை மதிப்பிடுவதும், வணிகநிறுவனங்களுக்கான கைபேசிபயன்பாடுகளை வெற்றிகரமாக உருவாக்க நமக்கு என்னென்ன தேவை என்பதை உறுதிப்படுத்துவதும் மிகமுக்கியமான செயலாகும்.
வணிகநிறுவன கைபேசிபயன்பாடுகளை உருவாக்குவதற்காக கைபேசி பயன்பாட்டின் மேம்பாட்டுக் கொள்கைகளில் மிகவலுவான அடித்தளம் தேவையாகும். Java, Swift, அல்லதுr React Native போன்ற நிரலாக்க மொழிகளில் நம்முடைய திறமையை நாம் குறிவைக்க விரும்பும் தளத்தைப் பொறுத்து மதிப்பிடவும். நிறுவன பயன்பாட்டு மேம்பாட்டிற்கான வடிவமைப்புகள், கட்டமைப்புகள் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுடன் பழக்கப்படுத்திக் கொள்க. சில துறைகளில் நிபுணத்துவம் இல்லை என்றால், திறமையை மேம்படுத்துவதில் நேரத்தை முதலீடு செய்திடுக அல்லது அனுபவம் வாய்ந்த மேம்படு்த்துநர்களுடன் ஒத்துழைத்து அனுபவத்தை பெற்றிடுக. இதற்காக நாளொன்றுக்கு 2முதல்-4 மணிநேரம் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குச் செலவழித்திடுக என பரிந்துரைக்கப்படுகின்றது. ஒரு சிறந்த பயன்பாட்டினை உருவாக்க, குறைந்தபட்சம் 5-6 பயன்பாடுகளையாவது உருவாக்கி, பயன்பாட்டு சந்தையில் வெளியிடக்கூடியவாறு திறன்பெற்றிடுக. இது அனுபவத்தை மட்டுமல்லாது, நம்முடைய சொந்த செயல்திறன்களில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தரக்கூடும்.
தொடங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய செயல்கள்
வணிகநிறுவன கைபேசிபயன்பாடுகளின் வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கருத்தில் கொள்ள வேண்டிய பல முக்கியமான காரணிகள் உள்ளன. ஒழுங்காகத் திட்டமிடுவதற்கும் உருவாக்கிடுவதற்கும் நேரத்தைச் செலவிடுவது மதிப்புமிக்க வளங்களைச் சேமித்து, சுமூகமான வளர்ச்சி செயல்முறையை உறுதிசெய்கின்றது.
பயனாளரின் தேவைகளும் , பயன்பாட்டு வழக்கங்களும்: பயன்பாட்டின் இறுதிப் பயனாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும். பயனாளர்களுடன் விரிவான கலந்துஉரையாடல்களில் ஈடுபடுக, ஆய்வுகளை நடத்திடுக பயனாளரின் , விரிவான தேவைகளை உருவாக்க பயனாளர்களின் கருத்துக்களை சேகரித்திடுக. பயன்பாடு நிறைவேற்ற வேண்டிய முக்கிய பயன்பாட்டு நிகழ்வுகளையும் செயல்பாடுகளையும் அடையாளம் காண்க, அவை அவ்வணிகநிறுவனத்தின் இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை உறுதிப்படுத்திடுக. பயனாளரின் விவரங்களை ஆவணப்படுத்துதல் கம்பிச்சட்டங்களை அல்லது முன்மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவை பயன்பாட்டின் செயலி, தொடர்புகளை காட்சிப்படுத்த உதவும்.
கட்டமைப்புகளும் , நிரலாக்க மொழிகளின் தெரிவுசெய்தலும்: திறமையான பயன்பாட்டின் வளர்ச்சிக்கு சரியான கட்டமைப்புகளையும் நிரலாக்க மொழிகளையும் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். iOS, Android அல்லது குறுக்குத்தள தீர்வுகள் போன்ற நாம் உருவாக்கப்போகும் பயன்பாட்டிற்கான இலக்கு இயங்குதளம்(களை) கருத்தில் கொள்க.குறுக்குத்தள மேம்பாடு திறன்களை வழங்கும் React Native, Flutter, அல்லது Xamarin போன்ற பிரபலமான கட்டமைப்புகளை மதிப்பிடுக. அதேபோன்று, ஸ்விஃப்ட், ஜாவா அல்லது ஜாவாஸ்கிரிப்ட் போன்ற நிரலாக்க மொழிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்பு தளத்தைப் பொறுத்து மதிப்பிடச்செய்து தெரிவுசெய்திடுக.
கட்டமைப்பும் வடிவமைப்பும்: அளவிடுதல், விரிவாக்கம்செய்தல், பராமரிப்பு செய்தல் ஆகியவற்றை ஆதரிக்கின்ற ஒரு கட்டமைப்பினை வடிவமைத்திடுக. மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டாளர் (model-view-controller (MVC)), மாதிரி-காட்சி-காட்சிமாதிரி (model-view-viewmodel (MVVM)) அல்லது சுத்தமான(தெளிவான) கட்டமைப்பு போன்ற கட்டமைப்பு வடிவங்களைப் பயன்படுத்துவதைக் கவனத்தில்கொள்க. குறிமுறைவரிகளின் அமைப்பையும் தொடர்புள்ளவை களைப் பிரிப்பதற்கு வசதியாக ஒருகூறுநிலை, அடுக்கு ஆகிய அனுகு முறையை நிறுவுகைசெய்திடுக. வடிவமைப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயனாளர் கருத்துக்களை இணைத்து பயனாளர் இடைமுகங்களின் (UI) உள்ளுணர்வு, தடையற்ற பயனாளர் அனுபவங்களுக்கு (UX) முன்னுரிமை கொடுத்திடுக.
ஏற்கனவே உள்ள அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல்: ஒரு வணிகநிறுவன சூழலில், ஏற்கனவே உள்ள அமைப்புகள், தரவுத்தளங்கள் அல்லது API களுடன் பயன்பாட்டை ஒருங்கிணைப்பது பெரும்பாலும் அவசியமாகும். பயன்பாடுகளின் வளர்ச்சியின் போது சாத்தியமான பாதையின் தடைகளைத் தவிர்க்க தேவையான ஒருங்கிணைப்புகளை துவக்கத்திலேயே தீர்மானித்திடுக. பயன்பாடுகள், பிற நிறுவன அமைப்புகள் ஆகியவற்றிற்கு இடையே சுமூகமான தொடர்பை உறுதிசெய்ய, கிடைக்கக்கூடிய APIகள், தரவு வடிவங்கள் , ஏற்புறுதி வழிமுறைகளை அடையாளம் கண்டிடுக. API களை முறையாக ஆவணப்படுத்துவது, தெளிவான தகவல் தொடர்பு பலகங்களை உருவாக்குவது இந்த செயல்முறையை துரிதப்படுத்தலாம்.
செலவு பகுப்பாய்வும் ஆதாரங்களை திட்டமிடுதலும்: வணிகநிறுவன பயன்பாடுகளை உருவாக்குவது நிதி சார்ந்த செயல்களில் உளளடங்கும். வன்பொருள், மென்பொருள், பயன்படுத்திடுவதற்கான உரிமம், மூன்றாம் தரப்பு சேவைகள் தொடர்பான செலவுகள் உட்பட மேம்பாட்டு செலவுகளை மதிப்பிடுக. இந்த செயல்திட்டத்திற்கு கூடுதல் ஆதாரங்கள் அல்லது சிறப்புத் திறன்கள் தேவையா என்பதைத் தீர்மானித்திடுக, பணியமர்த்தல் அல்லது தற்காலிகபணியமர்த்துதல் (outsourcing) சாத்தியத்தை மதிப்பிடுக. விரிவான நிதிதிட்டமிடுதலும் காலவரிசையை உருவாக்குவதும் எதிர்பார்ப்புகளை நிர்வகிக்க உதவுகிறது மேலும் பயன்பாட்டின் வாழ்க்கை சுழற்சி முழுவதும் தேவையான ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
செயல்திட்ட மேலாண்மையும் ஒத்துழைப்பும்: பயன்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், பணிகளை ஒதுக்கவும், பயனுள்ள ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும் செயல்திட்ட மேலாண்மை கட்டமைப்பை நிறுவுகைசெய்தல். Jira, Asana, அல்லது Trello போன்ற செயல்திட்ட மேலாண்மைக் கருவிகளைப் பயன்படுத்தி வளர்ச்சி நடவடிக்கைகளை ஒழுங்கமைத்திடுக முன்னுரிமை வழங்கிடுக. ஒரு சுறுசுறுப்பான மேம்படுத்துதல் அணுகுமுறையை ஏற்றுக்கொள்க, செயல்திட்டத்தை சிறுசிறுசெயலோட்டங்களாக உடைத்து, பயன்பாட்டின்முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய வழக்கமான மேம்படுத்துநர்களின் கூட்டங்களை நடத்திடுக. மேம்பாட்டுகுழு உறுப்பினர்கள், பங்குதாரர்கள் ,சம்பந்தப்பட்ட எந்தவொரு வெளி தரப்பினருக்கும் இடையே பயனுள்ள தகவல்தொடர்புகளை எளிதாக்கிடுக.
இந்த பயன்பாட்டின் மேம்பாட்டின் வளர்ச்சிக்கு முந்தைய பரிசீலனைகளுக்கு நேரம் ஒதுக்குவது வணிக நிறுவன பயன்பாட்டின் மேம்பாட்டு பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றது. பயனாளர்களின் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது, பொருத்தமான கட்டமைப்புகள், நிரலாக்க மொழிகளைத் தேர்ந்தெடுப்பது, ஒரு வலுவான கட்டமைப்பை வடிவமைத்தல், கவனமாக செலவு பகுப்பாய்வு நடத்துதல் ஆகியவை வெற்றிகரமான பயன்பாட்டினுடைய வெளியீட்டின் முடிவுக்கு இன்றியமையாதவைகளாகும். உருவாக்கத் துவங்கிடுக
அடித்தளத்தை அமைத்து, துவக்கிநிலையிலான உருவாக்கப்பணிகளை முடித்தவுடன், வணிக நிறுவன கைபேசிபயன்பாட்டின் வளர்ச்சிக் கட்டத்திற்கு முழுக்கு போட வேண்டிய நேரம் இதுவாகும்.
திட்டமிடுதலும் தேவை பகுப்பாய்வும்: சேகரிக்கப்பட்ட பயனர் தேவைகளை நிரலாக்கத்திற்கு ஏற்ப மொழிபெயர்ப்பதன் மூலம் துவங்கிடுக விரிவான செயல்திட்ட வழக்கங்ளைப் பயன்படுத்திடுக. மேம்பாட்டு செயல்முறையை நிர்வகிக்கக்கூடிய பணிகளாகப் பிரித்து, மைல்கற்கள் , வழங்கக்கூடியவற்றைக் கோடிட்டுக் காட்டும் பாதையின் வரைபடத்தை உருவாக்கிடுக. சாத்தியமான அபாயங்களை , சார்புகளைக் கண்டறிந்து, அவற்றைத் தணிக்க தேவையான உத்திகளை வகுத்திடுக. செயல்திட்டத்தைச் சரிபார்த்திடுக செம்மைப்படுத்திடுக பங்குதாரர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்திடுக.
வடிவமைப்பும் முன்மாதிரியும்: அடுத்து, பயன்பாட்டின் பயனர் இடைமுகம் ( user interface (UI)) , பயனர் அனுபவம் ( user experience (UX)) ஆகியவற்றினை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்திடுக. பயன்பாட்டின் செயலி , செயல்பாட்டைக் காட்சிப்படுத்த கம்பிச்சட்டங்கள் அல்லது ஊடாடும் முன்மாதிரிகளை உருவாக்கிடுக. இவ்வடிவமைப்பு ஆனது குறிப்பிட்ட வணிக நிறுவனத்தின் வணிகமுத்திரையின் வழிகாட்டுதல்களுடன் இணைந்திருப்பதை உறுதிசெய்வது, இறுதிப் பயனர்களுக்கு உள்ளுணர்வு, தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைத் தேடிப்பெற்றிடுக, திருப்திகரமான முடிவை அடையும் வரை வடிவமைப்பைப் பற்றி மீண்டும் மீண்டும் கூறிடுக.
பயன்பாட்டின்மேம்பாட்டு குறிமுறைவரிகள்: செந்தரமான செயல்திட்டம், வடிவமைப்பு ஆகியவற்றுடன், வணிக நிறுவன பயன்பாட்டைக் குறிமுறைவரிகளை எழுதத் துவங்குவதற்கான நேரம் இதுவாகும். சிறந்த குறிமுறைவரிகளின் நடைமுறைகளைப் பின்பற்றிடுக, சுத்தமான ,கூறுநிலை குறிமுறைவரிகளின் அடிப்படையை பராமரித்திடுக, தேர்ந்தெடுக்கப்பட்ட நிரலாக்க மொழி, வார்ப்புருகட்டமைப்பின் மரபுகளைப் பின்பற்றிடுக. வெளிப்புற அமைப்புகள் அல்லது APIகளுடன் சரியான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, தேவையான பகுப்பாய்வு கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வசதிகளையும் செயலிகளையும் செயல்படுத்திடுக. குறிமுறைவரிகளை எளிதாக படித்திடுமாறு பராமரித்திடுக செயல்திறனை மேம்படுத்திடுக குறிமுறைவரிகளை தவறாமல் மதிப்பாய்வு செய்து மறுவடிவமைப்புசெய்திடுக.
பரிசோதனையும் தர உத்தரவாதமும்: செயலியின் நிலைத்தன்மை, செயல்பாடு , தேவைகள் ஆகியவற்றிற்கு இணங்கி செயல்படுவதை உறுதி செய்வதற்கான வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டின் மேம்பாட்டில் பரிசோதனை ஒரு முக்கியமான கட்டமாகும். அலகு சோதனை, ஒருங்கிணைப்பு சோதனை , பயனர் ஏற்றுக்கொள்ளும் சோதனை உள்ளிட்ட பரிசோதனை முறைகளை கலந்து பயன்படுத்திடுக. பரந்த அளவிலான காட்சிகள், விளிம்பு வழக்குகளை உள்ளடக்கிய பரிசோதனை வழக்குகளை உருவாக்கிடுக. மேம்படுத்துதல் செயல்பாட்டின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ஏதேனும் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய, பின்னடைவு பரிசோதனையை தவறாமல் செய்திடுக.
மறுசெயலும் சுறுசுறுப்பான அணுகுமுறையும்: பயன்பாட்டின்வளர்ச்சி வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் மீண்டும் செயல்படும் , சுறுசுறுப்பான அணுகுமுறையை பின்பற்றிடுக. மேம்படுத்துதல் செயல்முறையை சிறுசிறுசெயலிகளாக அல்லது மறு செய்கைகளாக உடைத்திடுக, இவைஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயல்பாட்டை வழங்குவதில் அதிககவனம் செலுத்துகின்றன. பயனாளரின் கருத்துக்களை சேகரித்திடுக அதனடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்திடுக வழக்கமான மதிப்புரைகள் , பின்னோக்குசெயல்களை செயல்படுத்திடுக. ஒரு மென்மையான , திறமையான பணிப்பாய்வுகளை உறுதிசெய்ய தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு, விநியோக நடைமுறைகளைத் தழுவி பின்பற்றிடுக.
ஆவணப்படுத்தலும் அறிவு பரிமாற்றமும்: எதிர்கால பராமரிப்பு , அறிவு பரிமாற்றத்தை எளிதாக்க பயன்பாட்டின் கட்டமைப்பு, வடிவமைப்பு செயலியின் முடிவுகள், தொடர்புடைய செயல்முறைகளை ஆவணப்படுத்திடுக. இறுதிப் பயனர்கள் பயன்பாட்டை திறம்பட வழிநடத்த உதவும் பயனர் வழிகாட்டிகள் அல்லது கையேடுகளை உருவாக்கிடுக. கூடுதலாக, செயல்திட்டத்தில் பின்னர் சேரக்கூடிய மேம்படுத்துநர்களுக்கு விரிவான ஆவணங்களை வழங்கிடுக, தடையற்ற உள்செலுத்துதல் செயல்முறையை உறுதிசெய்து ஒத்துழைப்பை வளர்க்த்திடுக.
பரிசோதனை, பரிசோதனை,பரி சோதனை
ஏற்கனவே முந்தைய பகுதியில் பரிசோதனை பற்றி சுருக்கமாக விவாதிக்கப் பட்டது மீண்டும் அதே தலைப்புஉள்ளது, ஏனெனில் பயன்பாட்டின் வெற்றிக்கு பரிசோதனையே மிகவும் முக்கியமாகும்! பரிசோதனை என்பது வணிக நிறுவன பயன்பாட்டின் தரம், செயல்பாடு , பயனர் அனுபவத்தை உறுதி செய்கின்ற கைபேசிபயன்பாட்டின் மேம்பாட்டு செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
பரிசோதனையின் முக்கியத்துவம்: பயன்பாடானது இறுதிப் பயனர்களை அடையும் முன், சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதில் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. வணிக நிறுவன கைபேசிபயன்பாடு எதிர்பார்த்தபடி செயல்படுவதையும், பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், தடையற்ற அனுபவத்தை வழங்குவதையும் உறுதிப்படுத்த உதவுகிறது. முழுமையான பரிசோதனையானது பிழைகள், செயலிழப்புகள் , பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படுவதைக் குறைக்கிறது, பயனர் திருப்தியை மேம்படுத்துகிறது , பயன்பாடு அதனை வழங்கும் நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்கிறது.
பரிசோதனை முறைகள்: இப்போது பயன்பாட்டின் பல்வேறு பரிசோதனை முறைகளை காண்போம்.
அலகுபரிசோதனை(Unit testing ): முதலில் அலகுபரிசோதனையுடன் துவங்கிடுக, இது கைபேசி பயன்பாட்டின் தனிப்பட்ட அலகுகள் அல்லது கூறுகளை தனித்தனியாக பரிசோதிப்பதில் அதிககவனம் செலுத்துகிறது. சிறிய, சுதந்திரமான தனித்தனியாக அலகுகளின் சரியான தன்மையைச் சரிபார்ப்பதன் மூலம், பயன்பாட்டின் மேம்படுத்துல் செயல்பாட்டின் துவக்கத்திலேயே சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்யமுடியும்.
ஒருங்கிணைப்புச் பரிசோதனை(Integration testing): ஒருங்கிணைப்பு பரிசோதனையானது வெவ்வேறு கூறுகளுக்கு இடையேயான தொடர்புகளைச் சரிபார்த்து, அவை திட்டமிட்டபடி ஒன்றாகச் செயல்படுவதை உறுதி செய்கிறது. வெளிப்புற அமைப்புகள் அல்லது APIகளுடன் ஒருங்கிணைப்பதை பெரும்பாலும் நம்பியிருக்கும் வணிகநிறுவன பயன்பாடுகளுக்கு இந்த வகையான பரிசோதனை மிகவும் முக்கியமாகும்.
பயனர் ஏற்றுக்கொள்ளும் பரிசோதனை (User acceptance testing (UAT)): UAT என்பது நடைமுறையிலான உலக சூழலில் பயன்பாட்டின் செயல்பாட்டைச் பரிசோதிப்பதை உள்ளடக்குகிறது, பொதுவாக இதுஇறுதிப் பயனர்கள் அல்லது இலக்கு பார்வையாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. பயன்பாடு ஆனது பயனர் எதிர்பார்ப்புகள், பயன்பாட்டுத் தேவைகள், குறிப்பிட்ட வணிகச் சூழ்நிலைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதைச் சரிபார்க்க இது உதவுகிறது.
செயல்திறன் பரிசோதனை (Performance testing): அதிக பணிச்சுமைகள் அல்லது ஏராளமான அளவிலான பயனாளர்கள் பயன்படுத்திடுவதால்எழுகின்ற அதிபோக்குவரத்து போன்ற பல்வேறு நிலைமைகளின் கீழ் பயன்பாடு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்தசெயல்திறன் சோதனை அளவிடுகிறது. விரைவான பதிலளிக்கக் கூடிய பயனர் அனுபவத்தை வழங்க, இடையூறுகள், அளவிடுதல் சிக்கல்கள் அல்லது மேம்படுத்தல் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிய இது உதவுகிறது.
பாதுகாப்பு பரிசோதனை(Security testing ): பயன்பாட்டின் பாதுகாப்பு வழிமுறைகளில் உள்ள பாதிப்புகளையும் பலவீனங்களையும் கண்டறிவதில் பாதுகாப்புபரிசோதனை அதிககவனம் செலுத்துகிறது. பாதுகாப்பு மதிப்பீடுகள் , ஊடுருவல் பரிசோதனைகளை செயல்படுத்துவதன் மூலம், முக்கியமான தரவைப் பாதுகாக்கலாம் மேலும் தொழில் தரநிலைகளுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்குவதை உறுதிசெய்யலாம்.
தானியங்கிபரிசோதனையும்(Test automation ) தொடர்ச்சியான ஒருங்கிணைப்பும்: பரிசோதனை செயல்முறையை சீராக்க செயல்திறனை மேம்படுத்த, தானியங்கி பரிசோதனை தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடைமுறைகளை இணைத்துக்கொள்க.
தானியங்கிபரிசோதனை(Test automation ) : பரிசோதனைகளை தானியங்கியாக்குவது, பரிசோதனை வழக்குகள், காட்சிகளை மீண்டும் மீண்டும் இயக்க நம்மை அனுமதிக்கிறது, நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது. Appium, Espresso அல்லது XCTest போன்ற கருவிகள் பல்வேறு தளங்களில் பரிசோதனைகளை தானியக்கமாக்குவதற்கான கட்டமைப்பை வழங்குகின்றன, இவைசெந்தரமான நம்பகமான முடிவுகளை உறுதி செய்கின்றன.
தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு ( Continuous integration (CI)): CI ஆனது ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட களஞ்சியத்தில் குறிமுறைவரிகளின் மாற்றங்களைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து, சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக தானியங்கி பரிசோதனைகளை இயக்குகிறது. Jenkins, CircleCI, அல்லது GitLab CI/CD போன்ற CI கருவிகள் உருவாக்கம், பரிசோதனை , வரிசைப்படுத்தல் செயல்முறைகளை தானியக்கமாக்க உதவுகின்றன, ஒத்துழைப்பை ஊக்குவிக்கின்றன செந்தர குறிமுறைவரிகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.
பீட்டா பரிசோதனையும்(Beta testing) பயனாளர்களின் கருத்துகளும்: பீட்டா சோதனை அல்லது துவக்க அனுகல் திட்டங்கள் மூலம் பரிசோதனைச் செயல்பாட்டில் பயனர்களை ஈடுபடுத்துவது மதிப்புமிக்க நுண்ணறிவு , கருத்துக்களை வழங்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் பயன்பாட்டை அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் பரிசோதிக்க அனுமதித்திடுக, பயன்பாட்டினை, செயல்திறன் மீதமுள்ள சிக்கல்கள் பற்றிய கருத்துக்களை சேகரத்திடுக. தேவையான மேம்படுத்துதல்களைச் செய்வதற்கும் பயன்பாட்டின் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தைச் செம்மைப்படுத்துவதற்கும் அவர்களின் கருத்தைப் பயன்படுத்திகொள்க.
பின்னோக்கு பரிசோதனை (Regression testing): பயன்பாட்டில் புதிய மாற்றங்கள் அல்லது புதுப்பிப்புகள் புதிய சிக்கல்களை அறிமுகப்படுத்தவோ அல்லது ஏற்கனவே உள்ள செயலிகளை உடைக்கவோ இல்லை என்பதை பின்னோக்கு பரிசோதனை உறுதி செய்கிறது. முன்பு பரிசோதிக்கப்பட்ட அம்சங்களை மீண்டும் பரிசோதனை செய்வதன் மூலமும், முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும், பயன்பாட்டின் நிலைத்தன்மையை பராமரிக்கலாம் எதிர்பாராத பின்னடைவுகளைத் தவிர்க்கலாம்.
வணிகநிறுவன கைபசிபயன்பாட்டு மேம்பாட்டிற்கு முழுமையான பரிசோதனை ஒரு முக்கிய அம்சமாகும். பல்வேறு பரிசோதனை முறைகளைச் செயல்படுத்துதல், தானியங்கிபரிசோதனை தொடர்ச்சியான ஒருங்கிணைப்பைப் பயன்படுத்துதல் பயனர் கருத்துக்களைத் தீவிரமாகத் தேடுதல் ஆகியவை உயர்தர, நம்பகமான பயனாளரின் நட்புடன்கூடிய பயன்பாட்டை வழங்க உதவும்.
கைபேசி பயன்பாடுகளை பரிசோதிப்பதற்கான சிறந்த திறமூல கருவிகள்
வணிகநிறுவனங்களுக்கான கைபேசி பயன்பாடுகளை பரிசோதிக்கும் போது, திறமூலக் கருவிகளை கொண்டுமேம்படுத்துவது பரிசோதனை திறன்களையும் செயல்திறனையும் கணிசமாக மேம்படுத்தும். இந்தப் பிரிவில், கைபேசி பயன்பாடுகளைபரிசோதிப்பதற்காகக் கிடைக்கின்ற சில சிறந்த திறமூலக் கருவிகளைப் பற்றி காண்போம்.
Appium: Appium என்பது iOS, Android , Windows உட்பட பல்வேறு தளங்களில் கைபேசி பயன்பாடுகளை பரிசோதிப்பதற்கான பிரபலமான திறமூல தானியங்கி கட்டமைப்பாகும். இது ஜாவா, ஜாவாஸ்கிரிப்ட், பைதான் அல்லது ரூபி போன்ற பல்வேறு நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தி ஒரு பயன்பாட்டினை சரிபார்ப்பதற்கான பரிசோதனைகளை எழுத அனுமதிக்கின்ற ஒரு ஒருங்கிணைந்த API ஐ வழங்குகிறது. Appium ஆனது native , hybrid ஆகிய இரு பயன்பாட்டின் பரிசோதனைகளையும் ஆதரிக்கிறது, இது கைபேசி பயன்பாட்டின்மேம்படுத்துநர்களுக்கான பல்துறை தேர்வாக அமைகிறது.
Espresso:: இது ஆண்ட்ராய்டு பயன்பாட்டின்பரி சோதனைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திற மூல பரிசோதனை கட்டமைப்பாகும்.இது கூகிள் நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்டது, இது சுருக்கமான, படிக்கக்கூடிய API ஐ வழங்குகிறது, இது பரிசோதனைகளை எழுதுவதையும் பராமரிப்பதையும் எளிதாக்குகிறது. பயன்பாட்டுச் செயலிகளுடன் தானியங்கியான ஒத்திசைவு, பயனர் தொடர்பு களுக்கான ஆதரவு ,உள்ளமைக்கப்பட்ட பரிசோதனை பல்லியம் (orchestration) உள்ளிட்ட UI சோதனைக்கான சக்திவாய்ந்த அம்சங்களை இது வழங்குகிறது.
XCTest: XCTest என்பது iOS பயன்பாட்டு பரிசோதனைக்கான ஆப்பிளின் திறமூல பரிசோதனை கட்டமைப்பாகும். Swift அல்லது Objective-C ஐப் பயன்படுத்தி iOS பயன்பாடுகளுக்கான பரிசோதனைகளை எழுதவும் செயல்படுத்தவும் மேம்படுத்துநர்களை இது அனுமதிக்கிறது. XCTest ஆனது UI பரிசோதனை, செயல்திறன் பரிசோதனை , ஒத்திசைவற்ற பரிசோதனை உள்ளிட்ட பல அம்சங்களை வழங்குகிறது. இது Xcode உடன் நன்றாக ஒருங்கிணைக்கிறது, இது ஆப்பிளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE), தடையற்ற பரிசோதனை செயல்படுத்தல் , அறிக்கையிடல் திறன்களை வழங்குகிறது.
Robot Framework:: இது ஒரு பொதுவான திறமூல தானியங்கியானபரிசோதனை கட்டமைப்பாகும், இது கைபேசிபயன்பாடுகள் உட்பட பல்வேறு தளங்களில் பரிசோதனையை ஆதரிக்கிறது. இது ஒரு திறவுகோள்போன்ற முக்கியச் சொல்லால் இயக்கப்படுகின்ற அனுகுமுறையைப் பயன்படுத்துகிறது உரை அடிப்படையிலான அட்டவணை பரிசோதனை வழக்கு வடிவங்களை ஆதரிக்கிறது, இது மிகவும் படிக்கக்கூடியதாகவும் பராமரிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. இது பல்வேறு நூலகங்கள் மூலம் விரிவாக்கத்தை வழங்குகிறது, இது பல்வேறு பரிசோதனைத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கிறது.
Calabash: Calabash என்பது ஆண்ட்ராய்டு, iOS ஆகிய இயங்குதளங்களை ஆதரிக்கின்ற கைபேசி பயன்பாட்டு பரிசோதனைக்கான திறமூல கட்டமைப்பாகும். இது Cucumber என்பதைப் பயன்படுத்தி பரிசோதனைகளை எழுத அனுமதிக்கிறது. இது UI பரிசோதனை, தானியங்கி பயனர் தொடர்புகள் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
Selendroid: இது ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை பரிசோதிப்பதற்கான ஒரு திறமூல கட்டமைப்பாகும். இது ஆண்ட்ராய்டின் native , hybrid பயன்பாடுகளை தானியங்குபடுத்துகிறது, பல ஆண்ட்ராய்டு பதிப்புகள், சாதனங்களை ஆதரிக்கிறது. Selendroid ஆனது UI பரிசோதனை, பல பயன்பாடுகளுடனான தொடர்பு , TestNG, JUnit போன்ற பிரபலமான பரிசோதனை கட்டமைப்புகளுடன் இணக்கமாக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
இந்த திறமூலபரிசோதனைக் கருவிகள் சக்திவாய்ந்த அம்சங்கள், நெகிழ்வுத்தன்மை நிறுவன கைபேசி பயன்பாடுகளைபரிசோதிப்பதற்கான குறைந்தசெலவுடன்-அதிகசெயல்திறனை வழங்குகின்றன. இவற்றுள்நம்முடைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானவற்றைக் கண்டறிந்து, பயன்பாட்டுச் பரிசோதனைச் செயல்முறையை மேம்படுத்த இந்தக் கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்திடுக.
வெளியீடும் வெளியீட்டிற்கு பிந்தைய செயல்களும் கைபேசி பயன்பாட்டின் மேம்பாட்டு பரிசோதனைக் கட்டங்களுக்குப் பிறகு, நிறுவன கைபேசி பயன்பாட்டைத் தொடங்கி, பயனர்களுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டிய நேரம் இது. பயன்பாட்டின் வெளியீட்டுச் செயல்பாட்டின் போது முக்கிய படிமுறைகள் , பரிசீலனைகள் வெளியீட்டிற்குப் பிந்தைய செயல்பாடுகளின் மூலம் இந்தப் பகுதி வழிகாட்டும்.
App Storeசமர்ப்பித்தில்: நாம் உருவாக்குகின்ற கைபேசி பயன்பாடானது iOS ஐ இலக்காகக் கொண்டிருந்தால், Apple இன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயன்பாட்டை App Store இல் சமர்ப்பித்திடுக. சரியான பயன்பாட்டின் உருவப்பொத்தான்கள், திரைபடபிடிப்புகள், விளக்கங்கள் , தனியுரிமைக் கொள்கைகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும்நம்முடைய பயன்பாடு பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்க. பொருந்தக்கூடிய தன்மையை உறுதிப்படுத்திகொள்க சாத்தியமான நிராகரிப்புகளைத் தவிர்த்திடுக பல்வேறு சாதனங்கள் , iOS பதிப்புகளில் பயன்பாட்டை முழுமையாகபரிசோதித்திடுக.
Play Store சமர்ப்பித்தல்: Android எனில், கைபேசிபயன்பாட்டை Google Play Store இல் சமர்ப்பித்திடுக. கவர்ச்சிகரமான பயன்பாட்டு விளக்கங்கள், திரைபடபிடிப்புகள் , விரிவான தனியுரிமைக் கொள்கையை உருவாக்குதல் போன்ற Google ஆல் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிடுக. சிறந்த செயல்திறன் , இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த, வெவ்வேறு Android சாதனங்கள் , அவற்றின்பதிப்புகளில் பயன்பாட்டைபரிசோதித்திடுக.
வெளியீட்டிற்குப் பிந்தைய பிழைத் திருத்தங்கள்: பயன்பாடு தொடங்கப்பட்ட பிறகு பயனர் கருத்து , பிழை அறிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்திடுக. நேர்மறையான பயனர் அனுபவத்தைத் தக்கவைக்க, முக்கியமான சிக்கல்களை உடனடியாகத் தீர்வுசெய்திடுக. பயனர் செயல்பாட்டின் தீவிரம் , தாக்கத்தின் அடிப்படையில் பிழை திருத்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடுக. பிழைகளைத் தீர்ப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பயனர் கருத்துகளின் அடிப்படையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அவ்வப்போது புதுப்பிப்புகளை வெளியிட்டிடுக.
பயனர் ஈடுபாடும் பகுப்பாய்வும்: Google Analytics, Firebase Analytics அல்லது Flury போன்ற பகுப்பாய்வுக் கருவிகளைச் செயல்படுத்தி, பயனர் நடத்தை, ஈடுபாடு , பயன்பாட்டின் செயல்திறன் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைச் சேகரித்திடுக. பயன்பாட்டு முறைகள், பிரபலமான அம்சங்கள் , மேம்பாட்டிற்கான பகுதிகளை அடையாளம் காண பயனர் தரவை பகுப்பாய்வு செய்திடுக. பயன்பாட்டை மேம்படுத்தவும், பயனர் ஈடுபாட்டை அதிகரிக்கவும் , எதிர்கால புதுப்பிப்புகளுக்கு வழிகாட்டவும் இந்தத் தகவலைப் பயன்படுத்திகொள்க.
பயனர் ஆதரவும் கருத்துகளும்: பயன்பாட்டில் உள்ள அரட்டை ஆதரவு, மின்னஞ்சல் அல்லது தனிப்பட்ட ஆதரவு இணையதளம் போன்ற பயனர் ஆதரவு , கருத்துகளுக்கான களங்களை உருவாக்கிடுக. பயனர் விசாரணைகள், சரிசெய்தல் கோரிக்கைகள் அல்லது வசதியின் பரிந்துரைகளுக்கு உடனடியாகப் பதிலளித்திடுக. பயனர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், விசுவாசமான பயனர் தளத்தை உருவாக்கிடுக அவர்களுடன் தீவிரமாக கலந்துரையாடிடுக.
தொடர்ச்சியான முன்னேற்றம்: நிறுவன கைபேசிபயன்பாடுகள் என்பது வழக்கமான புதுப்பிப்புகள் , மேம்பாடுகள் தேவைப்படும் இயக்கநேரக் கருவிகள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடையாளம் காண பயனர் கருத்து, சந்தைப் போக்குகள் , வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கண்காணித்திடுக. பயன்பாட்டைப் பொருத்தமானதாகவும் போட்டித்தன்மையுடனும் வைத்திருக்க, புதியவசதிகளின் புதுப்பிப்புகள், பாதுகாப்பு மேம்பாடுகள் , செயல்திறன் மேம்படுத்தல்களைத் திட்டமிட்டு முன்னுரிமை கொடுத்திடுக.
பாதுகாப்பும் இணக்கதன்மையும்: நிறுவன பயன்பாடுகள் பெரும்பாலும் முக்கியமான தரவைக் கையாளுகின்றன, எனவே தரவு பாதுகாப்பும் இணக்கத்திற்கும் முன்னுரிமை கொடுத்திடுக. நம்முடைய பயன்பாட்டின் நிலையைத் தவறாமல் மதிப்பிடுக, ஊடுருவல் பரிசோதனையை செய்திடுக, ஏதேனும் பாதிப்புகளை இருந்தால் அவற்றினை உடனடியாக சரிசெய்திடுக
. பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) அல்லது உடல்நலக் காப்பீட்டு பெயர்வுத்திறன் பொறுப்புக்கூறல் சட்டம் (HIPAA) போன்ற தொழில்துறை விதிமுறைகளைப் பற்றியவிவரங்களை தொடர்ந்து அறிந்துகொள்க, மேலும் பயன்பாடு தேவையான இணக்கத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்திடுக.
சந்தைப்படுத்தலின் ஊக்குவிப்பு: நிறுவன பயன்பாட்டை மேம்படுத்த சந்தைபடுத்துதல் உத்தியை உருவாக்கிடுக. இலக்கு பார்வையாளர்களை அடைய, சமூக ஊடகங்கள், இலக்கு விளம்பரம் , தொழில்துறை நிகழ்வுகள் போன்ற பல்வேறு பலகங்களைப் பயன்படுத்திகொள்க. தனிப்பட்ட வசதிகள், நன்மைகள் , சாத்தியமான பயனர்களை ஈர்க்கின்ற நிகழ்வுகளைப் பயன்படுத்திடுக. அவர்களின் சந்தைபடுத்துதலிற்கானங் வளங்களைப் பயன்படுத்திடுக, வரம்பை விரிவுபடுத்தி பயன்பாட்டை உருவாக்குகின்ற நிறுவனத்துடன் ஒத்துழைப்புசெய்திடுக.
நிறுவன கைபேசிபயன்பாட்டைத் தொடங்குவது துவக்கநிலையாகும். ஒரு வெற்றிகரமான , நல்ல வரவேற்பைப் பெற்ற கைபேசிபயன்பாட்டைப் பராமரிக்க, பிழைத்திருத்தங்கள், பயனர் ஆதரவு , வழக்கமான புதுப்பிப்புகள் உள்ளிட்ட வெளியீட்டிற்குப் பிந்தைய தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவை கண்டிப்பாக அவசியமாகும். தொடர்ச்சியான மேம்பாட்டிற்காக பாடுபடுக, பயனர் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுத்திடுக நீண்டகால வெற்றியை உறுதி செய்வதற்காக வளர்ந்து வரும் பாதுகாப்பு இணக்கத் தேவைகளுடன் புதுப்பித்த நிலையில் இருந்திடுக.

 

 

 

 

%d bloggers like this: