உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்

உபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating system) வேறுபாடின்றி அனைத்திலும் மெய்நிகராக(virtually) இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நாவில் எச்சில் ஊறும் வண்ணம் விளையாட்டு அனுபவங்கள் வழங்குவதில் உபுண்டு எந்த வகையிலும் விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸிற்கு குறைந்தது அல்ல. சில முற்றிலும் சுவாரசியமான விளையாட்டுகளும் உபுண்டுவில் இயங்கக்கூடியவையாக உள்ளன. அவற்றில் சில புகழ்வாய்ந்த விளையாட்டுகளைப் பார்ப்போம்.

எந்த வகை விளையாட்டாக இருந்தாலும் அது உற்சாகமூட்டுவதாகவும் உத்வேகமூட்டுவதாகவும்(அட்ரினலின் சுரப்பி தன்னை மறந்து அளவுக்கதிகமாக சுரக்கும் அளவிற்கு) எப்போதும் இருந்து வருகின்றன. கணினி விளையாட்டுகள் உருவான காலகட்டத்திலிருந்தே உலகளவில் பல லட்சம் மக்களின் உள்ளங்களை அவை கொள்ளை கொண்டுள்ளன. மாரியோ(Mario) மற்றும் டேவ்(Dave) போன்ற விளையாட்டுகளை மக்கள் விரும்பத்துவங்கியது தான், முற்றிலும் சொகுசான வரைகலை(Graphics) நிறைந்த இன்றய விளையாட்டுகள் உருவாவதற்கு வழி வகுத்தன. கணினி விளையாட்டில்

பல்வேறு வகைகள் உள்ளன:

  • சண்டை போட்டிகள்

  • வேகப் பந்தயங்கள்

  • கேளிக்கை விளையாட்டுகள்

  • மர்ம விளையாட்டுகள்

  • சிறு புதிர்கள்

  • விடுகதைகள்

    மேல் குறிப்பிட்ட பட்டியல் அத்துடன் நிறைவுபெறவில்லை, நீண்டுகொண்டே போகும். மலையளவு வரைகலை (graphics) நிறைந்த விளையாட்டுகள் கூட உள்ளன.

நீங்களும் இவ்வகை விளையாட்டுகளின் விரும்பி என்றால், இந்த சொற்ப காரணத்திற்காக உபுண்டுவிலிருந்து விண்டோஸுக்கு நீங்கள் தாவிச் செல்ல வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இன்று பல வரைகலை(graphics) மழையில் மூழ்கிய விளையாட்டுகள் உபுண்டுவில் இயங்குவதாகவும் உள்ளன. அவற்றில் பொறுக்கி எடுக்கப்பட்ட சிறந்தவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

 

அம்னீசியா: தெ டார்க் டெசெண்ட் (Amnesia: The Dark Descent)

இது மர்மத்தின் சாயல் கொண்டது. இதில் விளையாடுபவர் டேனியல் என்ற சிறுவனாக பாவிக்கப்படுவார். இந்த விளையாட்டின்படி அந்த சிறுவனுக்கு தன் பெயரை தவிர வேறு எதுவும் தெரியாது. அவன் தன் வாழ்வின் உண்மைகளை எவ்வாறு தெரிந்து கொள்கிறான் என்பதே இந்த விளையாட்டின் போக்காக அமைந்துள்ளது. அந்த உண்மைகளை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறு தடயங்கள் மூலமாக கண்டுபிடிக்க வேண்டும். அதுபோலவே சிறப்பாக உள்ளது அதன் விளையாட்டு முறையும். இதை இலவசமாக பயன்படுத்த முடியாது என்றாலும், சோதனைப் பதிப்பை(demo version) பயன்படுத்தலாம்.

பதிவிறக்கம் செய்ய: www.amnesiagame.com/#demo

ட்ரெமுலஸ் (Tremulous)

 

இது திட்டமிடும் விளையாட்டு. எதிரிகள் தாக்குதலில் உயிர் பிழைப்பதும், தம் தாக்கு களத்தை பாதுகாப்பதுமே இதன் நோக்கம் ஆகும். தன் ஆற்றல்களை வீரர் இழந்து நிற்கும் நிலையில் அதனை உயிர்ப்பிக்கும் விதைகள் இதில் முக்கிய பங்கு வகிப்பவை. வரைகலை(graphics) அருமையாக இருந்தாலும் இதன் ஒலியமைப்பு சிறந்ததாக இல்லை.

பதிவிறக்கம் செய்ய: tremulous.net/files/

ஸ்லாம் ஸாக்கர்(Slam Soccer)

இது கால்பந்து அரங்கில் விளையாடும் கேளிக்கை விளையாட்டு. இதில் எதிரணியினரை உடலால் தாக்க முடியும். வரைகலை(graphics) குறைந்த அளவே இடம் பெற்றாலும் இது சுவாரசியம் நிறைந்தது.

பதிவிறக்கம் செய்ய: www.bolzplatz2006.de/en/downloads.php

அர்பன் டெரர்(Urban Terror)

உத்திகொண்டு ஆடும் ஆட்டம் இது. இதில் வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை தொடுத்து மரணம் உண்டாக்கும் தீவிரவாதிகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்றார் போல் இதன் வரைகலையும்(graphics) ஒலியமைப்பும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இது எதிரிகளை சுட்டு வீழ்த்தும் விளையாட்டு.

 பதிவிறக்கம் செய்ய: www.urbanterror.info/support/110-/

சாவேஜ் 2(Savage 2)

இது பல பாத்திரங்களை உள்ளடக்கிய விளையாட்டு. விளையாடுபவர் பல்வேறு பாத்திரங்களில் அதற்கேற்ற செயல்கள் செய்து இறுதியாய் வெற்றியை சுவைக்க வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய: www.savage2.com/en/download.php

எக்ஸ் மோடோ(X Moto)

இது இருசக்கர வாகனப் பந்தயம். வரைகலை(graphics) திறம்பட இல்லாவிட்டாலும், இது பசுமரத்தாணி போல உங்கள் உள்ளத்தில் பதியக் கூடியது.

பதிவிறக்கம் செய்ய: xmoto.tuxfamily.org/

 

ப்லைட் கியர்(Flight Gear)

இது திறமைக்கு சோதனை. விளையாடுபவர் தம் திறமைகளை பயன்படுத்தி விமானம் தரை இறங்கவும், பறந்து செல்லவும் வழிகாட்ட வேண்டும். இதன் அதினவீன வரைகலை(graphics) மற்றும் முப்பரிமாண(3D) அமைப்பு நோக்கத்தக்கது.

பதிவிறக்கம் செய்ய: www.flightgear.org/download/main-program/#linux

வார்சோன் 2100(Warzone 2100)

இது உத்தி மற்றும் திட்டமிடுதலின் கலவை நிறைந்தது. விளையாட ஆர்வத்தைத் தூண்டும். வரைகலை(graphics) சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தாலும் இது மிகக் கடினமான விளையாட்டாகும்.

பதிவிறக்கம் செய்ய: wz2100.net/download

மெகாக்லெஸ்ட்(Megaglest)

இது இயல்பு வாழ்க்கை வியூகம் வகுக்கும் விளையாட்டு. விளையாடுவோர் பல பாத்திரங்களில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய: sourceforge.net/projects/megaglest/

நெக்ஸுய்ஸ்(Nexuiz)

இது உறையவைக்கும் காட்சி அமைப்புகள்(visuals) கொண்ட முப்பரிமாண(3D) திறன் பெற்ற துப்பாக்கி சுடும் விளையாட்டு. இது தொடற்சியான உயிர் காக்கும் போராட்டத்தை உள்ளடக்கியது. எதிரில் வரும் பகைவர்களின் ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி அழிக்க வேண்டும்

பதிவிறக்கம் செய்ய: www.alientrap.org/games/nexuiz

ஜொபின் பிராஞ்சல் ஆன்றனி

மின்னஞ்சல்: jophinep@gmail.com

வலைத்தளம்: jophinepranjal.blogspot.in

%d bloggers like this: