Command Line அற்புதங்கள்

எவ்வளவு நேரம் உங்களது கணிப்பொறி செயல்பட்டு கொண்டிருகிறது என்பதை அறிய:

$ uptime

uptime என்பது ஓர் சுலபமான மற்றும் சிறிய கட்டளை ஆகும். இது பின்வரும் தகவல்களை நமக்கு தரும்.

 

    • தற்போதைய நேரம்
    • எவ்வளவு நேரம் கணிப்பொறி ஓடிக்கொண்டிருக்கிறது.
    • தற்போது எத்தனை user login செய்து உள்ளனர்
    • system load avg கடைசி 1, 5, or 15 நிமிடங்களில்

 

[suresh@mercury-]$uptime

13:12:56 up 1:54 2 user load average 0.65 1.18 1.22

 

இதே தகவல்கள் w மற்றும் top கட்டளைகளின் மூலமும் காணலாம்.

 

சுலபமான encryption கட்டளை:

gpg என்பது ஒரு file –ஐ மற்றவர்கள் சாதாரணமாக பார்க்க இயலாதவாறு encrypt செய்யப் பயன்படும் ஒரு கட்டளை ஆகும்.

இதன் மூலம் நாம் ஓர் file –க்கு password போட்டு வைத்துக் கொள்ள முடியும்.

$ gpg -c filename

குறிப்பு :- ‘-c’ என்பது symmetric cipher –ஐ குறிக்கிறது. நீங்கள் உங்களது password –ஐ மறந்துவிட்டால் அந்த data-வை recover செய்ய இயலாது. ஏனெனில் இது very strong encryption ஆகும்.

 

உதாரணம்:

To encrypt:-

[suresh@mercury Desktop]$ gpg -c test.rb
Enter passphrase:
Repeat passphrase

 

To decrypt:-

நாம் ஒரு file –encrypt செய்யும் போது அது .gpg எனும் ஓர் enrypted file –ஐ உருவாக்கும். இந்த file –decrypt செய்யும் போது நமக்கு பழைய மூல file கிடைத்துவிடும்.

$gpg filename.gpg எனும் கட்டளை மூலம் நாம் நமது encrypted file –decrypt செய்து கொள்ள முடியும்.

 

Ex:

 

[suresh@mercury Desktop]$ gpg test.rb.gpg
gpg: CAST5 encrypted data
Enter passphrase: 

aliases செய்யப்பட்ட கட்டளையிலிருந்து தப்பிக்க:

Aliases என்பது ஒரு கட்டளையின் வேலையை வேறு ஒரு பெயரில் செய்வது ஆகும்.

 

ls என்பது list செய்யபயன்படும் கட்டளை ஆகும். இதில ‘-l’ என்ற option –ஐ சேர்க்கும் போது அது Long list formate –ல் காண்பிக்கும்.

உதாரணமாக ‘ls’ command –‘pwd என்று aliase செய்து வைத்திருந்தால் நாம் ‘ls’ என்று கட்டளை இட்டாலும் அது ‘pwd’ –க்கான o/p –யே காட்டும். இதை நாம் தவிர்க்க ‘/ls’ என்று கட்டளை இட்டால் ‘/’ ஆனது ‘ls’ –ன் aliase –ஐ தவிர்த்து விட்டு சாதாரண ‘ls’ –ன் o/p –யே தரும்.

Ex:

arul@shrinivasan:~$ alias ls=”pwd”

arul@shrinivasan:~$ ls

/home/arul

arul@shrinivasan:~$ \ls

Desktop Downloads Music Public Videos

Documents examples.desktop Pictures Templates

தினம் ஒரு கட்டளை

$ ls /usr/bin/shuf -n 3

 

இந்த கட்டளை /usr/bin –ல் உள்ள கட்டளைகளில் உள்ள ஏதேனும் 3 கட்டளைகளை காட்டும். இந்த கட்டளையை உங்களது .bashrc file-ல் சேர்த்து விட்டால் நீங்கள் எப்போதெல்லாம் terminal –ஐ திறக்கிறீர்களோ அப்போதெல்லாம் வெவ்வேறு 3 கட்டளைகளை காண்பிக்கும். அதன் மூலம் தினமும் நாம் பலவிதமான கட்டளைகள் இருப்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

 

.சுரேஷ்

%d bloggers like this: