8 பேரின்‌ நூல்கள்‌ நாட்டுடைமை

8 பேரின்‌ நூல்கள்‌ நாட்டுடைமை

தஞ்சை பிரகாஷ்‌, நெல்லை கண்ணன்‌ உட்பட தமிழறிஞர்‌கள்‌ 4 பேரின்‌ நூல்களை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்‌கியுள்ளது.

தமிழ்‌ மொழி வளர்ச்சிக்‌கும்‌, சமூக முன்னேற்றத்துக்‌கும்‌ பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்கள்‌ 5 பேர்‌; வாழும்‌ தமிழறிஞர்கள்‌ 3 பேர் என, 5 பேரின்‌ நூல்கள்‌, இந்தாண்டு நாட்டுடைமை ஆக்‌கப்பட்டு உள்ளன. அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின்‌ வாரிசுகளுக்கு, 15 லட்சம்‌ ரூபாய்‌; கந்தர்வன்‌, சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ்‌ ஆகியோரின்‌ வாரிசுகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய்‌ என, மொத்தம்‌, 55 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட உள்ளது. வாழும்‌ எழுத்தாளர்‌களான நெல்லை செ.திவான்‌, விடுதலை ராசேந்திரன்‌, நா.மம்‌மது ஆகியோருக்கு தலா, 15 லட்சம்‌ ரூபாய்‌ என, 45 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட உள்ளது. இதன்படி, தமிழக அரசு இந்த ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்‌பட்ட நூல்களுக்கான பரிவுத்‌ தொகையாக, 1 கோடி ரூபாயை வழங்க உள்ளது.

 

இந்தியாவிலேயே, தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, மனிதர் அனைவருக்கும் வழங்கும் ஒரே அரசாக தமிழக அரசு, பல்லாண்டுகளாக இந்த அரும் பணியை செய்து வருவதை வாழ்த்தி வரவேற்போம்.

 

%d bloggers like this: