செயற்கை நுண்ணறிவும் மனித உழைப்பின் எதிர்காலமும் – இணையவழி உரையாடல் –

2023ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருமே பேசத்தொடங்கியுள்ள ஆண்டாக அமைந்துள்ளது.

செயற்கை இயற்றறிவு பெற்ற ChatGPT இன் வருகை பொது மக்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவை என்றுமில்லாத அளவு புகழ்பெறச்செய்துள்ளது.

பல்லாண்டுகளாக வேகமாக வளர்ந்து வந்த செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் இன்று நாம் தெளிவாகவே உணரக்கூடிய சாதனைகளை படைக்கத்தொடங்கிவிட்டன.

கணினி இன்று கவிதை எழுதுவதும் இசையமைப்பதும் மனிதருக்கு நிகராக சிந்தித்துச் செயலாற்றுவதும் வியப்பை அளிக்கிறது.

இச் சாதனைகளைப் பார்த்து அனைவரும் வியந்துநிற்கும் அதேவேளை, இதனால் மனிதர்களுக்கு – குறிப்பாக தொழிலாளர்களுக்கு – பாதகமான விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ எனும் ஐயமும் எழுகின்றது.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், செயற்கை இயற்றறிவு ஆகியவை பற்றிய எளிய அறிமுகத்தை பெற்றுக்கொள்ளவும், இன்று அந் நுட்பங்களின் வளர்ச்சி எவ்வாறுள்ளது என புரிந்துகொள்ளவும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியின் நன்மைகள், சவால்களைப் பற்றி கலந்துரையாடவும் அனைவரும் வாருங்கள்..

மார்ச் 11ம் திகதி சனிக்கிழமை மாலை 7:30 IST மணிக்கு…

 

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)
இணையவழி உரையாடல் எண்: 123

காலம்:
2023-03-11சனிக்கிழமை  பி.ப 7.30-8.30(இலங்கைநேரம்)

தலைப்பு:
செயற்கை நுண்ணறிவும் மனித உழைப்பின் எதிர்காலமும்

உரையாளர்:
மு மயூரன், தமிழ்க்கணிமையாளர், உறுப்பினர், தமிழறிதம்

ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
Zoom | நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்: 2020

வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

 

%d bloggers like this: