டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்

 

நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர், நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ updateசெய்வதற்கு (sudo apt-get update), அதேபோல upgrade செய்வதற்கு (sudo apt-get upgrade).
இப்போது நமது home அடைவினுள் .bash_aliases என்ற மறைவான ஒரு கோப்பினை உருவாக்குவோம்.

$ gedit ~/.bash_aliases

இப்போது ஒரு மறுபெயரினை உருவாக்கலாம். உதாரணத்திற்கு நமது repositoryகளை update செய்வதற்கான கட்டளைக்கு ஒரு மறுபெயரினை உருவாக்க.

alias update=’sudo apt-get update’

இப்போது update எனும் மறுபெயரானது(alias) ‘sudo apt-get update’ எனும் கட்டளையை இயக்கும். இனி இதனை நாம் சேமித்து மூடிவிடலாம். இந்த மறுபெயரினை சோதிக்க திறந்து வைத்திருக்கும் டெர்மினலை மூடி மறுபடியும் திறக்கவும். இப்போது அதனை சோதிக்கலாம்.

$ update

‘update’ என்று நாம் கொடுத்த கட்டளையானது ‘sudo apt-get update’கட்டளையை இயக்கும். மேலும் சில மறுபெயர்களையும் உருவாக்கலாம்.

alias upgrade=’sudo apt-get upgrade’
alias inst=’sudo apt-get install’
alias autorm=’sudo apt-get autoremove’

ஒவ்வோரு முறை புது மறுபெயர்களை சேர்க்கும் போதும் டெர்மினலை மூடி பிறகு திறக்கவும். அப்போது தான் அந்த மறுபெயர்கள்
செயல்படும்.

 

———
என் பெயர் மணிமாறன். காஞ்சி லினக்ஸ் பயனர் குழுமத்தில் ஒரு அங்கத்தினன். இளங்கலை கணினி அறிவியலை பச்சையப்பன் கல்லூரியில் முடித்துவிட்டு சென்னையில் சேருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். குனு/லினக்ஸில் ஆர்வம்
கொண்டவன். குனு/லினக்ஸுடன் விளையாடுவதுதான் இப்போதைக்கு
பொழுதுபோக்கு, வேலை எல்லாம்.

 

mani-g.blogspot.in/

 

 

%d bloggers like this: