உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல்

apt-get என்பது உபுண்டுவில் மென்பொருள் பொதிகளை(packages) தரவிறக்கி நமது கணினியில் நிறுவுவதற்கும், உபுண்டுவை இற்றைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் கட்டளையாகும். apt-fast என்பது apt-get-ஐப் போலவே செயல்படும் ஒரு shell script. இணையாகவும்(parallel), ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி தரவிறக்குவதாலும் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்கலாம். இந்த முறையினை axel போன்ற தரவிறக்கிகள் உபயோகப்படுத்துகின்றன. இந்த நிரல் axel அல்லது aria2c போன்ற தரவிறக்கிகளை பயன்படுத்தி அதிகப்படியான வேகத்தை சாதகமாக்குகிறது.

 

இதனை ஒருமுறை நமது கணினியில் நிறுவி விட்டால் இதனை apt-getஐ உபயோகிப்பது போலவே பயன்படுத்தலாம். முதலில் ஒரு மென்பொருளினை (software package) நிறுவும் முன், உபுண்டுவின் மென்பொருள் தரவு தளத்தினை இற்றைப்படுத்த வேண்டும் (apt-fast update). இப்போது ஒரு மென்பொருளினை நிறுவுவதற்கு “apt-fast install packagenameஎன்று தர வேண்டும். இதில் package name என்பது நமக்கு தேவையான மென்பொருள் பொதி. இப்போது நம்முடைய மென்பொருளானது வழக்கத்தை விட அதி வேகமாக தரவிறங்குவதைப் பார்க்கலாம். உபுண்டுவினை மேம்படுத்தவும் இதே வழிமுறையினை பின்பற்றவும். அதற்கு apt-fast dist-upgrade அல்லது apt-fast upgrade என்று தரவும்.

 

apt-fast- உபுண்டுவில் நிறுவுவதற்கு:

 

apt-fast-ன் அதிகாரப்பூர்வமான PPA பொதியினை Ubuntu 12.04, 11.10, 11,04 மற்றும் 10.04ல் நிறுவலாம். உங்களுடைய முனையத்தைத் திறந்து(Ctrl+Alt+T), அதில் கீழ் உள்ள கட்டளைகளைத் தரவும்.

 

sudo add-apt-repository ppa:apt-fast/stable 
sudo apt-get update 
sudo apt-get install apt-fast axel

அதனை நிறுவிய பின்பு, axel அல்லது aria2cயினை நம்முடைய விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக axel-ஐத் தேர்ந்தெடுக்க

configuration file-ஐத் திறந்து கொள்ளவும்.

 

sudo gedit /etc/apt-fast.conf

 

அதில் “_DOWNLOADER“ வரியின் முன்னால் உள்ள “#”-ஐ நீக்கிவிட்டு சேமிக்கவும்.

 

# axel:
_DOWNLOADER=’cat /tmp/apt-fast.list | xargs -l1 axel -n ${_MAXNUM} -a’ # axel

 

கீழ் உள்ள கட்டளையின் மூலம் இற்றைப்படுத்திய பின், நாம் apt-fast-ஐ apt-get போலவே உபயோகிக்கலாம்.

sudo apt-fast update

 

மணிமாறன் : manimaran990@gmail.com

 

ஆங்கில மூலம்:

ubuntuguide.net/install-apt-fast-download-accelerator-in-ubuntu-12-0411-1010-04

 

 

%d bloggers like this: