பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler)

இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட வேர்ட் ஆவணங்களை பிரிப்பதோ அல்லது சேர்ப்பதோ எளிது. அது போல் பிடிஎஃப் கோப்புகளை எப்படி இணைப்பது/ பிரிப்பது? லினக்ஸ் இயக்கு தளத்தில் பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவியைக் கொண்டு சுலபமாக செய்யலாம்.பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவி பைபிடிஎஃப்(pyPdf) எனும் கருவிப்பொதியின் முன் முகப்பு (GUI Interface) . பைபிடிஎஃப் என்பது பைத்தான் நிரலகம்(library) கொண்டு உருவாக்கப்பட்ட பிடிஎஃப் கருவி. இக்கருவியைக் கொண்டு பிடிஎஃப் கோப்புகளின் தகவல்களை அறியலாம், பிடிஎஃப் கோப்புகளை இணைக்கலாம், பிரிக்கலாம், தேவையான பக்கங்களை வெட்டி நீக்கலாம், கோப்புகளை மறையாக்கம் (encryption) அல்லது மறைவிலக்கம் (decryption) செய்யலாம். இவற்றிலிருந்து இணைப்பதும் பிரிப்பதுமான செயல்களை செய்வதற்கு மட்டும் பிடிஎஃப் – ஷஃப்லெர் உருவாக்கப்ப்டடது.

டெபியன் டிச்ட்ரொவை(debian distro) சார்ந்த லினக்ஸ் இயக்கு தளத்தில் கருவியை நிறுவ

sudo apt-get install pdfshuffler

எனும் கட்டளையைக் கொண்டு நிறுவலாம்.

உபுண்டு(ubuntu) பயன்படுத்துபவர்கள் சாப்ட்வேர் சென்டர் மூலமாகவும் அல்லது

sourceforge.net/projects/pdfshuffler/

இந்த இணையதளத்திலிருந்து எடுத்து பொறுத்திக்கொள்ளாம்.

உபயோகப்படுத்தும் முறை:

  1. பிடிஎஃப் – ஷஃப்லெரை திறக்கவும்.
  2. “ இம்போர்ட் பிடிஎஃப்” எனும் பொத்தான்னை சொடுக்கவும். அதன் பின் உரையாடல் சாளரம் திறக்கப்படும், அதிலிருந்து தேவையான பிடிஎஃப் கோப்புகளை தேர்ந்தெடுத்துக்கொள்க.
  3. தேவையான கோப்புகள் திறக்கப்பட்டபின், தங்களின் தேவைக்கேற்ப பக்கங்களை இழுத்து வரிசைப் படுத்திக்கொள்ளலாம்.
  4. “டெலிட் பேஜஸ்” எனும் பொத்தான்னைக்கொண்டு தேவையற்ற பக்கங்களை நீக்கலாம்.
  5. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இக்கருவியைக் கொண்டு திறந்து ஒரே கோப்பாக சேர்க்கலாம்.

 

 

தேவையான மாற்றங்கள் செய்த பின் “எக்ஸ்போர்ட் பிடிஎஃப்” எனும் பொத்தானை சொடுக்கவும், மாற்றம் செய்த பிடிஎஃப் கோப்பு சேமிக்கப்படும். வேர்ட் ஆவணங்களை போல பிடிஃப் ஆவணங்களையும் இப்போது சுலபமாக இணைக்கலாம்/ பிரிக்கலாம்.

 

மூலம் ; maketecheasier.com/split-merge-pdf-files-with-pdf-shuffler/2011/01/18

– அன்னபூரணி

%d bloggers like this: