இப்போ எல்லாம், சாப்ட்வேர் கம்பெனி பி பி ஓ (B P O) எல்லாத்திலேயும் பிராசஸ் என்கிற வார்த்தையை அதிகமா பயன் படுத்தராங்க. இல்லையா? நான் இந்த பிராசஸ்லே இருக்கேன் என்றும். பிராசசை சரியா பின் படுத்தினா நாம மூளையை கசக்காம தப்பு டண்டா பண்ணாம காரியம் பண்ணலாம்.
சென்னையிலே இருக்கிற கம்பெனிக்கு டெல்லியில் ஒரு மூலையிலே உட்கார்ந்து பசங்க கஸ்டமருக்கு உதவி பண்ணுவாங்க.
பெங்களூர் பாம்பே பி பி ஓ பொண்ணுங்க மற்றும் பையங்க லண்டன் நியூயார்க் கஸ்டமர் கிட்டே பேசி வங்கிலே வாங்கின கடனை திருப்பச்சொல்லிகிட்டுருப்பாங்க.
இதுக்கெல்லாம், வங்கியைப் பற்றியும் தெரிஞ்சுக்காமல், நியூயார்க் லண்டன் போகாமலேயே எப்படி சாதிக்கிறாங்க?
எல்லாத்துக்கும் இந்த பிராசஸ்தான் துணை.
இவங்க பிராசஸ் பத்தி இன்னைக்கு பேசினா, ரொம்ப வருசங்களுக்கு முன்னாலாயே பெர்கிளி ( Berkley ) பேராசிரியர்கள் பிராசஸ்களை பயன் படுத்திருக்காங்க.
யுனிக்ஸ்லே பிராசஸ் என்றால் என்ன?
அதுக்கு முன்னாடி சில விஷயங்களைப் பாக்கலாம்.
- ஒரு ஓடக்கூடிய புரோகிறாம்.
ஒரு புரோகிறாம் எழுதி அதை சோர்ஸ் ஃபைல் என்கிறோம். அது அப்படியே ஓடாது. அதைக் கம்பைல் பண்ணி ஒரு ஃபோல்டர்லே போட்டுடரோம். கம்பைல் பண்ணாத ஃபைலை சோர்ஸ் ஃபைல் என்கிறோம். கம்பைல் பண்ணி சரியா வர ஃபைலை எக்ஸிகூட்டபிள், பைனரி என்று கூப்பிடரோம். அதுக்கு exe, com, அப்படின்னு ஃபைல் எக்டண்சன் வந்திடும்.
இந்த எக்ஸிகூட்டபிள் ஃபைலை உங்க கம்ப்யூட்டரிலே எப்படி ஓடவைக்கலாம்? பல விதமான கம்ப்யூட்டர்லே ஓடவைக்கிற விதம் வேறுபடும். பொதுவா. ஐ பி எம் பி ஸிலே கமாண்ட் பிராம்ப்ட்லே அந்த ஃபைல் பேரை எழுதி தட்டனூம். லாஜிக், டேட்டா எல்லாம் சரியா இருந்தா, ஜம்முனு ஓடும்.. ஆனா புரோகீராம் லாஜிக்கிலே கொடுத்த இன்புட்டிலே தப்பு இருந்தா திட்டும், அதில்லாமே, எர்ரரகளை துப்பு துப்புனு துப்பும்.
யுனிக்ஸ்லே ஓடக்கூடிய புரோகிராம், என்னவாகும்னு பாக்கலாம்.
ஷெல் அப்படின்னு ஒரு புரொகிராம். யுனிக்ஸ்லே இருக்கு,
இப்போதைக்கு அதைப் பத்தி அதிகமா கவலைப்பட வேண்டாம். சுருக்கமா பாக்கலாம்.
ஒரு யூசர் லாகின் பண்ணின உடனே டக்குனு வந்து நின்னிடும். நாம ஆர்டி ஓ, பாஸ்போர்ட் ஆபீஸ் மாதிரி கவர்மெண்ட் ஆபீஸ் முன்னாடி நின்னா, புரோக்கர்கள் கூப்பிடாமயே வந்து நிக்கிறாங்க. அப்புறம், ரயில்வே ஸ்டேஷன் வாசல்லே வந்த உடனே ஆட்டொ டிரைவர்கள் எப்படி டக்குனு வாராங்க. அப்படித்தான் இந்த ஷெல் புரோகிராம் புரோக்கர், ஆட்டொ டிரைவர் மாதிரி நெரய விஷயம் தெரிஞ்சது.
என்ன காரியம் பண்ணனும் இல்லை எங்கே போகணும் என்கிற விஷயத்தை சொல்லிட்டா, பிடிக்க வேணுங்கரவங்களை பிடிச்சு கொடுக்க வேண்டியதை சமயம் பாத்து கொடுத்து, தலையைச் சொரிஞ்சு காரியத்தை முடிச்சுக் கொடுத்துட்டு அடுத்த வேலை பாக்கப் போவாங்க. நமக்கு யாரையும் பாத்து கேட்டு அவதிப்பட அவசியம் இல்லே. ஆட்டொ டிரைவர் சந்து பொந்து எல்லாத்திலேயும் புகுந்து, ரோடு எப்படி யிருந்தாலும் நம்ம வீட்டிலே பத்திரமா சேத்துடுவாரு.
புரோக்கர், ஆட்டோ டிரைவர், ஷெல் புரோகிராம் எல்லாமே ஒரே இனம்தான். மக்களுக்கு அவங்க அவங்க இடத்திலே இருந்து அருமையா சேவை பண்ணி நம்மளாய் ஒருமாதிரியா பண்ணி காரியத்தையும் முடிச்சு நம்ம பர்ஸை காலி பண்ணிடுவாங்க.
இப்போ, பிராசஸ்னா என்ன என்று பாக்கலாம்.-
இப்போ ஓடக்கூடிய புரோகிராம் என்று பார்த்தோம். யுனிக்ஸ்லே ஷெல்லே சொல்லிட்டாப் போதும், அது யார் யாரையோ புடிச்சு ஓடவச்சுடும் என்றும் நமக்கு தெரியும்.
இப்போ ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டோம். கவர்மெண்ட் ஆபீஸ்லே புரோக்க்ர் இல்லாம எதுவும் ஆகாது. ஆனா புரோக்கர்கிட்டெ சொல்லிட்டா சுத்தமா காரியம் ஆயிடும் இல்லையா அப்படித்தான் யுனிக்ஸ்லேயும். exec filename போட்டுட்டா, நாம கவலைப்படவேண்டாம். அதுக்கப்பரம், கம்ப்யூட்டர் தப்பு கண்டுபிடிச்சா, ஷெல்லே பாத்துப் படிச்சு தெரிஞ்சுக்கலாம்.
மொத மொதல்ல, இந்த எக்ஸிகூட்டபிள் பைலை அப்படியே வாங்கி பயன்படுத்த யுனிக்ஸுக்கு தெரியாது.
கவர்மேண்ட் ஆபீசுலே, ஒரு அட்டையிலான ஒரு ஃபைலில் போட்டு, அதற்கு ஒரு நம்பர் எழுதி, ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்துலே விவரம் எல்லாம் எழுதி , அந்த நம்பரை நம்ம கையிலே கொடுத்திடுவாங்க. அடுத்த நாள் அதே ஆபீசுலே உங்க பேரை ச் சொல்லி ஒரு அப்பிளிகேஷன் கொடுத்தேனே என்றால், பயன் இல்லே. அவங்க தந்த ஃபைல் நம்பரைக் கொடுத்தா டக்குனு எடுத்து என்ன முன்னேற்றம் ஆயிருக்குன்னு சொல்லுவாங்க.
அப்படித்தான் யுனிக்ஸ்லேயும், ஷெல்லே சொன்னவுடன், அதுக்கு ஒரு புதிசா நம்பர் தரும். அதுக்குப்பேரு பிராசஸ் ஐ டி. அதை ஒரு ஃபைல்லே பத்திரமா எழுதிடும். அந்த ஃபைல் பேரு பிராசஸ் ஐ. டி. அப்புரமா, உங்க் புரோகிரேம் பேரை மறந்துட்டு பிராசஸ் ஐடியை பிடிச்சுக்கிட்டா, எந்த அளவு உங்க புரோகிராம் ஓடிச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.
இப்போ கூட பிராசஸ்னா என்னன்னு சொல்லல்லியே.
உங்க எக்ஸிகூட்டபிள் கோட், டிஸ்குலே ஒரு போல்டருக்குள்ளே உக்காந்திருந்தா அது ஒரு கோடு அவ்வளவுதான். அதே கோட் ஷெல்லே போட்டு, அதுக்கு ஒரு நம்பர் கொடுத்து, அதை பிராசஸ் டேபிள்ளெ எழுதிட்டா, அதுக்குப் பேரு பிராசஸ்.
டிஸ்குலே உள்ள கோட் ஓடாது, அதே கோட், பிராசஸா மாறினப்புரம், ஓட்டம் ஓடிடும்.
(A) ஆமா, இப்படி ஒரு எக்ஸிகூட்டபிள் கோட் பிராசஸா மாறி ஓடுரமாதிரி நம்மை சுத்தி வேற விஷய்ஙக்ள் உண்டா?
(B) பிராசஸ் இது ஒண்ணுதானா, வேற பிராசஸ்கள் உண்டா?
இதை இரண்டையும் அடுத்த மாதம் பாக்கலாமா?
—————————————————————–
நடராஜன் இவர் ஒரு மின்னணுவியல் அறிஞர். அரசு, தனியார், கல்வி துறைகளில் பெரும் அனுபவம் கொண்டவர். Scientist, Systems Engineer, Development engineer, Manager, General Manager, CEO, Consultant போன்ற பல பதவிகளை வகித்தவர். தனது வலைபதிவுகள் மூலம் தன் கல்வி பணிகளை தொடர்கிறார்.
மின்னஞ்சல் : natarajan.naga@gmail.com
வலை பதிவு : science-of-good-living.blogspot.com