ஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள்

ஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள்

 

நம்மில் பெரும்பாலானோர் நினைவுபடங்களையும் ஒலிஒளிபடங்களையும் திருத்தம் செய்திடவும் மேம்படுத்திடவும் அதன்பின் அதனை பல்லூடகத்தின் மூலம் பார்வையிடவும் விரும்பும் நிலையில் அதனை செயற்படுத்திடும் நிறுவனத்திடம் அல்லது கடைகளிலும் அல்லது அதற்கான வல்லுனரிடமும் கொடுத்து சரிசெய்து பெற்று திரையிட்டு பார்த்து மகிழ்ந்திடுவோம். துரதிஷ்டவசமாக அதே செயல்களை செய்கின்ற ffDiaporama எனும் திறமூல மென்பொருள் இருப்பது நம்மில் பெரும்பாலோனுருக்கும் தெரியாத செய்தியாகும். இதனை இயக்கி செயல்படுத்திடுவதற்காக ஒலிஒளிபடங்களை கையாளும் திறன்கொண்ட வல்லுனர் போன்ற நிபுனத்துவ அறிவோ திறமையோ தேவையில்லை .அதற்கு பதிலாக பாமரனும் மிகசுலபமாக இதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது உள்ளது இது Windows, Linux, Mac OS X Solaris போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன் வாய்ந்ததாகும். இது நிழற்படங்களையும் உருவபடங்களையும் ஒலிஒளிபடங்களையும் ஒலிஒளிபடங்களாக உருமாற்றிடும் திறன்மிக்கது.மேலும் எந்த வகையான படப்பிடிப்பு சாதனங்களின் மூலம் எடுக்கபடும் படங்களையும் home cinema systems, smart phones , tablets ஆகியவற்றில் காணும் வகையில் இது உருமாற்றிடும் திறன்வாய்ந்தது.

அதுமட்டுமின்றி இது ஏறத்தாழ Windows Live Movie Maker என்பது போன்றே செயல்படுகின்றது . இதிலுள்ள Project என்ற தாவியின் திரையிலுள்ள add files. projects, titles , edit ஆகிய வாய்ப்புகளின் வாயிலாக ஒரு ஒலிஒளிபடத்தை காட்சியை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்து பதிப்பித்தல் செய்யலாம். அதன்பின் Render Video என்ற தாவியின் திரையிலுள்ள smart phones (Smart Phone, Apple, Nokia ,போன்ற கையடக்க சாதனங்கள்), Web (HTML , SWFஆகியவடிவமைப்பில் ,அல்லது DailyMotion , YouTube ஆகிய இணையதளங்களில் ), Multimedia Systems, gaming consoles, ADSL Box , media players ஆகிய வாய்ப்புகளின் மூலம் நாம் விரும்பும் வடிவமைப்பில் இதன் வெளியீடு அமையுமாறு செய்யமுடியும். இந்த திறமூல மென்பொருள் பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ffdiaporama.tuxfamily.org/?page_id=178 என்ற இணைய பக்கத்திற்கு செல்க..

ச.குப்பன் kuppansarkarai641@gmail.com

www.skopenoffic.blogspot.in, www.vikupficwa.wordpress.com ஆகிய வலைபூக்களுக்கு சென்று தங்களின் மேலான கருத்துகளை வழங்கிடுக.

இதழ் 23 நவம்பர் 2013

[wpfilebase tag=file id=43/]

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: