கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

“Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது.

இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது.

தானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இந்த மென்பொருளானது மிகவும் உதவியாக இருக்கும், மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க உதவும்.

“Qshutdown” ஆனது EasyShutdown என்ற மென்பொருளோடு ஒத்த செயல்பாடு கொண்டதாக உள்ளது. இருப்பினும் இந்த மென்பொருளானது தனிப்பயன் தேதி தேர்வு(Custom Date Selection), போன்ற மேம்பட்ட விருப்பங்களையும் வழங்குகிறது.

இந்த மென்பொருளானது உபுண்டு சார்ந்த இயங்குதளங்களான Kubuntuமற்றும் Xubuntuபோன்ற இயங்குதளங்களில் இயங்குகின்றது.

இந்த மென்பொருளை உருவாக்கியவரின் கணக்குப்படி இது UNIX மற்றும் FreeBSD போன்ற இயங்குதளங்களிலும் வேலை செய்யலாம், ஆனால் இதுவரை சோதனை செய்யப்படவில்லை.

நீங்கள் பின்வரும் PPA பயன்படுத்தி qshutdownநிறுவ முடியும்:

sudo add-apt-repository ppa:hakaishi/qshutdown
sudo apt-get update
sudo apt-get install qshutdown

 

இந்த மென்பொருளை நிறுவிய உடன் qshutdown’ஐ துவக்கவும். துவக்கிய பின்பு எந்த செயலை செய்ய வேண்டும் என்று தேர்வுசெய்யவும் (பணிநிறுத்தம், இடைநிறுத்தம் அல்லது உறக்கம்). செயலை தேர்ந்தெடுத்தபின்பு காலநேரத்தை தேர்வுசெய்ய வேண்டும். (எடுத்துக்காட்டாக: 3 நிமிடம்). Coundownதொடங்க OKபொத்தானை சொடுக்கவும். அல்லது செயலை உடனடியாக இயக்கNow பொத்தானை சொடுக்கவும்.

 

 

ஒருவேளை நீங்கள் நேரத்தை மாற்றியமைக்க விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் app-indicator பட்டியில் இருந்து மென்பொருளை தொடங்கி மென்பொருளில் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும்.

நீங்கள் உங்களுக்கு வேண்டிய செயல்பாட்டை பின்னர் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நினைத்தால் இந்தமென்பொருளை நீங்கள் சிறிதாக்கி app-indicator பட்டியிலும் வைத்துக் கொள்ளலாம்.

 

 

விருப்பம் (preferences) மெனுவிலிருந்து நீங்கள் எழுத்துருஅளவு, அதிகபட்சகோப்பு அளவு, தன்னியக்கதொடக்கம் (Autostart), எச்சரிக்கைகளை செயல்படுத்துதல் போன்ற செயல்களை மாற்றியமைக்க முடியும்.

 

நீங்கள் உங்கள் உபுண்டுபதிப்பிற்கானqshutdownமென்பொருளை Launchpad ல்இருந்தும்பதிவிறக்கமுடியும்.

Download qshutdown

launchpad.net/~hakaishi/+archive/qshutdown

மூலம் www.addictivetips.com/ubuntu-linux-tips/schedule-system-shutdown-reboot-hibernate-in-ubuntu-with-qshutdown/

 

பிரவீன்  praveen s <praveen9482@gmail.com>

 

இதழ் 23 நவம்பர் 2013

 

[wpfilebase tag=file id=43/]

 

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: