avidemux என்பது ஒரு எளிய கானொளி காட்சி பதிப்பாளர் ஆகும், இது கானொளி காட்சிகளைஎளிதாக வெட்டுதல், வடிகட்டுதல் , குறியாக்கம் செய்தல் ஆகிய பணிகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது AVI, DVD ஆகியவற்றிற்கு இணக்கமான MPEG கோப்புகளையும், MP4 , ASF உள்ளிட்ட பல்வேறுவகையான கோப்புகளையும் ஆதரிக்கின்றது. இதன்வாயிலாக செயல்திட்டங்கள், பணி வரிசை , சக்திவாய்ந்த உரைநிரல் திறன்களைப் பயன்படுத்தி நம்முடைய பணிகளை தானியக்கமாக்கலாம்.
இது குனு GPL உரிமத்தின் கீழ் பொதுமக்களின்பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது. இந்த செயல்திட்டம் புதிதாக எழுதப்பட்டது, ஆனால் மற்றவர்களிடமிருந்தும் செயல் திட்டங்களில் இருந்தும் குறிமுறைவரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது பல்நோக்கு கானொளிகாட்சி திருத்தம், செயலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டணமற்ற கட்டற்ற நிரலாக்கமாகும், இது கிட்டத்தட்ட அறியப்பட்ட அனைத்து இயக்க முறைமைகளிலும் கணினியின் தளங்களிலும் பயன்படுத்திகொள்ளலாம். www.avidemux.org/admWiki/doku.php?id=build:doctop எனும் முகவரியுடைய இதனுடைய வலைத்தளமானது நிரலைப் பதிவிறக்குதல், தொகுத்தல், கட்டமைத்தல், பயன்படுத்துதல் ஆகியன பற்றிய ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ளது.
இது கானொளிகாட்சிசெயலாக்க பணிகளுக்கான ஒரு எளிய கருவியாகும். இதனுடைய திறவுகோள் சொல்( keyword) எளிதானது: இது காலவரிசை, பல்வழிபாதை திருத்தம்செய்தல் போன்ற கருவிகள் எதையும் கானொளிகாட்சிகளை திருத்தம் செய்வதற்காக வழங்காது, பல்வேறு மூலங்களிலிருந்து ஒலி ,கானொளி தொகுப்புகளை சுதந்திரமாக நகர்த்தவோ அல்லது பிரிக்கவோ முடியாது. இருப்பினும், இது அடிப்படை செய்திகளை மிகவும் நேரடியான வழியில் செய்ய அனுமதிக்கிறது.
முதன்மை கருவிப்பட்டியில் (Ctrl + O) என்றவாறு பொத்தான்களை பயன்படுத்தி கானொளிகாட்சி கோப்பைத் திறந்து பின்வரும் மூன்று அடிப்படை செயல்களை செய்யலாம்:
1. வெட்டுதல்(Cutting)
ஏன்?: எடுத்துக்காட்டாக, தொலைகாட்சிபதிவிலிருந்து விளம்பரங்களை வெட்டி நீக்கம் செய்வதற்காக அல்லது நாம் விரும்பும் கானொளிகாட்சியின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே சேமிப்பதற்காக.
எவ்வாறு?: கானொளிகாட்சியின் ஒரு பகுதியை A குறி யீடு, Bகுறியீடு ஆகிய பொத்தான்களைக் குறித்திடுக, அந்த பகுதியை நீக்க, நகலெடுக்க, ஒட்டிட அல்லது சேமிக்க கானொளிகாட்சியை மறு குறியீடாக்கம் செய்யவில்லை என்றால் (அதாவது, குறியாக்கி நகலெடுக்க அமைக்கப்பட்டிருந்தால்), எல்லா பிரிவுகளும் முதன்மை சட்டங்களுடன் துவங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்க, அல்லது இதன் விளைவாக வரும் கானொளிகாட்சி வெட்டுகின்ற புள்ளிகளில் தனித்தனியாக பிரிக்கப்படும்.
2. குறியாக்கம்செய்தல்(Encoding)
ஏன்?: வன்பொருள் அல்லது மென்பொருள் இயக்கிகள் புரிந்துகொள்ளும் கானொளி காட்சியை வேறு கானொளிகாட்சி வடிவத்திற்கு மாற்ற விரும்பலாம், அல்லது இணையத்தில் காப்பகப்படுத்த அல்லது வெளியிடுவதற்காக கானொளிகாட்சியை சிறிய அளவிற்கு சுருக்கவும் விரும்புலாம்.
எவ்வாறு?: இதில் குறியாக்கம் என்பது கானொளிகாட்சி சுருக்கத்தை செய்யும் குறியாக்கியைத் தேர்ந்தெடுப்பதாகும். அதாவது, இடதுபுறத்தில் உள்ள கீழிறங்கு( drop-down) பட்டியலை நகலெடுக்க முடியாது.
3. வடிகட்டுதல்(Filtering)
ஏன்?: உருவப்படத்தில் வடிகட்டுதல் அல்லது மறுஅளவிடுதல் போன்ற அடிப்படை வடிப்பான்கள் ஆனவை பல்வேறு வடிவமைப்பு மாற்றங்களுக்கு கைகொடுக்கின்றன. உருவப்படத்தில் உரையாடல் வரிகள், வண்ண திருத்தம் போன்றவற்றைச் சேர்க்க பிற வடிப்பான்கள் பயன்படுத்தப்படலாம்.
எவ்வாறு?: வடிப்பான்களுக்கு மறு குறியீடு தேவைப்படுகிறது. எனவே முதலில் ஒரு குறியாக்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் வடிப்பான்களின் பொத்தானைப் பயன்படுத்தி வடிப்பான்களைச் சேர்க்கலாம். வெட்டுதல், குறியாக்கிகளை அல்லது வடிப்பான்களை அமைத்தல் ஆகிய பணிகள்முடிந்ததும், இதன் விளைவாக வரும் கானொளிகாட்சிகோப்பினை Ctrl + Sஆகிய பொத்தான்களை பயன்படுத்தி சேமித்திடுக. கூடுதலாக, கானொளிகாட்சியில் இருந்து ஒலிப்பாதையை சேமிப்பது அல்லது மாற்றுவது, பல்வேறு கானொளி காட்சிகோப்புகளில் சேர்ப்பது அல்லது கானொளிகாட்சியின் சிறுதிரைபடபிடிப்பைச் சேமிப்பது போன்ற ஒருசில சிறிய வசதிகள் இதில்உள்ளன.
குறியாக்கசெயல் அல்லது குறியாக்கமற்றதாக செய்தல்
இது நகல் முறை , குறியாக்க முறை.ஆகிய இரண்டு அடிப்படை முறைகளில் செயல்படுகிறது:
நகல் பயன்முறை(Copy mode)
ஒலி அல்லது கானொளி குறியாக்கி நகலெடுத்திடுமாறு அமைக்கப்பட்டால், எந்த மறு குறியீட்டு முறையும் நடைபெறாது, மேலும் உள்ளீட்டுக் கோப்பிலிருந்து வரும் ஒலிஅல்லதுகானொளி பாதை விளைவாக வரும் கோப்பில் நகலெடுக்கப்படும். இதன் பொருள் இது மிக வேகமானது (வழக்கமாக அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள்), மேலும்இதில் தரவுகளின் இழப்பு எதுவும்இல்லை.
எப்போது நகல் பயன்முறையைப் பயன்படுத்திடுவது?:
1. வெளியீட்டு வடிவமைப்பை மாற்றாமல், கானொளிகாட்சியிலிருந்து ஒருசிலபகுதிகளை வெட்டலாம்
2. பல்வேறு கோப்புகளைஒன்றாகச் சேர்க்கலாம் ( File→Append என்றவாறுகட்டளைகளை செயல்படுத்திடுவது அல்லது Avidemux வழங்கும்the automatic appending என்பதை பயன்படுத்தி) – தெளிவுதிறன் (அகலம், உயரம்),கானொளிகாட்சிவடிவம், ஒலி வடிவம், ஒலி மாதிரி விகிதம் எல்லா கோப்புகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்தால், நகல் பயன் முறையைப் பயன்படுத்தலாம்
3. நிலையான ஒலி / கானொளிகாட்சியை சரிசெய்ய விரும்பினால் (audio பிரிவில் Shift எனும் வாய்ப்பை பயன்படுத்திகொள்க)
4. கானொளி காட்சியை வேறு கொள்கலனில் சேமிப்பது போன்ற தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய விரும்பினால் செய்துகொள்ளலாம்
குறியீட்டு முறை(Encoding mode)
ஒலி அல்லது கானொளிகாட்சி குறியாக்கியைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒலி அல்லது கானொளிகாட்சிகள் மீண்டும் குறியிடப்படும். சுருக்கமானது ஏதேனும் வீணாகி இருந்தால் (பெரும்பாலான குறியாக்கி களுடன் இது உள்ளது), இது தரத்தின் இழப்பைக் குறிக்கிறது. நகலெடுப்பதை விட குறியாக்கம் மிகவும் மெதுவாக செயல்படக்கூடியது. கணினியின் வேகத்தைப் பொறுத்து, அந்தபணியினை முடிக்க பலமணிகூடநேரம் ஆகலாம். குறியீட்டு பயன்முறையைப் பயன்படுத்தும்போது:
1 ஒலி அல்லது கானொளிகாட்சி வடிவமைப்பு மாற்றத்தை செய்ய விரும்பலாம்
2. கோப்பை ஒரு சிறிய அளவுக்கு சுருக்க விரும்பலாம் (தரத்தின் இழப்பில்)
3. முதன்மை சட்டங்களில் செய்ய முடியாத துல்லியமான வெட்டுதலை செய்யலாம்
4. வடிப்பான்களைப் பயன்படுத்த விரும்பினால் ( ஒலி அல்லது கானொளிகாட்சி மறு குறியீடாக்காமல் வடிகட்ட முடியாது)
5. மாறுபட்ட பண்புகளுடன் பல கோப்புகளில் சேர்க்க விரும்பினால் (வெவ்வேறு வடிவங்கள், வெவ்வேறு தெளிவுதிறன் போன்றவை)
இதில் அடிக்கடி பயன்படுத்தப்படும் அடிப்படை சொற்கள்
Avidemux என்பது நமக்காக தானாகவே செயல்களைச் செய்யாத ஒரு கருவியாகும், மேலும் அதைச் செய்யும்படி நாம் நேரடியாக கூறிடும் படிமுறைகளை மட்டுமே செயல்படுத்துகிறது, நாம் என்ன செய்கின்றோம், ஏன் செய்கின்றோம் என்பதை மட்டும் உண்மையில் புரிந்து கொள்க. Avidemux ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு, பல்லூடக கோப்புகளின் பின்வருமாறான அடிப்படை பண்புகளையும் அதற்கான அடிப்படை சொற்களையும் அறிந்து கொள்க:
கொள்கலன் வடிவம்(Container format): ஒலி அல்லது கானொளிகாட்சியின்தடங்கள் ஒரே கோப்பில், ஒரு கொள்கலனில் சேமிக்கப்படுகின்றன. கொள்கலன் வடிவம் ஒலி அல்லது கானொளிகாட்சி தரத்தை பாதிக்காது, இது ஒரு கோப்பில் ஒலி அல்லது கானொளிகாட்சி சேமிப்பதற்கான ஒரு வழி மட்டுமே. Avidemux இல், இடதுபுறத்தில் உள்ள (வெளியீடு) வடிவமைப்பு பிரிவில் கொள்கலன் வடிவம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
குறிப்பு: நாம் சேமிக்கும் கோப்பிற்கு எப்போதும் பொருத்தமான கொள்கலன் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்திடுக! . AVI கொள்கலன் வடிவமைப்பிற்கான .avi அல்லது Matroska கொள்கலன் வடிவமைப்பிற்கு .mkv போன்ற கானொளிகாட்சிகளை சேமிக்கும்போது கோப்பின் பெயருக்கு பொருத்தமான நீட்டிப்பையும் சேர்க்க வேண்டும். Avidemuxஇன் பதிப்பு 2.5 அல்லது அதற்கு மேற்பட்டது நீட்டிப்புகளை தானாக சேர்க்காது!
கானொளி காட்சி வடிவமைப்பு(Video format): இதுதான்கானொளிகாட்சி தாரையாக்க கோப்பில் குறியாக்கம் செய்யப்படுவதாகும் , பொதுவாக சுருக்கப்பட்ட வடிவத்தில். நவீன சுருக்க வடிவமைப்புகள் பழையவற்றை விட சிறந்த தரம் / அளவு விகிதத்தை வழங்குகின்றது. மேலும் கானொளிகாட்சி வடிவங்களில் H.264, MPEG-4 பகுதி 2 அல்லது MPEG-2 பகுதி 2 ஆகியவை அடங்கும்.
ஒலி வடிவமைப்பு(Audio format): கோப்பில் ஒலித்தாரையை சேமிக்கப்படும் முறையானது. பொதுவான ஒலிவடிவமைப்புகளில் AAC, MP3, MP2, Vorbis அல்லது PCM (சுருக்கப்படாத) ஆகியவை அடங்கும்.
குறிப்பு: ஒலி அல்லது கானொளிகாட்சி குறிமுறைதொழிலநுட்பங்களுடன் ஒலி அல்லது கானொளிகாட்சி வடிவமைப்புகளை சேர்த்து குழப்பிகொள்ள வேண்டாம். குறிமுறைதொழில்நுட்பங்ககள் குறியாக்கம் , மறைகுறியாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் கருவிகள், அதே நேரத்தில் வடிவமைப்புகளின் தரவை குறியாக்கம் செய்யும் முறைகள் ஆகியவைகளும் அடங்கும்.
குறியாக்கி(Encoder): இது ஒலி அல்லது கானொளிகாட்சி தாரையை நாம் விரும்பிய வடிவத்தில் குறியாக்கம் செய்திட பயன்படும் கருவியாகும். ஒருசில குறியாக்கிகள் மற்றவைகளை விட சிறந்தவை – ஒரே வடிவமைப்பிற்கு பல குறியாக்கிகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று ஒரே அளவிலான உயர் தரத்தை வழங்கக்கூடும். Avidemux இல், ஒலி அல்லது கானொளிகாட்சி பிரிவுகளில் மென்பொருள் குறியாக்கியைத் தேர்ந்தெடுக்கலாம். நிச்சயமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குறியாக்கி வெளியீட்டு வடிவமைப்பையும் குறிக்கிறது.
மறைகுறியாக்கி(Decoder): உள்ளீட்டு ஒலி அல்லது கானொளிகாட்சி தாரையாக்கி மறைகுறியாக்குதல் செய்ய பயன்படுத்தப்படும் கருவியானது. Avidemux இல் உள்ளமைக்கப்பட்ட மறைகுறியாக்கி களைப் பயன்படுத்துகிறது. ஒலி அல்லது கானொளிகாட்சி வடிவமைப்பிற்கு பொருத்தமான மறைகுறியாக்கி இல்லை என்றால், ஒலி அல்லது கானொளிகாட்சி இருக்காது என்ற செய்தியை மனதில் கொள்க.
எனவே, இவை அனைத்திற்கும் என்ன அர்த்தம்? இரண்டு பயன்பாட்டு நிகழ்வுகளை காண்போம்:
ஒரு கானொளிகாட்சியிலிருந்து தேவையற்ற பகுதிகளை இழக்க விரும்புகின்றோம், இழப்பு எதுவும் இல்லாமல் (நகல் பயன்முறையில்). மூல ஒலி அல்லது கானொளிகாட்சி வடிவமைப்பை தெரிந்து கொள்ளவிரும்புகின்றோம் எனில். தகவல் பொத்தானைப் பயன்படுத்தி கோப்பினை திறந்ததும் Avidemux கோப்பு பண்புகளைக் காண்பிக்க செய்ய முடியும். ஒலி அல்லது கானொளிகாட்சிவடிவமைப்பு சேர்க்கைக்கு பொருத்தமான ஒரு கொள்கலன் வடிவமைப்பை தேர்வு செய்கின்றோம் (பொதுவாக மூலக் கோப்பிற்குப் பயன்படுத்தப்படும் அதே கொள்கலன் வடிவம்), ஒலி அல்லது கானொளிகாட்சி குறியாக்கிகளை நகலெடுத்து விட்டு, திருத்தம் செய்து, இறுதியாக கோப்பைச் சேமித்திடுக.
H.264 கானொளிகாட்சி AAC ஒலியுடன் ஒரு Matroska (* .mkv) கோப்பு உள்ளது. விண்டோ, மேக் (கூடுதல் மென்பொருள் இல்லாமல்) அல்லது பல்வேறு வன்பொருள் சாதனங்களில் முன்னிருப்பாக Matroska கொள்கலன் வடிவம் ஆதரிக்கப்படவில்லை (எனவே இயக்க முடியாது), ஆனால் H.264 ,AAC இயக்கமுடியும் .இதன் பொருள் கோப்பை Avidemux இல் திறக்கலாம், வெளியீட்டு வடிவமைப்பை எம்பி 4 ஆக மாற்றலாம் (இது அந்த தளங்களில் இயல்பாக ஆதரிக்கப்படும் கொள்கலன் வடிவமாகும்), அதை நகல் பயன்முறையில் சேமிக்கலாம். ஒலி அல்லது கானொளிகாட்சி பாதைகள் தொடாமல் விடப்படும், எனவே இது விரைவாகவும் இழப்பற்றதாகவும் இருக்கும். மேலுறை, கொள்கலன் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். அந்த தளங்களில் ஆதரிக்கப்படும் அடிப்படை வசதிகளுடன் H.264 கானொளி குறியிடப்பட்டிருந்தால், கோப்புஆனது இப்போது அங்கு இயக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
DVB-Tபதிவிவாளர், DVD அல்லது பிற மூலங்களிலிருந்து ஒரு கானொளிகாட்சியை சேமித்துள்ளோம், மேலும் அதை மிகச் சிறிய வடிவத்தில் காப்பகப்படுத்த விரும்புகின்றோம். எனவே கோப்பைத் திறந்து ஒருசில திருத்தம் செய்த பிறகு, சிறந்த தரம் / அளவு விகிதத்துடன் கூடிய கானொளிகாட்சி குறியாக்கியைத் தேர்ந்தெடுத்திடுக, அதாவது x264, அதை உள்ளமைத்து, கானொளிகாட்சி வடிப்பான்களைச் சேர்த்திடுக, கானொளிகாட்சியை மேலும் சுருக்கக்கூடியதாக மாற்றவும், அளவை மாற்றவும், Matroska அல்லது MP4 ஐத் தேர்ந்தெடுத்திடுக கொள்கலன் வடிவமாக கோப்பை சேமித்திடுக. எந்தவொரு தர இழப்பையும் தவிர்க்க விரும்பினால், அசல் ஒலிப்பாதையை நகல் பயன்முறையில் சேமிக்கலாம், ஏனெனில் DVB-T அல்லது DVD இல் உள்ள ஒலி ஏற்கனவே சுருக்கப்பட்டிருக்கிறது மேலும் கானொளிகாட்சியைப் போல அதிக நினைவகத்தை எடுத்துகொள்ளாது.